விசாரணை நடத்தும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை: கோமின் தயாசிறி!!

873
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இருக்கும் அதிகாரங்கள் சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசியவாதியான சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சம்பந்தமாகவே அல்லது வேறு ஒரு நாடு சம்பந்தமாகவே விசாரணைகளை நடத்தும் உரிமை ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கிடையாது.

அப்படியான அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்படவில்லை. அமெரிக்கா இந்த அதிகாரத்தை அவருக்கு வழங்க முயற்சித்து வருகிறது.

இதனால் அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் யோசனை ஒன்றை கொண்டு அதனை வெற்றிபெற செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், ஆணையாளரின் அதிகாரங்கள் தொடர்பில் யோசனையை நிறைவேற்றிக் கொண்டால், அமெரிக்க பிரேரணையினால் ஏற்படப் போகும் தாக்கங்களை குறைக்க முடியும்.

நவநீதம்பிள்ளையை மனித உரிமை பேரவையின் ஆணையாளராக நியமித்துள்ளதே பிரச்சினைக்குரிய விடயம். அவர் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர், அப்படியான ஒருவரை அந்த பதவிக்கு நியமித்துள்ளமை நியாயமானதல்ல என்றார்.

 

SHARE