பொங்கி எழு மனோகராவில் பால்காரனின் காதல் 

372



 பான்யன் மூவிஸ் சார்பில் எஸ்.ஏ.பரந்தாமன் தயாரித்துள்ள படம், ‘பொங்கி எழு மனோகரா’. இர்ஃபான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி, சம்பத் ராம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.ஜே.ராஜ்குமார். இசை, கண்ணன். பாடல்கள்: அண்ணாமலை. படம்பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:1995&ல் நடக்கும் கதை. ஓர் இளைஞனின் வாழ்க்கையில், 23 நாட்களில் நடந்த முக்கிய சம்பவங்களை காட்சிகளாக்கி இருக்கிறேன். பால்காரன் வேடத்தில் இர்ஃபான் நடித்துள்ளார். என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களைத் தொகுத்து, அதற்கு கற்பனை வடிவம் தந்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். இர்ஃபானைக் காதலிப்பவர்களாக அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். காமெடி படமாக இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சி மனதை உருக வைக்கும். படம் யதார்த்தமாக இருக்கும். கண்ணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.இவ்வாறு அவர் கூறினார். இர்ஃபான், அருந்ததி நாயர், சம்பத் ராம், சி.ஜே.ராஜ்குமார், அண்ணாமலை, எஸ்.ஏ.பரந்தாமன் உடனிருந்தனர்

 

SHARE