விபத்தில் சிக்கிய மைக்கேல் சூமாக்கர் பேசும் சக்தியை இழந்தார்: நண்பர் தகவல்

380
விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார் பந்தய சாம்பியனான மைக்கேல் சூமாக்கர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் உட்கார்ந்துள்ளதாக முன்னாள் கார் பந்தய வீரரும், அவரது நண்பருமான பிலிப் ஸ்ட்ரீப் கூறியுள்ளார். படிப்படியாக குணமடைந்து வரும்போதிலும், அவரால் வாய் பேச முடியவில்லை, அவருக்கு நினைவு மறதி உள்ளது என்று கூறியுள்ள ஸ்ட்ரீப், என்னைப்போலவே அவரும் வீல் சேரில் தான் வருகிறார் என்று கூறினார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்ட்ரீப் தற்போது வரை வீல்சேரில் தான் வலம் வருகிறார். கடந்த டிசம்பர் 29-ந் தேதி ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கிய சூமாக்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் வரை சுவிஸ் நாட்டிலுள்ள லுசான்னே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், அதன் பின் ஓரளவு குணமடைந்து வீட்டிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது

SHARE