விஜய் சேதுபதி தான் இன்றைய தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி நடிகர். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இவர் ஸ்டுடியோ 9 தயாரிப்பில் வசந்தக்குமாரன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். பின் தயாரிப்பாளர் சுரேஷ் நடவடிக்கைகள், அவர் பேசிய தகாத வார்த்தைகளால் அந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார்.
மேலும் சுரேஷ் தன்னை ஆள் வைத்து மிரட்டியதால், இதை கண்டித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.