ஜெர்மனி காற்றில் ஜி.வியின் இசை

577

ஜி வி பிரகாஷ் இசை அமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இனி இவர் இசையை விட்டு விடுவார், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல, சிம்போனி இசைக்கு இசை அமைப்பாளராக ஜெர்மனி செல்ல இருக்கிறார். மேலும் சர்வதேச சந்தையில் மிக முக்கியமான நுகர் பொருளொன்றின் விளம்பரத்திற்கு இசை அமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இசைத்துறையில் புகழ் பெற்றவர்களுள் ஒருவரான ஜெர்மனியின் கோன்ராத் பௌமானின் இசை மிதந்த ஜெர்மனி காற்றில் ஜி வி பிரகாஷின் இசையும் மிதக்க உள்ளது.

 

SHARE