25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஏன்?
ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரி.யு.எல்.எப்) ஒரு தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அமிர்தலிங்கம், முன்னாள் ரி.யு.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்த்து 25 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். புலிகளின் கொலையாளிகள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரைச் சுட்டுக்கொன்றபோதுகூட, புலிகளின் உத்தியோகபூர்வ தூதுக்குழுவுக்கும் மற்றும், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துக்கும் கொழும்பில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈயின் சுயரூபம் என்ன என்பதை அமிர்தலிங்கத்தின் படுகொலை உலகத்துக்கு பெருமளவு தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தது.
கொலை நடைபெற்ற சூழ்நிலையை விளங்கிக் கொள்வதற்கு, அந்த நேரத்தில் நிலவிய அரசியல் பின்னணி பற்றிய சில விபரங்களை அறியவேண்டியது அவசியம்.
ஜூலை 29,1987ல் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்தன ஆகியோரால் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதின் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கில் அமைதி காப்பவர்களாக இந்திய இராணுவத்தினர் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.
இந்திய அமைதி காக்கும் படையாக (ஐ.பி.கே.எப்) நியமிக்கப் பட்டவர்களுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் போர் மூண்டது.
இராணுவ ஆய்வுகள் தெரிவிப்பதன்படி, அதிக அழுத்தத்துக்கு ஆளான புலிகள் சுவாசிப்பதற்கு பிராணவாயு வேண்டி அந்த சமயத்தில் திணறினார்கள். ஸ்ரீலங்காவில் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரிய சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது, அது ஒரு இறையாண்மை மீறல் என அவர்கள் கருதினார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேமதாஸ,மிகக் குறுகிய பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார். தான் தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்புவதாக அவர் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
ஜனதா விமுக்தி பெரமுனவினால் (ஜேவிபி) ஒரு வன்முறைப் பிரச்சாரமும் தலை தூக்கியிருந்தது. இந்தக் கட்டத்தில்தான் மரபு வழிகளை பின்பற்றாதவரான பிரேமதாஸ ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருபகுதியினரையும் நோக்கி நேசக் கரம் நீட்டினார்.
அந்த வாய்ப்பினை ஜேவிபி அலட்சியம் செய்த அதேவேளை, திணறிக் கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ அதை பற்றிக் கொண்டது. வடக்கிலும் மற்றும் கிழக்கிலும், இந்திய இராணுவம் எல்.ரீ.ரீ.ஈயுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில், கொழம்பில் அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின, மற்றும் ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரு பகுதியினருக்கும் பொதுவான ஒரு நோக்கமே இருந்தது.
வித்தியாசமான காரணங்களுக்காக இரு பகுதியினரும் இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பினார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ உடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதை தொடர்ந்து ஜனாதிபதி பிரேமதாஸ, இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேற ஒரு காலக்கெடுவை நியமிக்கும்படி கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்.
இந்த காரியத்தை கெடுக்கக்கூடிய ஒருவராக இரு பகுதியினரும் மனத்தால் உணர்ந்த நபர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆவார்.
ரி.யு.எல்.எப் இன் செயலாளா நாயகம், இந்தோ – லங்கா ஒப்பந்தத்துக்கும் மற்றும் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் இருப்பதையும் உறுதியாக ஆதரித்தவராவார்.
தனது வன்முறை மற்றும் அழிக்கும் திறன் என்பனவற்றால் எல்.ரீ.ரீ.ஈ ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெற்றிருந்தாலும், வன்முறைத் தன்மையற்ற அரசியல் தலைவரான அமிர்தலிங்கம் தனது அரசியல் நல்லெண்ணம் மற்றும் அந்தஸ்து காரணமாக சர்வதேச ரீதியாக நற் சான்றுகளைப் பெற்றுள்ளார் என்கிற கருத்து நிலவி வந்தது.
