முடிவுத் திகதியையும் மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படும் விதம் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதன்போது சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக இறுதி திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 30ம் திகதியுடன் அந்த திகதி முடிவடைந்தது.
எனினும் அந்த திகதியை தாண்டி காலதாமதமாக கிடைக்கும் சாட்சியங்களையும் நிராகரிக்கப் போவதில்லை என்று மனித உரிமைகள் குழு முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் விடுத்தவேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
வெளிப்படையாக இறுதித் திகதியை அறிவித்துவிட்டு அதனை நீடிக்கும் செயற்பாடானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.