இரண்டு திரைகளைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியான YotaPhone கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் YotaPhone 2 இனை வடிவமைப்பது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி லண்டனில் வெளியிடப்படவுள்ளது.
இதன் திரையானது 4.7 அங்குல அளவுடையதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், முன்னர் வெளியாகிய YotaPhone ஆனது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய AMOLED திரையினையும், Quad Core 2.3GHz Qualcomm Snapdragon 800 Processor இனையும் கொண்டதாகக் காணப்பட்டது. |