வவுனியா பொருளாதார மத்திய மையத்தில் தந்திர விளையாட்டு! கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே! என்று மக்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதன் உண்மைத் தன்மை என்ன?
தமிழ் மக்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் வவுனியாவில் ஒரு பொருளாதார மத்தி மையம் அமையப்பெறவிருந்தது. இந்தப் பொருளாதார மத்திய மையத்திற்கு ஆதரவாக ஒரு சில அரசியல் வாதிகளும், எதிர்ப்பாக மற்றும் சில அரசியல் வாதிகளும் செயற்பட்டு வந்தனர். இதில் குறிப்பாக வடமாகாணசபை அமைச்சும்இ தென்னிலங்கை அமைச்சும் இதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலையிட்டும் கூட கடசியில் தாண்டிக்குளத்திலும் பொருளாதார மத்திய மையம் அமையப்பெறவில்லை. ஓமந்தையிலும் அமையப்பெறவில்லை. இவ் பொருளாதார மத்திய மையத்திற்கு மூன்று தரப்பினர் மும்முணை மோதல்களில் ஈடுபட்டனர்.
தாண்டிக்குளத்தில் தான் இவ் பொருளாதார மத்திய மையம் அமையப்பெறவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் ஒரு பக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தையும், மறுபக்கத்தில் ஓமந்தையில் பொருளாதார மத்திய மையம் அமையவேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். ஆனால் இவ் பொருளாதார மத்திய மையம் வவுனியாவில் ஏதாவொரு ஒரு இடத்தில் அமையப்பெறவேண்டுமென்று அடித்தளமிட்டவர் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களே! அதனை அவருடனான நேர்காணலின் போது எமக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இன்று அதுவல்ல முக்கிய பிரச்சனை. வன்னி அரசியல்த் தலைமைகளினால் இப் பொருளாதார மத்திய மையம் அமைக்கப்படவேண்டும் என்று ஒருமித்த முடிவை எடுக்காமல் போனமை தான். வடமாகாணசபையில் ஓமந்தையில் தான் அமைக்கப்பெறவேண்டுமென்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கு ஹரிசன் தலமையிலான குழு இடமளிக்கவில்லை. கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் இந்த முடிவை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதுவும் வடமாகாணசபையில் வாக்கெடுப்பில் விடப்பட்டது. அதுவும் ஓமந்தையில் தான் அமைக்கவேண்டும் என்று வாக்கு எடுக்கப்பட்டது.
அப்படியானால் இதற்குக் கிடைத்த பதில் பொருளாதார மத்திய மையம் ஓமந்தை அல்லது தாண்டிக்குளம் பகுதியில் அமைக்கப்படமாட்டாது என்பது. இப்பொருளாதார மத்திய மையம் அமைக்கப்பெறுவதற்கு தமிழ் அரசியல் வாதிகளும்இ தமிழ் மக்களும் ஒரு குடையின் கீழ் நின்றிருக்க வேண்டும். இவர்களின் எதிர்ப்பு ஊர்வலத்தாலும் உண்ணாவிரதத்தாலும் கடசியில் நடந்தது என்ன?
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சிவசக்தி ஆனந்தனும், தான் பிடித்த முயலுக்கு இரண்டு கால் என்று சிவமோகனும், தான் பிடித்த முயலுக்கு நான்கு கால் என்று சத்தியலிங்கமும் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டின் காரணமாகவே இன்று இரண்டும் கெட்ட நிலையென்று மக்கள் திட்டித் தீர்க்கின்றனர். ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகளை வடமாகாணசபையும்இ பாராளுமன்ற உறுப்பினர்களும் எடுத்துக் கொண்ட எடுகோள்களே இதற்கு காரணமாகும். வன்னிப் பிரதேசத்தில் இருக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், திருமதி.சிறிஸ்கந்தராசா, மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, தியாகராசா, ஜீ.ரி.லிங்கநாதன், அமரத்துவமடைந்த அன்ரனி ஜெகநாதன், பவன், குனசீலன், அமைச்சர்டெனிஸ்வரன் இன்னும் பல மாகாணசபை உறுப்பினர்கள் வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள அரசியல் வாதிகளும் மூத்த உறுப்பினர்களும் ஏன் ஒருமித்த ஒரு முடிவை எடுக்கமுடியாமல் போனது. தனிப்பட்ட தமது அரசியலை வளர்த்துக் கொள்ளும் நோக்கின் செயற்பட்டதன் காரணமே.. தமது சுயநல அரசியலுக்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக் கூடாது. இத்தகைய செயற்பாட்டினையே வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பில் செயற்படுத்தியிருந்தனர். ஒரு கட்டத்தில் பொருளாதார மத்திய மையம் தொடர்பாக கடும் போக்கைக் கொண்டிருந்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் என்னவென்றாலும் நடக்கட்டும் மக்கள் எதை விரும்புகின்றார்களோ வவுனியா பிரதேசத்தில் இந்த பொருளாதார மத்திய மையம் அமைந்தால் சரி என்ற முடிவுக்கு வந்தார்
இதற்கிடையில் சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான குழு ஓமந்தையில் சகுவரையிலான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு பின்னர் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தினை அமைச்சர் சத்தியலிங்கமும், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் முறுகல் நிலையினைக் கலைந்து இருவரும் கைகோர்த்து உண்ணாவிரத நாடகத்தை முடித்து வைத்தனர். சிவமோகனும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களும் என்ன நடக்கின்றது என்று தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கடசியில் ஒன்றும் நடைந்த பாடு இல்லை.
