மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும்.
இருப்பினும் இந்த “மலையகத் தமிழர்” எனும் பதத்திற்குள் தமிழரல்லாத தெலுங்கர், மலையாளியினரும் அடங்குவர். மலையகப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு தமிழரே பெரும்பான்மையாக இருப்பதனால் அவர்களுடன் ஒன்றி வாழ்ந்த தெலுங்கரும் மலையாளிகளும் தமிழ் பேசுவோராக மாறிவிட்டனர்.
ஆங்கிலேயர் இவர்களை ஒரு அடிமை போன்றநிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னர் தொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே உள்ளது. இந்த பின்னடைவு, விதிவிலக்காக ஒருசிலரை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களும் இழந்தவர்களாகிப் போயினர்.
இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும், அப்பிரதேசங்கள் சார்ந்து ஏனைய தொழில் நிலைகளில் உள்ளோரும், அவர் தம் வம்சாவழியினரும் “மலையகத் தமிழர்” என்றே அழைக்கப்பட்டப் போதும். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் “இந்தியத் தமிழர்” என்றும் “இந்திய வம்சாவளித் தமிழர்” எனும் பகுப்புக்குள்ளும் உள்ளடங்குவர். இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில், அடையாள அட்டை வழங்கல் முறையில், மற்றும் ஏனைய பதிவுகளில் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது
1826 ஆம் ஆண்டு பதின்நான்கு குடும்பாதினர் இந்தியாவிலிருந்து இங்கு அடிமை தொழிலாளர்களாக இறக்குமதி செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அடிமை தொழிலாளர் இறக்குமதி படலம் ஆரம்பமானது தென் இந்தியாவிலிருந்து ஆசை வார்த்தைகள் கூறி கொத்து கொத்தாக பல குடும்பங்கள் அழைத்து வரப்பட்டன . இதில் இன்ப வாழ்வை நம்பி வந்த எத்தனையோ பேர் இடையில் உயிரிழந்துமுள்ளனர். பலர் கடலுக்கும் இரையாகினர். இதில் பலருடன் 1864 ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய ஆதிலஷ்மி கப்பலையும் மறக்க முடியாது.
இவ்வாறு இங்கு அழைத்து வரப்பட்டவர்கள் 150 வருடங்களுக்கு மேலாக இன்னும் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்கின்றனர். இம்மக்களின் சந்ததிகள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்பது ஒன்றா, இரண்டா எண்ணிக்கையில் இல்லை
இலங்கையின் அந்நிய வருவாயில்பெருந்தொகையை ஈட்டித்தரும் இம்மக்கள், இன்றும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை, 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த குடியிருப்பு, ஏனைய சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுகையில், போசாக்கற்ற உணவும் தரமற்ற குடியிருப்புகளும், குறைந்த நாள்கூலி, உத்தரவாதமற்ற வாழ்க்கை , . கல்வியில் பாகுபாடு, . அரசு வேலை வாய்ப்பில் பாகுபாடு, பெருந்தோட்டங்கள் துண்டாடல், பால்வாடி(குழந்தை பராமாரிப்பு) நிலையங்களில் தமிழ்க் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தமிழ்த் தெரியாத சிங்களப் பணியாளர்கள் நியமனம் , தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற முடியாத நிலை, பலவந்தக் கருத்தடை, சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ வசதியின்மை, . நில உரிமை மறுப்பு, கொத்தடிமைத் தொழில்முறை, தோட்டப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் உருவாக மறுப்பது, படித்த இளைஞர்களையும் தோட்டத் தொழில் செய்ய நிர்பந்திக்கும் அவலம், பண்பாட்டை இழக்கும் நிலை., பெருந்தோட்டங்கள் பராமரிப்பின்மை, மறுக்கப்பட்டுவரும் சனநாயக உரிமைகள் என பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
(எம்மில் பல தோட்டங்களில் வாழ்ந்த புத்திஜீவிகள் தாங்கள் வசதி நிலையை அடைந்ததும் அதே சமூகத்தை கேளியாக பார்ப்பவர்களும் உள்ளனர், அது இவர்களின் தவறு என்று சுட்டிக்காட்டுபவர்களும் அநேகர் உண்டு இம்மக்கள் வவாழ்வை மாற்ற நினைக்கும், உதவும் கூட்டம் மிகச் சிலரே உள்ளனர் அதுதான் மலையக சமூகம் விழித்தெழ முடியாமைக்கும் காரணம்)
ஆங்கிலேயர்களால் வஞ்சகமாக அழைத்து வரப்பட்டு இன்றும் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட நிலையில் வாழும் இந்திய தமிழர்களின் சில அடயாளங்கள் இங்கே படங்களாக …….
