கைப்பேசி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஸ்மார்ட் கைப்பேசிகளை நேரடியாக டச் செய்யாமல் கட்டுப்படுத்துவதற்கு வயர்லெஸ் பொத்தான்கள் (Button) உருவாக்கப்பட்டுள்ளன.
Flic எனும் இப்பொத்தானை பயன்படுத்தி கைப்பேசியில் சில தொழிற்பாடுகளை கட்டுப்படுத்த முடிவதுடன், அப்பிளிக்கேஷன்களையும் இயக்கக்கூடியதாக இருக்கும்.
தற்போது 80,000 டொலர்கள் நிதி சேகரிப்பினை எதிர்பார்த்து Indiegogo தளத்தில் இப்பொத்தான் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
iOS, Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இதன் விலையானது 19 டொலர்கள் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது