ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு

360
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும் வகையில் அரச நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அரச இலத்திரனியல் நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு முதலில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட ஊடகங்களின் பணியாளர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பணமாக 75 ஆயிரம் ரூபாவும், பரிசு வவுச்சராக 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

தமது நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி தொடர்பான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் மறைமுக பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமென்று இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.அதனை ஊக்குவிக்கவே இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ்,முஸ்லிம் ஊழியர்கள் இந்தக் கொடுப்பனவு விடயத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE