முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு சிங்­கள மக்­களை பகைத்­துக்­கொள்­ளாது நீடித்த நிலை­யான தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். ஒற்றை ஆட்சிக் கோட்­பாட்டை ஒரு­போதும் ஏற்றுக்கொள்ளப்­போ­வ­தில்லை

281

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­வ­துடன் தேர்தல் முறை­மையும் மாற்­றப்­படும் எனவும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால இனப்பி­ரச்­சி­னைக்கும் தீர்­வு­கா­ணப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­ம் நோக்கில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­ மைப்பு பேர­வை­யாக மாற்றி­ய­மைப்­ப­தற்­கான பிரே­ர­ணையும் சபையில் பிர­த­ம­ரினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்ள விதம் குறித்தும் தற்­போது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினால் சர்ச்­சைகள் எழுப்­பப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது?அதில் எவ்­வாறு தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு கிட்­டப்­போ­கின்­றது என்­பது குறித்து தற்­போது பர­வ­லாக பேசப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

விசே­ட­மாக மிக நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிக்­கப்பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற இந்த அர­சியல் தீர்வுப் பிரச்­சி­னைக்கு எவ்வாறான தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­படும் என்­பது அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக காணப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்கம் தமிழ் பேசும் மக்­களின் தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான ஆர்வத்தை வெளிக்­காட்­டி­யுள்­ளது.

பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் உரை­யாற்­று­கின்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் அடிக்­கடி இந்த தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­பது குறித்த தமது ஆர்­வத்தை வெளியிட்டு வரு­கின்­றனர்.

எனினும் எவ்­வாறு தீர்வு முன்­வைக்­கப்­படும் என் ­பதே பல­ரதும் கேள்­வி­யா­க­வுள்­ளது. ஏற்­க­னவே அர­சிய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா? அல்­லது அதனை நீக்­கி­விட்டு புதிய அதி­காரப் பகிர்வு முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டுமா? இந்த வகை யில் எவ்­வாறு தீர்வு முன்­வைக்­கப்­படும் என்­பதில் பாரிய கேள்­விகள் எழுந்­துள்­ளன.

தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வரை கடந்த 70 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மாக தமது அர­சியல் உரி­மை­களை உறுதிப்படுத்தும் வகை­யி­லான தீர்­வுத்­திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றனர்.

ஒரு நியா­ய­மான தீர்வைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்கள் பல்­வேறு வடி­வங்­களை பெற்­ற­போ­திலும் அனைத்து முயற்­சி­களும் இறு­தியில் தோல்­வியில் முடி­வ­டைந்­தன.

இந்­நி­லையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­ததும் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அருமையான சந்­தர்ப்பம் ஒன்று கிடைத்­தது.

நல்­லெண்ண செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து இந்தப் பிரச்­சி­னைக்கு வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க தீர்வை அடைந்திருக்­கலாம். ஆனால் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் அதற்­கான முயற்­சிகள் இதய சுத்­தி­யுடன் முன்னெடுக்கப்படவில்லை.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது.

அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்று முன்­வைக்­கப்­படும் என்ற நம்­பிக்­கை­தரும் முயற்சிகளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கும் பணி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. ஆனால் இங்கு தான் தற்­போது சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது.

அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் ஒற்­றை­யாட்சி முறை­மை­யிலா அல்­லது ஐக்­கிய இலங்கை என்ற முறைமையிலா இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வுகாணப்­படும் என்ற வாதப்பி­ர­தி­வா­தங்கள் இடம் பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் அர­சாங்கம் எவ்வாறு இந்த விட­யத்தை கையா­ளப்­போ­கின்­றது என்­பது இங்கு முக்­கி­ய­மா­ன­தாகும்.

கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றுள்ள ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒற்­றை­யாட்சி மாறாது என்றும் அதற்­குள்­ளேயே தீர்­வு­கா­ணப்­படும் என்றும் கூறி­வ­ரு­கின்­றது.

ஆனால் ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வை ஏற்க முடி­யாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது. இந்நிலையில் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதே கேள்­வி­யா­க­வுள்­ளது.

sampanthan0 2694  "ஒற்றையாட்சி' "ஐக்கிய' வலுக்கிறது முரண்பாடு!!  –ரொபட் அன்டனி (கட்டுரை) sampanthan0 2694இது தொடர்பில் எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன் இவ்­வாறு கூறு­கின்றார். “” நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­யோ­யிருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக ஐக்­கிய இலங்­கைக்குள் பகி­ரப்­பட்ட இறை­யாண்­மையில் அதி­யுச்ச சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்றே அவ­சி­ய­மாகும்.

இத­னையே நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஒற்றை ஆட்சிக் கோட்­பாட்டை ஒரு­போதும் ஏற்றுக்கொள்ளப்­போ­வ­தில்லை. தற்­போது ஏற்­பட்­டுள்ள பொன்­னான சந்­தர்ப்­பத்தை நழு­வ­விட்­டு­வி­டக்­கூ­டாது.

முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு சிங்­கள மக்­களை பகைத்­துக்­கொள்­ளாது நீடித்த நிலை­யான தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

எமது மக்கள் ஏற்­காத எத­னையும் நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­வ­தில்­லை­யென்­பது உறு­தி­யா­னது.

நான் ஒற்­றை­யாட்சிக் கோட்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக கூறு­கின்­றார்கள். கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள். அவை நிரா­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டி­யவை.

நான் ஒற்­றை­யாட்சிக் கோட்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­து­மில்லை. எமது மக்கள் தமது பூர்­வீக மண்ணில் சுதந்­தி­ர­மாக, கௌர­வ­மாக, பாது­காப்­பாக வாழ­வேண்டும்.

வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்­கப்­ப­ட­வேண்டும். மாகாண சபை­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்கப்படவேண்டும்.

ஐக்­கிய இலங்­கைக்குள் பகி­ரப்­பட்ட இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் அதி­யுச்ச சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

அதே­நேரம் சிங்­கள மக்­க­ளையும் பகைக்­கக்­கூ­டாது. அவர்கள் அச்­ச­ம­டையும் வகை­யி­லான கார­சா­ர­மான கருத்­துக்­களை முன்­வைக்கக் கூடாது என்று மிகவும் திட்­ட­வட்­ட­மான முறையில் கூறி­யி­ருக்­கின்றார்.

அதா­வது இரா. சம்பந்தன் இதன்­மூலம் தமிழ் பேசும் மக்­களின் அபி­லா­ஷைகள் என்­ன­வென்­பது குறித்தும் அவர்­களின் எதிர்­பார்ப்­புக்கள் எவ்­வா­றா­னது என்­பது தொடர்­பா­கவும் மிகவும் தெளி­வான முறையில் கருத்­துக்­களை முன்வைத்திருக்­கி­ன்றார்.

index  "ஒற்றையாட்சி' "ஐக்கிய' வலுக்கிறது முரண்பாடு!!  –ரொபட் அன்டனி (கட்டுரை) index4எனினும் இது தொடர்பில் அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு எனக்கு இட­ம­ளி­யுங்கள்.

ஒற்­றை­யாட்­சிக்கு முர­ணான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க மாட்டோம். மக்­களை குழப்பும் வகையில் வீணான எதிர்ப்புகளை உட­ன­டி­யாக கைவி­டு­மா­று­கோ­ரு­கின்றேன் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்கும் போது நாட்டை பிள­வு­ப­டுத்த முனையப் போவ­தில்லை. ஒற்றையாட்சிக்கு உட்­பட்டே அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்போம்.

நான் ஒரு இலங்­கை­யர். இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசத்தை ஐக்கியப்படுத்து­வற்கு எனக்கு அனை­வரும் இட­ம­ளிக்க வேண்டும். நான் நாட்டை பிள­வு­ப­டுத்­து­வதற்கு ஒரு­போதும் விடமாட்டேன் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அந்­த­வ­கையில் நாட்டின் பிர­த­ம­ரி­னதும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரி­னதும் கருத்­துக்கள் மூலம் இந்த விட­யத்தில் எவ்வாறான முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன என்­ப­தனை எம்மால் உணர முடி­கின்­றது.

அது மட்­டு­மல்ல இந்த விவ­கா­ரத்தை முன்­கொண்டு செல்­வ­திலும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் அர­சியல் தீர்வு என்ற விடயத்தை முன்­வைப்­ப­திலும் ஏற்­ப­டப்­போ­கின்ற சிக்­கல்கள் எவ்­வா­றா­னவை என்­ப­தையும் உணர முடி­கின்­றது.

குறிப்­பாக ஒற்­றை­யாட்சி முறை­மையின் ஊடாக தீர்வு பெற முடி­யாது என்­ப­தற்­கான கூட்­ட­மைப்பின் நியாயப்படுத்தல்கள் தொடர்பில் முதலில் தென்­னி­லங்கை புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

காரணம் கடந்த 70 வரு­டங்­க­ளு­க்கும் மேலாக தமிழ் மக்கள் ஒரு தீர்வை வேண்டி வரு­கின்­றனர். அது மட்­டு­மல்ல கடந்த காலங்­களில் ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வு சமஷ்டி முறைமை மற்றும் இடைக்­கால நிர்­வாக சபை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து கடந்த காலங்­களில் பேசப்­பட்டு வந்த நிலையில் தற்­போது அவை எல்­லா­வற்­றையும் விடுத்து ஒற்றை­யாட்­சிக்கு செல்­வ­தாயின் அதில் சிக்­கல்கள் உள்­ளன என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

அது­மட்­டு­மல்ல ஒற்­றை­யாட்சி முறை­மையின் கீழ் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்வை அடைய முடி­யுமா என்­பது இந்த இடத்தில் எழுப்­பப்­பட வேண்­டிய மிகப் பிரதா­ன­மான விட­ய­மாகும்.

