பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.

537

பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்து கடவுள்களை அமேசான் நிறுவனம் அவமதித்துவிட்டதாக அங்குள்ள இந்துமத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்:-

“இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள். பல கோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல.

இந்த நிலையில், அமேசான் நிறுவனம் லெக்கிங்ஸ்களில் ஏற்கத்தகாத வகையில் இந்துக் கடவுள்களை சித்தரித்துள்ளது மன வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து மதத்தை பின்பற்றுவோரை மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

ஆகவே, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆடைகள் கொண்ட பட்டியலை உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த தவறுக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர்.

amezon.jpg

amezon1.jpg

amezon2.png

amezon3.jpg

amezon1 (1)

SHARE