ஈரோஸ் பிரபாவின் அணியில் இருந்து பிரிந்து சென்ற துஸ்யந்தன் தலைமையில் தமிழ் தேசிய முன்னணி அங்குரார்ப்பணம்-
தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே apr 2013 இந்த அங்குரார்ப்பணம் இடம்பெற்றுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன், கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக விருந்தவரும், புளொட் முக்கியஸ்தரும், 1998ஆம் (15.07.98) ஆண்டு வவுனியாவில் வைத்து புலிகளின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவருமான சரவணபவானந்தன் சண்முகநாதனின் (வசந்தன்) சகோதரரான சரவணபவானந்தம் துஸ்யந்தன் என்பவர் இக் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராக பரமு செந்தில்நாதன், பொருளாளராக தர்மலிங்கம் சிறிதரன், கொள்கைப் பரப்பு செயலாளரும் ஊடகப் பேச்சாளருமாக நடராசா ஜனாதீபன் (ஜனகன்), தேசிய அமைப்பாளராக பரராசசிங்கம் ரோன் கனிசியஸ், இளைஞர் அணி செயலாளராக விநாயகமூர்த்தி சசிதரன், உபதலைவராக வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன், துணை பொதுச் செயலாளராக கணபதிப்பிள்ளை கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக விருந்தவரும், புளொட் முக்கியஸ்தருமான சரவணபவானந்தன் சண்முகநாதனின் (வசந்தன்) சகோதரர் எனும் காரணத்தினால் இந்த கட்சியின் தலைவரான சரவணபவானந்தன் துஸ்யந்தன் முன்னைய பாராளுமன்ற தேர்தலின் போது புளொட் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) சார்பில் வன்னி மாவட்டத்திற்கு போட்டியிட்டவர்.
ஆயினும் இவர் ஈரோஸ் அபைப்பின் நீண்ட கால, நிரந்தர உறுப்பினர் என்பதும், சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்து ஈரோஸ் அமைப்பை மீண்டும் (முன்னர் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தது) ஆரம்பித்தவர்களில் ஒருவரான ஈரோஸ் பிரபாவுடன் இணைந்து செயல்பட்டவர் என்பதும், பின்னர் கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அறிவு தெளிவு தேவை என்பதற்க்காக இவ்வரலாற்றை தருகிறோம் இவ் இயக்கத்தை கூறுபோடும் வகையில் பலர் செயற்படுகிறார்கள் கோவணம் கட்டினாலும் கொள்கை மாறாதவனே ஒரு தலைவனாக இருக்கமுடியும் கட்சிவிட்டு கட்சிதாவி பிழைப்பு நடத்துகிறவர்கள். கொள்கையோடு இருதிவரை விடுதலைப்புலிகளுடன் இனைந்து செயற்ப்பட்ட வே .பாலகுமார் அவர்களையும் இந்த மாவீர் வாரத்தில் நிணைவு கூறுவதொடு ஈரோஸ் அமைப்பு எப்படி இருந்தது அதன் சிறப்பு பற்றியும் நாம் பார்ப்போம்
ஈழப்புரட்சி அமைப்பின் திட்ட பிரகடன மாநாடுகள்
1975ம் ஆண்டு லண்டனில் கருவெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை தேசிய இனப்பிரச்சினையின் கூர்மைக்குள் அமுங்கி பிற்போக்குத்தனங்களைக் கொண்ட புதிய அதிகாரவர்க்கங்களின் பிடிக்குள் ஈழவர்களின் விடுதலையானது சென்றுவிடக்கூடாது. மாறாக எம் சமூகத்தில் காணப்படும் தனியுடமை சமூக அமைப்பு தோற்றுவித்த சமூக ஒடுக்குமுறை,பெண் ஒடுக்குமுறை, ஏற்றதாழ்வு போன்ற உள்ளக முரண்பாடுகளையும், அதன் போலித்தனங்களையும் களைந்து ஒரு புரட்சிகர தத்துவத்தை படைக்கவேண்டும் என்பதற்காக தனது அரசியல் பணிகளை ஸ்தாபகர் இரட்ணசபாபதி அவர்களின் கருத்திற்கமைய தாயகத்தினுள் ஆரம்பித்தது. அவ்வாறு செயற்பட ஆரம்பித்த ஈழப்புரட்சி அமைப்பு தேவையான சந்தர்ப்பங்களில் திட்ட பிரகடன மாநாடுகளை கூட்டி தன் பாதையை செப்பனிட்டது. 1990 ஆம் ஆண்டு அமைப்பு கலைக்கப்படும் வரையில் ஐந்து திட்ட பிரகடன மாநாடுகள் நடத்தப்பட்டன. இங்கு முதல் நான்கு திட்ட பிரகடன மாநாடுகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.
1) | தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அவர்கள் வாழும் பகுதிக்குள் தேசிய அந்தஸ்தை (State hood) நிறுவுல். |
2) | அத்தேசிய அந்தஸ்தானது மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பருத்தித்துறை முதல் பதுளை வரை, பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசங்களாகும். |
3) | பண்டைய பாட்டாளிகளென (Classical Proletariat) இனம் காணும் மலையக மக்களை உள்ளடக்கிய தீர்வினாலேயே ஈழம் நிதர்சனமாகும். |
4) | ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே என்பதனை ஏற்றுக் கொண்டு அந்தவகையில் ஈழத்தின் போராட்டமும் வர்க்க அம்சத்தை உள்ளடக்கியது என்றும் அதன் காரணமாக மலையக மக்களை முன்னணியாகக் கொண்ட (Vanguard) போராட்டமாக அமைதல் வேண்டும். |
5) | ஈழத்திற்கான போராட்டம் என்பது அனைத்து மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டமாக அமைதல் வேண்டும். |
1) | ஈரோசின் செயற்பாடுகள் ஈழத்திற்குள் நிலை நிறுத்தப்படல் வேண்டும் |
2) | செயற்பாடுகள் பொருளாதார,அரசியல் இணைந்த திட்டங்களினூடாக அமைதல் வேண்டும். |
3) | செயற்திட்டங்களில் பணியாற்றி பயிற்சி முடித்த தோழர்கள் ஈரோஸ் செயற்பாட்டை முன்னெடுத்தல் வேண்டும் |
4) | அரசியல் பொருளாதார திட்டங்கள் போராட்டத்தளங்களாக மாற்றப்பட வேண்டும் |
5) | ஈழத்திற்குள் போராடும் இயக்கங்களை அமைப்பின் கருத்துக்கமைய இணைத்திடல் வேண்டும். |
6) | மேற்கூறப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினூடாக தெரிவு செய்யப்படும் முதல் ஐம்பது தோழர்கள் பூரண இராணுவ பயிற்சி முடித்தபின் திட்டப் பிரகடன மாநாடு (Planary Session) நடத்தப்படும். |
7) | ஈரோஸ் இயக்கமாக பரிணாமம் அடைந்து போராட்டத்தை முன்னெடுக்கும் என பிரகடனம் செய்யப்பட்டது. |
1) | ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல். |
2) | மட்டகளப்புப் பகுதியில் வேலை செய்வதற்காக அங்கு ஏற்பட்ட இயற்கைச் சீரழிவினைப் பயன்படுத்தி கூரைத் தகட்டுத் திட்டமொன்றை ஏற்படுத்தல். |
3) | ஈழம் முழுவதற்குமான இயக்க ஊடகமாகவும், எமது பிரச்சினைகள் சம்பந்தமாக சித்தாந்த விளக்கமாகவும் ‘தர்க்கீகம்” என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை வெளியிடுவதெனவும், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதற்கு எமது ஊடகமாக சென்னையிலிருந்து ‘பொதுமை” என்ற இதழையும் வெளியிடல். |
4) | தோழர்களின் அன்றாட சீவனப்பாட்டுக்காக சிறுபண்ணைத் திட்டங்களை செயற்படுத்தல் |
1) | ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.ஈழவர் போராட்டத்திற்குரிய சூழல் கனிந்திருக்கும் நிலையில் போராட்டத்துக்காக மக்களை தயார்படுத்தி இறுதிப் போராட்டத்திற்கு இட்டுச் சென்று இம்மக்களின் விடிவாகிய ஈழத்தை நிதர்சனமாக்கும் வகையில் அகச் சூழ் நிலைகள் அமையவேண்டும் என்பதற்கிணங்க ஈரோஸ் தனது கட்டமைப்புகளை மேலும் இறுக்கமானதாகவும், மக்களை இணைத்துக் கொண்டு போராடக் கூடியவகையில் செயற்படல் வேண்டும். |
2) | ஈழப்போராட்டமானது வர்க்க குணாம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த போதும் தேசிய இனப்போராட்ட வடிவமே கூர்மையடைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளும் இயக்கம் அப்போராட்ட முன்னெடுப்பில் முனைந்து செயலாற்றல் வேண்டும். |
3) | கூர்மையடைந்து வரும் நெருக்கடிகளில் எதிரியின் அசுர முன்னேற்றத்தையும் தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் கருதி இன்றையநிலையில் மற்றைய இயக்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் இராணுவக் கூட்டணி அமைப்பதற்கும் இயக்கம் தயாராய் இருப்பதுடன் தனித்துவம் பேணி ஒதுங்கி நிற்கும் இயக்கங்களை இவ் இணைப்புக்குள் கொண்டு வர முயற்சித்தல் வேண்டும். |
4) | ஈழவர் போராட்டத்தில் எதிரியின் பக்கம் ஏகாதிபத்தியம் துணை நிற்குமென்பதை கணக்கிலெடுக்கும் எமது இயக்கம் எம்மை பலப்படுத்தும் திறன் கருதி நேசசக்திகளின் உதவிகளையும்,வசதிகளையம் வகையாகப் பெற்று ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும். |