காரணம் தமிழ் பேசும் மக்கள் சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பா­கவோ வெறு­மனே அபி­வி­ருத்திக் குறித்தோ பாரி­ய­ளவில் குரல் எழுப்­ப­வில்லை. மாறாக தமக்­கான அர­சியல் அதி­கா­ரங்­களைப் பெற்றுத் தரு­மாறு கோரியே குரல் கொடுத்து வந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் ஐக்­கிய இலங்கை என்ற கோட்­பாட்­டுக்குள் அதி உச்ச அதி­காரப் பகிர்வை வழங்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு அரசியல் தீர்வு காண முடி­ய­மென தமிழ் பேசும் மக்கள் நம்­பு­கின்­றனர்.

காரணம் ஒற்­றை­யாட்சி முறை­மையின் கீழ் அதி­கார பகிர்வு என்­பது முற்­று­மு­ழு­தாக சாத்­தி­ய­மா­னதா என்­பது கேள்விக்கு­ரிய விட­ய­மாகும்.

அதனால் தான் ஐக்­கிய இலங்­கைக்குள் அதா­வது பிரி­ப­டாத இலங்­கைக்குள் அதி உச்ச அதி­காரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வை தமிழ் பேசும் மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

குறிப்­பாக உலகின் பல்­வேறு நாடு­களில் இவ்­வாறு ஐக்­கிய என்ற பதத்­திற்­குட்­பட்டு அதி­காரப் பகிர்வு முன்னெடுக்கப்பட்டுள்­ளன.

அங்கு மிகவும் வெற்­றி­க­ர­மான முறையில் இந்த செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தனால் ஐக்­கிய இலங்கை என்ற கோட்பாட்­டுக்குள் தீர்வைக் காண்­பதை தமிழ் மக்கள் சாத்­தி­ய­மா­ன­தாக காண்­கின்­றனர்.

இதே­வேளை தென்னிலங்கை அர­சியல் சூழ­லுக்குள் அர­சாங்கம் அர­சியல் தீர்வு தொடர்பில் எடுக்கும் ஒவ்­வொரு முடிவும் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­ப­தையும் யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது.

விசே­ட­மாக அர­சாங்­க­மா­னது அர­சியல் தீர்வு விட­யத்தில் ஐக்­கிய இலங்கை அல்­லது சமஷ்டி என்ற அடிப்­ப­டையில் தீர்வுத் திட்­டத்­திற்கு செல்­வ­தற்கு தயா­ராகும் பட்­சத்தில் அதனை கடுமை­யாக எதிர்த்து நாட்டில் அர­சியல் குழப்­பங்கள் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கடும் போக்­கு­வா­திகள் முயற்­சிப்­பார்கள் என்ற ஒரு அச்­சம் அர­சாங்­கத்­திடம் காணப்­ப­டலாம்.

ஒரு­வ­கையில் பார்க்­கும்­போது அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அது நியா­ய­மான ஒரு விட­ய­மா­கவே காணப்படுகிறது.

காரணம் பெரும்­பான்மை மக்­களின் எதிர்ப்பை சம்­பா­தித்­து­விட்டால் தமிழ் மக்­க­ளுக்கு குறைந்த பட்ச அதி­கா­ரங்­களை வழங்கும் தீர்­வு­கூட சவா­லாக அமைந்­து­விடும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலைமையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சமா­தான பேச்­சுக்­க­ளுக்கும் இந்த துர­திர்ஷ்­ட­வ­ச­மான நிலை­மையே ஏற்­பட்­டது.

2003 ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடை­பெற்ற பேச்­சுக்­களில் சமஷ்டி தீர்வு தொடர்­பான இணக்­கப்­பா­டுகள் எட்டப்பட்டபோதும் கூட அதனை தென்­னி­லங்கை கடு­மை­யாக எதிர்த்­த­துடன் இன­வா­திகள் இந்த விட­யத்தை சிறப்­பாக கையாண்டு அப்­போ­தைய ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பினர். (தமிழர் தரப்பிலும் அதற்கு எதிர்ப்பு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது)

எனவே இவ்வாறு தென்னிலங்கை மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் ஏற்படாதவாறு மிகவும் அவதானத்துடன் அணுகவேண்டிய விடயமாக இந்த அரசியல் தீர்வு விவகாரம் காணப்படுகின்றது.

சற்று பிழைத்தாலும் முழு முறைமையும் செயலிழக்கும் அபாயம் இந்த விடயத்தில் காணப்படுகின்றது. இதனை அனைத்து தரப்பினரும் மனதில்கொள்ள வேண்டும்.

எனவே தென்னிலங்கை பெரும்பான்மை மக் கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையிலும் சந்தேகங்கள் ஏற்படாத ரீதியிலும் அதேநேரம் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப் படும் வகையிலும் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எத்தகையன என்றும் இந்த விடயத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வு எவ்வாறானது என்பது இவர்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.

எனவே எந்தப் பக்கத்திலும் சிக்கல்கள் ஏற்படாதவாறு தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு இந்த இரண்டு தலைவர்களும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும். மிகவும் விசேடமாக யாரும் இதனை குழப்பிவிடக்கூடாது என்பதே இங்கு மிக முக்கியமானதாகும்

SHARE