1989ல், இந்தக் கட்டத்தில் இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்காவிலிருந்து திருப்பி அனுப்பக்கூடாது என்று அமிர்தலிங்கம் நா வன்மையுடன் வாதிட்டதால், அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகியோர் அடைந்துள்ள அச்சத்தின் ஒரு பகுதியை உணரக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணம் பண்ணாகத்தை சேர்ந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகஸ்ட் 26,1927ல் பிறந்தார். அவர்வசீகரத் தன்மையும் துடிப்பான இயக்கமும் கொண்ட அரசியல்வாதி, ஈழத்து காந்தி என அழைக்கப்படும் மதிப்புக்குரிய தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமைத் தளபதியாக பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
தொழிலால் ஒரு வழக்கறிஞரான அமிர்தலிங்கம் 1956 முதல்1970 வரை வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1983 வரை காங்கேசன் துறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1989 தேர்தலின் பின்னர் அவர் ரி.யு.எல்.எப் இனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்
அமிர்தலிங்கம் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானவராக amirthalingam funeral இருந்ததுடன், தமிழ் அரசியலில் கடும் போக்காளராகவும் கருதப்பட்டார்.
அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் முருகேசு சிவசிதம்பரம் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் 1977 பாராளுமன்ற தேர்தலில், ரி.யு.எல்.எப் 18 ஆசனங்களை வென்றது, ஐதேக 141 ஆசனத்தை வென்றபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற ஆசனங்களின் தொகை 8 ஆக குறைவடைந்தது.
இதனால் 168 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ரி.யு.எல்.எப் பிரதான எதிர்கட்சியாக மாறியது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் முதலாவது ஸ்ரீலங்கா தமிழர் என்கிற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றார்.
1983ம் ஆண்டின் தமிழர் விரோத படுகொலைகள் மற்றும் பிரிவினை வாதத்தை அனுமதிக்க மறுக்கும் அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் என்பனவற்றின் விளைவாக ரி.யு.எல்.எப் பாராளுமன்றத்தை புறக்கணித்ததால் அவர்களது ஆசனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமிர்தலிங்கம் மற்றும் சில ரி.யு.எல்.எப் தலைவர்களும் சேர்ந்து சுயமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு சென்றார்கள். பல தமிழ் போராளிக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் உந்துதல் பெற்றது. இந்தோ – லங்கா ஒப்பந்தம் ஏற்பட்டதன் காரணமாக ஒரு யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்டாலும் அது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை.
அதேவேளை ரி.யு.எல்.எப் மற்றும் ஏனைய போராளிக் குழுக்கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதுடன் தமிமீழம் என்கிற இலக்கையும் கைவிட்டன, அனால் எல்.ரீ.ரீ.ஈ மட்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. இப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான இராணுவ விரோதி இந்திய இராணுவமே தவிர ஸ்ரீலங்கா இராணுவம் அல்ல.
இதேவேளை தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு மற்;றும் கிழக்கு மாகாணசபைக்கு மிகவும் அதிருப்தியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ரி.யு.எல்.எப் போட்டியிட மறுத்து விட்டதால், இந்தியா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த, அண்ணாமலை வரதராஜப்பெருமாளை வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முதலாவது(அது மட்டுமே) முதலமைச்சராக நியமித்தது.
1989ல் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது இந்தியாவின் கட்டாயத்தால் ரி.யு.எல்.எப்பும் போட்டியிட்டது. இந்தியா, ஈபிஆர்எல்எப், ரெலோ, மற்றும் ஈ.என்.டி.எல்.எப் போன்ற போராளிக் குழுக்களை ஒன்றுதிரட்டி மிதவாத ரி.யு.எல்.எப் உடன் சேர்ந்து ரி.யு.எல்.எப் கட்சியின் கீழ் அதன் சின்னமான கூரியனின் கீழ் போட்டியிட வைத்தது.
அமிர்தலிங்கம், மற்றும் அவரது சொந்த வழியில் அரசியலில் நன்கு பிரபலமான அவர் மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் சென்னையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள். இந்தியாவிற்கு சுயம் மேற்கொண்ட நாடுகடத்தலில் இருந்து முதலில் திரும்ப வந்தவர் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆவார்.
இநதியாவில் தனது மனைவி சரோஜினியுடன் (பின்னர் யாழ்ப்பாண மேயராக பதவியேற்ற இவரும்கூட எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்பட்டார்) வசித்து வந்த பிரபலமான யோகேஸ்வரன் இந்தோ – லங்கா ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தனியாக யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவிட்டார். அப்படிச் செய்வதற்கு முன்பு சென்னையில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டத் தலைவரிடம் அதற்கான உத்தரவை அவர் கேட்டுப் பெற்றிருந்தார்.
யோகேஸ்வரன்
எனினும் யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு திரும்பியபிறகு கிட்டத்தட்ட எல்.ரீ..ஈயினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை போன்ற நிலையிலேயே இருந்தார். அவரது நகர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வருகையாளர்களுக்கு மாத்திரம் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்திய இராணுவத்தின் வருகை வரைக்கும் யோகேஸ்வரன் ஒரு சூழ்நிலை கைதியை போலவே அடைபட்டுக் கிடந்தார். அதன் பின் அவர் கொழும்புக்குச் சென்று பம்பலப்பிட்டி,கொத்தலாவல டெரசில் உள்ள ஒர உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். அதைத் தொடர்ந்த அவரது மனைவி சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.
அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் தம்பதியினர்கள் கொழும்புக்கு திரும்பியதுடன், அவர்களுக்கும் மற்றம் எனைய ரி.யு.எல்.எப் அங்கத்தவர்களும் தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு வீடு தேவைப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ பகைமையை காட்டுவதால் அவர்களில் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக தங்க முடியவில்லை.
எனவே பாதுகாப்பான ஒரு வீடு அவசியமாக இருந்தது. முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினரான பி. சூசைதாசன் அவர்களும் மற்றும் முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களும் கொழும்பு – 7, பௌத்தாலோக மாவத்த(புல்லர்ஸ் வீதி) யில் உள்ள 342 – 2 ம் இலக்க வீட்டை அவர்களுக்காக ஒழுங்கு செய்தார்கள்.
அது ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மன்னாரை சேர்ந்த பிரபலமான ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானதாக இருந்தது. முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமினி திசாநாயக்கா இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமாதான முயற்சிகளையும் தீவிரமாக ஆதரித்தார்.
அவர் ஜேஆர். ஜெயவர்தனா அரசாங்கத்தின் கடைசிப் பகுதிகளில் சுயமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்த ரி.யு.எல்.எப் தலைவர்கள் நாட்டுக்குத் திரும்பி, பிரதான அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கான முயற்சியில் முக்கிய பங்கை வகித்திருந்தார்.
1988ல் காமினி திசாநாயக்கா அமைச்சராக இருந்த காலத்தில், ரி.யு.எல்.எப் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மகாவலி அமைச்சின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஆறு அங்கத்தவர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த வளாகத்தில் நிலை கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் நாவலர் மற்றும் தளபதி என்றெல்லாம் இளம் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் பிற்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயினரின் குற்றச்சாட்டுக்கு இலக்கானார். ஐக்கிய ஸ்ரீலங்காவுக்குள் பேச்சு வார்த்தை மூலமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை, தமிழீழக் கனவை அவர் விலை பேசும் முயற்சியில் இறங்கியிருப்பதாக புலிகள் கருதினார்கள்.
ஒரு காலத்தில் முன்னணி தமிழ் தலைவராக இருந்த அமீர் அண்ணன்தான், தமிழீழ விடயத்துக்கு துணை செய்தவரும் மற்றும் இந்த பத்தியின் எழுத்தாளர் உட்பட ஒரு தலைமுறையை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத கற்பனைக்கு தீ மூட்டியவரும் ஆவார். பின்னைய வருடங்களில் அவர் பின்பற்றிய நடைமுறைக்கேற்ற அணுகுமுறை இளைஞர்கள் குறிப்பாக தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களின் மயக்கத்தை கலைத்தது.
துரோகி அல்லது காட்டிக் கொடுப்பவர்
இதன்படி கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இருந்தவர்களை துரோகி அல்லது காட்டிக் கொடுப்பவன் எனப் பெயரிட்ட அமிர்தலிங்கம் அவர்களையே இப்போது எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அவர்களைப் போன்ற இதர தீவிரவாத இளைஞர்கள் துரோகி என அழைத்தார்கள்.
போராளிகளின் விரோதம் அமிர்தலிங்கத்தை நோக்கி திரும்பவதற்கான மற்றொரு காரணமும் இருந்தது, அது அவரது உண்மையான அல்லது கற்பனையான தமிழீழ காட்டிக் கொடுப்புடன் எந்தவித தொடர்பும் இல்லாதது.
தமிழ் போராளித் தலைவர்களால் தங்கள் ஆயுதங்கள் மூலம் கட்டளைகளை பிறப்பிக்க முடியுமாக இருந்தது, ஆனால் அவர்களில் யாருக்கும் அமிர்தலிங்கத்தைப் போன்ற பரவலான தலைமைத்துவ சான்றுக்கான அங்கீகாரம் இருக்கவில்லை. பதவியில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மிகவும் மதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள்தான்.
அவர் உயிரோடு இருந்தவரை அந்த சிம்மாசனத்தை எந்த ஏமாற்றுக்காரராலும் எளிதில் கைப்பற்ற முடியவில்லை. அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின்னர்தான் எல்.ரீ.ரீ.ஈ கூட்டாளிகள் பிரபாகரனை தேசிய தலைவர் என அழைக்க ஆரம்பித்தார்கள். ஸ்ரீலங்காவில் தனக்காக காத்திருக்கும் ஆபத்தைப் பற்றி அமிர்தலிங்கம் நன்றாக அறிந்திருந்தார்.
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவை நோக்கிய தனது நிரந்தரமான புறப்படுகைக்கு முன்னர் அமிர்தலிங்கம் சென்னையில் வைத்து முன்னாள் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான வீரசிங்கம் ஆனந்த சங்கரியை சந்தித்திருந்தார்.
உரையாடலுக்கு மத்தியில், ’ஸ்ரீலங்காவில் எங்களுக்காக என்ன தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்று எங்களில் சிலர் அறிவார்கள் சங்கரி! ஆனால் நாங்கள் எங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் அதை எதிர்கொண்டே ஆகவேண்டும்” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டாராம்.
இந்தப் பின்னணியில்தான் 25 வருடங்களுக்கு முன்பு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை நடந்தேறியது. அது நடைபெற்ற சமயம் நான் கனடாவிலிருந்தேன்.
எனினும் பலவேறு சந்தர்ப்பங்களில் ரி.யு.எல்.எப் உடன் தொடர்புள்ள, எம்.சிவசிதம்பரம், கலாநிதி.நீலன் திருச்செல்வம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், போன்ற பல்வேறு நபர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தேன், மற்றும் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், கலாநிதி.பகீரதன் அமிர்தலிங்கம், திரு.வி.ஆனந்தசங்கரி,மற்றும் திரு.பி.சூசைதாசன், மற்றும் திரு சோமசுந்தரம் (மாவை)சேனாதிராஜா அகியோருடன் இந்த சம்பவம் பற்றி விசாரித்துமிருந்தேன்.
அந்த சம்பாஷணைகளின் அடிப்படையிலும் மற்றும் இது தொடர்பான ஊடக அறிக்கைகள் மூலமாகவும் பெற்ற அறிவிலிருந்து இப்போது அந்த படுகொலையின் உடற்கூற்றியலை எழுதுகிறேன்.