ஆங்கிலேயர்களால் மட்டுமல்ல, தொடர்ந்து இலங்கையிலுள்ள அதிகார வர்க்கத்தினரால், இலங்கை தமிலர்க்ளால் கூட பல சந்தர்பங்களில் ஏமாற்றப்பட்ட , இந்தியாவிலுள்ள சொந்த உறவான தமிழ் நாட்டினால் கூட இன்னும் அலையலாம் காண முடியாமல் வாழும் இம்மக்கள் எழும் நாள் …….
எல்லாவற்றிலும் மோசமாக சுயலாப அரசியல் கட்சிகள் தொழிற்சங்க முதலைகளால்
குடும்பம் குடும்பமாக கூட்டி வரப்பட்டு ….

இன்றும் முன்னேற்றமின்றி அதே நிலையில் காணப்படும் பல குடும்பங்கள் உள்ளன.

- 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியுரிமை பறிப்பு.
- 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குரிமை பறிப்பு.
- இந்திய வம்சாவழி மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவது
- கச்சதீவை இலங்கைக்கு விட்டுகொடுப்பது.
“சிறிமாவோ கச்சத்தீவை வென்றார்” என்று “தினமின” அரசாங்க நாளிதழின் வெளியான தலைப்புச் செய்தி. |
இலங்கையில் பிறந்தும் பலர் எந்த குடியுரிமையும் பெறாதவர்கள். பின் தங்கிய பொருளாதார நிலை. குடியுரிமை இல்லாதவர்கள் என்பதால் வாக்குரிமையோ அரசியல் உரிமையோ கூட கிடையாதவர்கள். அவ்வப்போது நடக்கும்இனவாத தாக்குதல்களால் ஏற்பட்டிருந்த பாதுகாப்பின்மை, ஏனைய இலங்கையர்களுக்கு சமமாக கல்வி வாய்ப்பை பெறமுடியாத போக்கு, உரிய சுகாதார வசதிகளை பெறமுடியாத நிலை போன்ற காரணிகளால் விரக்தியுற்று இந்தியாவுக்கே சென்று விடலாம் என்கிற மன நிலையை வளர்த்துக் கொண்டவர்கள் திரும்பி விடலாம் என்கிற முடிவுக்கு வந்தவர்களும் இருந்தனர்.
தொண்டமானுடன் இந்திராவும் இந்தியத் தூதுவரும் |
“இலங்கையின் பொருளாதார பிரச்சினையை தணிப்பதற்காகவே இந்திய வம்சாவழித் தொழிலாளர்களை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதித்தோம்”
இந்தியப் பிரதமர் நேரு – இலங்கைப் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க |
“இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்னையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்னை. நம்முடைய பிரச்னை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்னையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.”
சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மலையகத் தமிழர்களின் அரசியல் பலத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் பலவீனப்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடுகடத்தலினால் ஒரு தேசிய இனமாக உருவெடுத்து வந்த மக்களின் தொகையை செயற்கையாக அழித்ததன மூலம் இனவாதம் வெற்றி பெற்றது.
இந்த இழப்பு பல்வேறு வழிகளிலும் தேசிய இனத்தின் ஆதாரமாக உள்ள நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றைச் சிதைக்கக் காரணமாக அமைந்தது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் இலகுவாக அமைக்கப்படுவதையும், பெருந்தோட்ட நிலங்கள் காடாக கைவிடப்படுவதையும், சிறுதோட்டக்காரர்களுக்கு நிலங்கள் பிரித்துகொடுப்பதையும் இந்த நாடுகடத்தல் மேலும் இலகுவாக்கியது.