‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறதாம்….

380

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இந்தியத் திரையுலகை மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள படமாக ‘ஐ’ படம் இருந்து வருகிறது. வெறும் ஒரே ஒரு டீசரை மட்டுமே வெளியிட்டு இதுவரை சுமார் 80 லட்சத்திற்கும் மேல் யு டியுபில் பார்க்கப்பட்டு இந்தப் படம் சாதனை படைத்துள்ளது. அதே சமயம், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தைச் சுற்றியும் ஆச்சரியப்படும் விதத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே ‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறதாம். விஎஃஎக்ஸ், சிஜி ஆகிய வேலைகளை முழுவதுமாக இயக்குனர் ஷங்கர் கேட்பதைப் போல் முடிக்க இன்னும் நாட்கள் ஆகுமாம். இந்த மாதம் வெளியீடு இருக்காது என்தை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், படம் அடுத்த மாத இறுதியில் கூட வெளிவருமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் ‘ஐ’ படம் பொங்கலுக்கோ, அல்லது பொங்கலுக்குப் பிறகோதான் வரும் எனச் சொல்கிறார்கள்.

 

SHARE