வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள்

425
unnamed (3)
நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் 2014-10-30ம் திகதியன்று முள்ளிவளையில் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஊடாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாக வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வின் முதற்கட்டம் கடந்த 2014-10-30ம் திகதி முள்ளியவளையில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
கணவனை இழந்து வறுமையால் வாடும் நான்கு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 25000 ரூபா பெறுமாதியான வாழ்வாதார உதவிகளை கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.இரத்தினசபாபதி மற்றும் கரைதுறைப்பற்று கால்நடை வைத்தியர் S.நிகேதினி அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டிருந்தது.
இரு குடும்பங்களுக்கு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகளையும் மற்றைய இரு குடும்பங்களுக்கு ஆடு வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கிய ரவிகரன்இ இதனூடாக குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்குவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

unnamed (7)

unnamed (4)

SHARE