ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய சச்சின்!

387
 

தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின், இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட தருணம் எப்படிப்பட்டது என்பதை வர்ணித்துள்ளார்.

இதுபற்றி அவர் சுயசரிதையில் கூறுகையில், சியால்கோட் டெஸ்ட் போட்டியில், வக்கார் பந்து வீச வந்த போது நான் ஒரு ஓட்டம் எடுத்திருந்தேன். வக்கார் ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீசினார்.

நான் பந்தின் பவுன்சை தவறாகக் கணித்தேன். நான் எதிர்பார்த்ததை விட 6 அங்குலம் அதிகமாக பந்து எழும்பியது. அது ஹெல்மெட்டின் முனையில் பட்டு என் மூக்கைப் பதம் பார்த்தது.

அதனால் என்னுடைய பார்வை மங்கத் தொடங்கியது. எனது தலை கனக்கத் தொடங்கியது. அதன் பிறகுதான் கவனித்தேன் மூக்கிலிருந்து ரத்தம் சட்டையில் வழிந்திருந்தது.

அடிபட்டதிலிருந்து மெதுவே மீள நினைத்த போது ஜாவேத் மியாண்டட் கூறிய வார்த்தை என்னை ஆச்சரியப்படுத்தியது, “நீ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், உன் மூக்கு உடைந்து விட்டது” என்றார்.

எனது இந்த நிலையில் என்னைப் பற்றி பார்வையாளர்கள் வைத்திருந்த பேனர் என்னை மேலும் அசவுகரியப்படுத்தியது. “குழந்தை! நீ வீட்டுக்கு போய் பால் குடி” என்று அந்த பேனரில் எழுதியிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE