இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்கும்

663

ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா க்ரேபேவ் அடுத்த மாதம் இலங்கைக்குள் நுழைகிறார் என ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் அரசபடைகள் இழைத்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை கடந்த மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது, நவீப்பிள்ளை தலைமையிலான மனித உரிமைப்பேரவையிடம் கையளிக்கப்பட்டதன் தொடர் நிகழ்வாகவே இந்த விஜயமும் அமைந்துள்ளது. பிரான்சுவா கிரேபேவ், புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் விவகாரங்களிற்கு பொறுப்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளராக பணியாற்றி வருகின்றார்.

இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்கும் நோக்கத்துடன், தீவிரமாக பணியாற்றி வரும் மனிதஉரிமைகள் பேரவை, முதற்கட்டமான நிலைமைகளை மதிப்பிட்டு, விசாரணைக்கான ஆரம்ப ஒழுங்குகளை செய்வதற்காகவே இலங்கை வருகின்றார். அடுத்த மாதம் 19ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையதன ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் மேற்கொண்டு, விசாரணைக்கான முதற்கட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அட்டவணைரீதியிலான தற்போதைய பணிகளைப்பார்க்கும்போது, இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள எவ்வாறான பொறிமுறை கையாளப்படப் போகின்றது என்பதை மனித உரிமைகளிற்காக ஆணையம் எதிர்வரும் மேமாத இறுதியில்த்தான் இலங்கைக்கு அறிவிக்கும் என தெரிகிறது

SHARE