புதுதில்லியின் கோபத்துக்கு அஞ்சி, அமிர்தலிங்கத்துக்கோ அல்லது இதர முக்கிய ரி.யு.எல்.எப் தலைவர்களுக்கோ இந்திய மண்ணில் வைத்து தீங்கிழைக்க எல்.ரீ.ரீ.ஈ முயற்சி செய்யவில்லை. (அதேவேளை தமிழ்நாட்டு மண்ணில் வைத்து ராஜீவ் காந்தியை கொல்வதற்கு இந்த எச்சரிக்கையை எல்.ரீ.ரீ.ஈ அலட்சியப் படுத்தியதால், அப்படிச் செய்ததற்கான விலையை தொடர்ந்து கொடுக்க வேண்டியிருந்தது).
அமிர்தலிங்கம் ஸ்ரீலங்காவுக்கு திரும்பியதும் அவர் அதன் இலக்காக மாறினார். தமிழ் தலைவர்களை அவர்களது பாதுகாவலர்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக எல்.ரீ.ரீ.ஈ, ரி.யு.எல்.எப் உடன் நேசத் தொடர்பு முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.
ரி.யு.எல்.எப் தலைவர்களிலேயே எளிதில் ஏமாறும் இயல்புள்ளவரான யோகேஸ்வரனை, எல்.ரீ.ரீ.ஈ தெரிவு செய்து அவரை அணுகியது. அன்பான யோகேஸ்வரன் எப்போதும் பையன்களில் சிலரினால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைக் கூட பொருட்படுத்தாது அவர்களிடத்து எப்போதும் ஒரு பரிவினைக் கொண்டிருந்தார்.
தமிழர்களிடத்து ஒரு பரந்த ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஆர்வம் உள்ளவராகவும் அதற்காக ரி.யு.எல்.எப் உடனும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உட்பட அனைத்து தமிழ் குழுக்களிடையேயும் சமரசத்தை ஏற்படுத்த அயராது உழைத்தவர்.
சிவகுமார் அல்லது அறிவு
யோகேஸ்வரனை முதலில் அணுகியவர் அறிவு என்றழைக்கப்படும் சிவகுமார் என்கிற எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஆவார், அவர் கொழும்பல் மற்றொரு பெயரில் தங்கியிருந்து எல்.ரீ.ரீ.ஈக்காக உளவு பார்த்து வந்தார்.
வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவரைச் சந்தித்து தமிர்களின் ஒற்றுமைக்கான கருத்து மற்றும் வழிகள் பற்றி கலந்துரையாட விரும்புவதாக தன்னிடம் தெரிவிக்கப் படடதாக அறிவு யோகேஸ்வரனிடம் சொன்னார். கொள்கையளவில் எப்போதும் ஒற்றுமையை எற்படுத்த ஆவலாக உள்ளவர் யோகேஸ்வரன்.
அதன் பின்னர் வவுனியாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயில் இருந்து விக்னா என அழைக்கப்படும் ஒருவர் தொலைபேசி மூலம் யோகேஸ்வரனைத் தெடர்பு கொண்டார்.
இயலுமானால் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரையும் அவருடன் வவுனியாவுக்கு அழைத்து வருமாறு யோகேஸ்வரன் கேட்கப்பட்டார். அப்போது சிவசிதம்பரம் ரி.யு.எல்.எப் இன் தலைவராகவும் மற்றும் அமிர்தலிங்கம் அதன் செயலாளர் நாயகம் ஆகவும் இருந்தார்கள்.
மனக்கிளர்ச்சி அடைந்த யோகேஸ்வரன் அந்தப் பணியை ஏற்றெடுக்கும் ஆபத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார், அது தமிழர்களின் பாரிய ஒற்றுமைக்கான நலன்களுக்கு வேண்டி செய்யப்படவதாக அவர் எண்ணினார்.
எல்.ரீ.ரீ.ஈ அந்த விடயத்தில் உண்மையாகவே வேட்கையுடன் உள்ளதா என்பதை நிச்சயப்படுத்தும் வரை அந்த விடயத்தை மறைத்து வைக்க அவர் தீர்மானித்தார்.
எனவே பெப்ரவரி 1989ல் யோகேஸ்வரன் தனது சகபாடிகளிடம் தான் மலைநாட்டுக்கு ஒரு குறுகிய விஜயம் மேற்கொள்ளப் போவதாக சொல்லிவிட்டு ஒரு ஜீப் வண்டியில் தனது மனைவி சரோஜினியுடனும் மற்றும் நம்பிக்கையான ஒரு சாரதியுடனும் கொழும்பை விட்டுப் புறப்பட்டார்.
கண்டிக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வசிக்கும் ஒரு உறவுக்காரரின் வீட்டில் சரோஜினியை இறக்கி விட்டு, பின்னர் அவர் வடக்கு நோக்கிப் பயணமானார். வவுனியா நகரத்திலிருந்து வடக்கே சில மைல்கள் தொலைவில் உள்ள பாண்டிக்குளம் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் யோகேஸ்வரன் புலிகளைச் சந்தித்தார்.
பாண்டிக்குளத்தில் வைத்துத்தான் தன்னை தொலைபேசியில் அங்கு வரும்படி அழைத்த விக்னாவின் அடையாளத்தை யோகேஸ்வரன் கண்டுபிடித்தார். விக்னா வேறுயாருமல்ல வவுனியா எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு தலைவராக பதில் கடமையாற்றி வரும் பீற்றர் லியோன் அலோசியஸ் என்பவர்தான்.
அலோசியஸ் யோகேஸ்வரனை மனப்பூர்வமாக வரவேற்றாலும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வராததையிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்தார்.
அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வந்ததும் அவர்களைச் சந்திப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ துணைத் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா தயாராக இருப்பதாக அலோசியஸ் யோகேஸ்வரனிடம் தெரிவித்தார்.
அவர்கள் வர முடியாததுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட யோகேஸ்வரன் முதலில் தான் தனியாக வந்தது ரி.யு.எல்.எப் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக என்று தெரிவித்தார். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் தான் விரைவிலேயே பாண்டிக்குளம் திரும்பி வருவதாக அவர் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயினரால் யோகேஸ்வரன் நன்கு உபசரிக்கப்பட்டார், மற்றும் அவருக்கு சுவையான கறியுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது. புலிகளினால் வழங்கப்பட்ட வரவேற்பையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்த யோகேஸ்வரன், மனைவி சரோஜினியையும் அழைத்துக் கொண்டு கண்டி வழியாக கொழுமபு திரும்பினார்.
கொழும்புக்கு திரும்பி வந்ததும் ஆரம்பத்தில் தான் மலைநாட்டுக்கு மட்டுமே போய் வந்ததாக யோகேஸ்வரன் காட்டிக் கொண்டார். இருந்தும் அவர் சொன்ன சில பொய்கள் அவரது கோரிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
புத்திசாலியான ஆனந்தசங்கரிதான் யோகேஸ்வரனது வண்டிச் சக்கரங்களில் ஒட்டியிருந்த சிவப்பு நிற மண் அடையாளங்கள் மலைநாட்டை அடையாளப் படுத்துவதல்ல, மாறாக வடக்கை அடையாளம் காட்டுவது என்று கண்டுபிடித்தார்.
மேலும் யோகேஸ்வரன் மலைநாட்டு மரக்கறியோ பழங்களோ கொண்டு வராது வடக்கை சேர்ந்த பலாப்பழ வகையை கொண்டு வந்திருந்தார். சங்கரி, யோகேசிடம் அவரது பயணத்தை பற்றி தொடர்ந்து கேள்விகளை கேட்டு வற்புறுத்தியபோது, முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறப்பினர் தான் சில காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக வடக்கே சென்றிருந்ததாகச் சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ உடனான தனது சந்திப்பை பற்றி அவர் அப்போது தனது சகாக்களிடம் வெளியடவில்லை.