கடந்த வாரம் வவுனியா விருத்தினர் விடுதியொன்றில் மாகாணசபை உறுப்பினர்களும்இ வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்வது எப்படி ஒற்றுமையுடன் செயற்படுவது என்ற கருத்துக்களை அங்கு கூறியிருந்தனர். கடசியில் அது ஒரு சண்டைக் கலமாக மாறியது. அபிவிருத்தி பற்றி சிந்திக்க வந்த அத்தனை அரசியல் வாதிகளும் தீர்வுத்திட்டம் பற்றி உரையாடத் தொடங்கினர். 2017ல் தீர்வுத் திட்டம் இல்லையேல்
கூட்டமைப்பின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும்இ மாகாணசபை உறுப்பினர்களும் தமது பதவிகளை ராஜினமா செய்து அரசுக்கெதிராக தமது எழுச்சிப் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டபோதும் அதனை அங்கிகரிக்கக் கூடிய பல அரசியல் வாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுகின்றார்கள் என்ற குற்ற உணர்வு அவர்களின் மனதில் தோன்றியிருக்கலாம. ஜீ.ரி.லிங்கநாதன் அவர்களுடைய கருத்து உண்மையாக இருந்தால் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோதராஜலிங்கம் தெரிவித்திருந்தார். இக்கூட்டமானது எந்தவொரு பிரியோசனமும் அற்ற நிலையில் இடம்பெற்றது. வெறுமனே ஒரு தேனீரை அருந்திவிட்டுச் சென்றதே மிச்சம். வன்னிக்கான ஒரு செயற்றிட்டம் வருகின்ற பொழுது தென்னிலங்கை அரசியலும்இ யாழ்மாட்ட அரசியலும் தலையிடுகின்றது. தென்னிலங்கையில் ஒரு அபிவிருத்தியையோ? யாழ்மாட்டத்தில் ஒரு அபிவிருத்தியையோ? வன்னித் தலைமைகள் தடுக்கின்றனவா? இல்லை. மாறாக வன்னிப் பிராந்தியத்தில் ஒரு அபிவிருத்தியென்றவுடன் இங்குள்ளவர்களும் அதனைத் தடுக்கின்றனர். மத்திய அரசும் தடுக்கின்றது யாழ் தலைமையும் தடுக்கின்றது.
ஆகவே வன்னித் தலைமை மாடு மேய்த்துத் திரியவேண்டும் என்று மற்றைய தலைமைகள் நினைக்கின்றன. இது தவறு. வன்னிப் பொருளாதார மத்திய மையத்தை பாரிய பிரச்சனையாக எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த ராஜபக்ச காலத்தில் அவரது தன்னிச்சையான முடிவுகளால் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள்இ பாலக்கட்டுமானங்கள் இடம்பெற்றது. இவ்வாறான செயற்பாடுகளை யார் தடுத்தார்?
ஆனால் இன்று நல்லாட்சி என்று கூறிக்கொண்டு இந்த நல்லாட்சியும் தமிழ் மக்களுடைய என்னப்பாடுகளுக்கு அமைய எதனையுமே செய்து விடமுடியாத நிலமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சில வன்னித் தலைமைகள் அரசாங்கத்தின் கைகூலிகளாகவோ? அல்லது வடமாகாண சபையின் கைக்கூலிகளாகவோ செயற்படுவதன் காரணமே. வன்னி அரசியல்த் தலைமையானது எமக்கான ஒரு அபிவிருத்தி வருகின்ற பொழுது தென்னிலங்கை அரசியல் வாதிகளுடைய கருத்தையோஇ அல்லது யாழ் மாவட்ட அரசியல் வாதிகளுடைய கருத்தையோ செவிமடுக்காது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும்இ வடமாகாணசபை உறுப்பினர்களும் நன்மையோஇ தீமையோ ஒருமித்த கருத்துக்களை முன்வைக்கவேண்டும். இதில் கட்சி பேதங்கள் இருக்கக் கூடாது.
இதனால் வன்னிப் பகுதியில் வாழக்கூடிய மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அபிவிருத்திகள் அணைத்தும் முஸ்லீம் அரசியல் வாதிகளும், தென்னிலங்கை அரசியல்வாதிகளும், யாழ்மாவட்ட அரசியல் வாதிகளும் சுவீகரித்துக் கொள்கின்றனர். இந்த அரசியல் யதார்த்தம்வன்னி அரசியல் வாதிகளுக்குத் தெரிந்தும் அவர்களுக்கு நாக்கு வளிக்கச் செல்வதன் விளைவே இந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழுகின்ற மக்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைகின்றது. தயவு செய்து வன்னிப் பெருநிலப்பரப்பில் இருக்கக் கூடிய அரசியல் வாதிகளே உங்ள்ளது சுயநல அரசியலுக்காக இப் பகுதி வாழ் மக்களை பலிக்கிடாய் ஆக்காதீர்கள். முஸ்லீம்களுக்கும்இ சிங்களவர்களுக்கும் இந்தப் பொருளாதார மத்திய மையத்தினை தாரைவார்த்துக் கொடுக்கும் செயற்பாட்டிற்காகவா உங்களை பாராளுமன்றத்திற்கும்இ மாகாணசபைக்கும் அனுப்பி வைத்தோம்? வாக்குக் கேட்கும் சமயங்களில் மட்டும் எமது கருத்துக்களை மிக உண்ணிப்பாக செவிமடுக்கின்றீர்கள். தோழமை கொண்டாடுகின்றீர்கள். கலியான வீடுகள், இறப்பு வீடுகள், பிறந்த நாள் வீடுகள், பொன்னுருக்கு வைபவங்கள் என்று அழைப்பில்லாமலே வருகின்றீர்கள் இந்த பொருளாதார மத்திய மையம் தொடர்பில் மட்டும் மக்களுடைய விருப்பு வெறுப்புத் தெரிந்து ஏன் உங்களால் செயற்பட முடியாமல் போனது?
எதிர் வரும் காலங்களிலும் தென்னிலங்கை அரசியல் தலமைக்கும்இ யாழ் அரசியல் தலமைக்கும், கூட்டமைப்பினுடைய அரசியல் தலமைக்கும், தமிழரசுக் கட்சியின் அரசியல் தலமைக்கும் சலாம் போடப்போகின்றீர்களா? வன்னித் தலமையினுடைய அரசியல் நடவடிக்கைகள் மேலோங்கிச் செல்லவேண்டுமாக இருந்தால் கட்சி பேதங்களை மறந்து மக்களுக்கான அபவிருத்தியில் ஒன்று படுங்கள் மக்களாகிய எம்மை பலிக்கிடய்கள் ஆக்கி எமக்குக் கிடைக்க இருக்கின்ற அபிவிருத்திகளை இல்லாது சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தாரைவார்த்துக் கொடுக்காதீர்கள். இவ் பொருளாதார மத்திய மையம் தாண்டிக்குளத்திற்கும்இ ஓமந்தைக்கும் வராது கைநழுவிப் போனதுக்கு வன்னி அரசியல் வதிகளுடைய ஒற்றுமையின்மையே காரணம். இதற்குப் பிரசித்தமாக என்ன செய்யப்போகின்றீர்கள்? மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றுங்கள் இதுவே உங்களுக்கு நாம் கூறும் கடசி அறிவுரை.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுப் பக்கம் வாருங்கள் அகப்பைக் காம்பும், செரும்பும் உங்களுக்காகக் காத்திருக்கின்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்கள் வன்னி மக்களின் உள்ளக் குமுறல்கள் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே, உங்களை புன்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை. நீங்கள் செய்வது உங்கள் மனட்சாட்சிக்கு சரியா என்பதை ஒன்றுக்கு பத்துமுறை கேட்டுப் பாருங்கள்.
இக்கட்டுரை பதிவாகியதன் பின்னர் குறிப்பிட்ட நரிகளுள் ஒரு நரியின் குற்ச்சாட்டு என்னவென்றால் ஒண்றுக்குமே வாக்களிக்காதா முட்டாள்களும் இதனை நான் என்ற அகங்காரத்தில் ஒட்டுமொத்த பேரையும் ஏமாற்றிய முதலமைச்சர் C V விக்னேஸ்வரன் தான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் .
-இரணியன்-