ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கும் எமக்கும் தொடர்பில்லை: த.தே.கூட்டமைப்பு

454
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் வெற்று விண்ணப்பபடிவங்களை விநியோகித்த போது, கைது செய்யப்பட்டவருக்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சில ஊடகங்கள் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் மீது குற்றங்களை சுமத்தியுள்ளன.

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கு ஆழ்வார்பிள்ளை விஜயகுமார் என்பவரே வெற்று விண்ணப்ப படிவங்களை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த விஜயகுமார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லை என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் விசாரணைக்காக சாட்சியங்களை பெறுவதற்கு தாம் உதவியளிக்கவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட அனைவரும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் உரிய முறையில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுள்ளது.

 

SHARE