பாண்டிக்குளம்
எனினும் எல்.ரீ.ரீ.ஈ உடனான சந்திப்புக்குப் பிறகு யோகேஸ்வரன் புலிகளிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். பாண்டிக்குளத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரை சந்திப்பதற்கு அமிர்தலிங்கம் மற்றம் சிவசிதம்பரம் ஆகியோரை எப்போது அழைத்து வரப்போகிறீர்கள் என அடிக்கடி வவுனியாவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமாக இருந்தன.
கொழும்பில் இருந்த அறிவு என்கிற சிவகுமாரும் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அதே விடயம் பற்றி வினாவிக் கொண்டிருந்தார். எனினும் யோகேஸ்வரனுக்;கு ரி.யு.எல்.எப் தலைவர் மற்றும் செயலாளரிடம் சொல்வதற்கு தயக்கமாக இருந்தபடியால் விடயத்தை இழுத்துக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் சிவசிதம்பரம் சென்னைக்குச் சென்றார் அங்கு அவரது மனைவி, அவரது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வருகிறார். யோகேஸ்வரன் இதைப்பற்றி எல்.ரீ.ரீ.ஈயிடம் சொன்னபோது, சிவசிதம்பரத்துக்காக காத்து காலத்தை வீணடிக்காமல் அமிர்தலிங்கத்தையும் கூட்டிக்கொண்டு வவுனியாவுக்கு வரும்படி அவரிடம் சொல்லப்பட்டது.
இறுதியாக யோகேஸ்வரன் இரகசியமாக அமிர்தலிங்கத்திடம் என்ன நடந்தது என்று சொல்லி எல்.ரீ.ரீ.ஈ அவரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். திடீர் கோபத்துக்கு பெயர்பெற்ற அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மீது ஆத்திரம் கொண்டு அவரை மோசமாக திட்டித்தீர்த்தார்.
தான் எல்.ரீ.ரீ.ஈயினை வடக்கில் வைத்து சந்திக்கவேண்டும் என்கிற யோசனயை முன்னாள் எதிhக்கட்சித் தலைவர் உறுதியாக நிராகரித்து விட்டார். யோகேஸ்வரன் இப்பொழுது பிரச்சினையில் மாடடிக் கொண்டார்.
இந்தக் கட்டத்தில் விடயங்கள் ஒரு வித்தியாசமான திருப்பத்தை அடைந்தன, ஜனாதிபதி பிரேமதாஸவின் அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈயுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் இறங்கியது. புலிகளின் அரசியல் ஆலோசகர், அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம் தலைமையில் மற்றும் அப்போதைய எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு தலைவர் யோகி என்கிற நரேந்திரன் உட்பட புலிகளின் குழுவொன்று பேச்சக்களுக்காக கொழும்பு வந்தது.
நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடாத பல புலி அங்கத்தவர்களும் அவர்களுடன சேர்ந்து கொழும்புக்கு வந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் விக்னா என்கிற பீற்றர் லியோன் அலோசியசும் இருந்தார். பேச்சுக்களை ஒரு கவசமாக பயன்படுத்திக்கொண்டு புலிகள் முறைப்படி கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குள் ஊடுருவினார்கள்.
அலோசியஸ் தான் தங்குவதற்கு நாரகேன்பிட்டியாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை கண்டுபிடித்துக் கொண்டார். அவர் திட்டமிட்டுள்ள அமிர்தலிங்கத்துடனான சந்திப்பை ஏற்பாடு செய்வது பற்றி யோகேஸ்வரனுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அமிர்தலிங்கம் மறுத்துவிட்டார் என்பதை சொல்லவும் இயலாமல் மற்றும் சொல்லவும் விரும்பாமல் யோகேஸ்வரன் ஒரு கடினமானதும் இறுக்கமானதுமான நிலைமையில் தத்தளித்தார்.
இதனால் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். யோகேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்த வேளையில் விசு என்கிற மற்றொரு புலித் தலைவருடன் அலோசியஸ் அவரை வந்து பார்த்தார்.