வீடியோக்களை தரவேற்றம் செய்து பகிரும் வசதியைத் தருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் ஆனது பயனர்களுக்காக YouTube Music Key எனும் சேவையினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் இதில் விளம்பரங்கள் இடம்பெறுவது வழமையாகும்.
எனினும் பயனர்களுக்கு இது இடையூறாக இருப்பதனால் விளம்பரங்களை தவிர்த்து இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளும் வசதியினையும் யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக மாதாந்தம் 8 டொலர்கள் கட்டணமாக செலுத்தி உலகின் எந்த மூலையிலிருந்தும் விளம்பரங்கள் அற்ற YouTube Music Key சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் Android, iOS இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.