வவுனியா, முல்லைத்தீவு ,மன்னார், கிளிநொச்சி, மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்-தொகுப்பு இரணியன்

726

1989ல் பதவியேற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்படுத்திய முறையே பிரதேச செயலக முறையாகும்.

ரணசிங்க பிரமதாசவின் அரசாங்கம் வறுமை ஒழிப்பு, கிராமியமட்ட விருத்தி ஆகியவற்றை ஒரு புதியமட்டத்தில் ஏற்படுத்தி வந்தது. சனசக்தித் திட்டத்தை வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகவும், பிரதேச நிர்வாக முறையை கிராமிய அபிவிருத்தி நடவடிக்கையாகவும் அரசாங்கம் செயற்படுத்தி வந்தது. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1656–1796) ஏற்படுத்தப்பட்ட கச்சேரி முறையை (மாவட்ட செயலகம்) மாற்றி, பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையை நோக்காகக் கொண்டு ஏற்கனவே உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக (A.G.A.Division) இருந்த நிறுவனங்கள் பிரதேச செயலகங்களாக மாற்றியமைக்கப்பட்டன. இதன் கீழ் முன்பு அமைச்சுக்கள், திணைக்களங்கள், கச்சேரிகள் என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட அலுவல்கள் பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை[தொகு]

இலங்கையில் மொத்தம் கிட்டத்தட்ட 331 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் உள்ளன.[2] பரப்பளவுமக்கட்தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தளவு தொடக்கம் கூடியளவு வரையான பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பிரதேசச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குருநாகல் மாவட்டம் மிகக்கூடிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

எதிர்ப்பார்க்கை[தொகு]

இதன் மூலம் மக்கள் தமது தேவைகளை விரைவாகவும், பணவிரயமின்றியும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குவதுடன், துரித முன்னேற்றத்தை அடைவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்க்கையாகும்.

பணிகள்[தொகு]

  • சமூகநலவிருத்தி (சுகாதாரம், நீர் விநியோகம்)
  • பொருளாதார விருத்தி (விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய முன்னேற்றத் திட்டங்கள், பாதை முன்னேற்றம், கைத்தொழில்)
  • திட்டமிடல் நடவடிக்கைகள் (ஆண்டுத்திட்டங்கள்)
  • பிறப்பு, இறப்பு விவாகப் பதிவு நடவடிக்கைகள்
  • ஓய்வூதியம் வழங்கல்
  • இணக்க சபைகள் மூலம் குடும்ப, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்தல்
  • அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் (மரம், வியாபாரம், வாகனம், சாரதி)

நோக்கங்கள்[தொகு]

பிரதேச செயலகங்களின் நோக்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

  • நிர்வாகத்தைப் பன்முகப்படுத்துவதன் மூலம் கிராமிய மட்ட முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தல்
  • பிரதேச முனெனேற்றத்தில் மக்கள் பங்குபற்றலை அதிகரித்தல்.
  • மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்து கொடுப்பதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல்
  • மக்களின் வாழ்க்கைச் செலவு, நேர விரயம், போக்குவரத்துச் செலவு என்பவற்றைக் குறைத்து வாழ்க்கைத்தரத்தைக் கூட்டுதல்.
  • தேசிய முன்னேற்றத்தை எய்துவதற்கு கிராமிய முன்னேற்றம் அவசியம் என்பதால் கிராமிய மட்டத்தை விருத்தி செய்தல்
  • கிராமிய மட்டத்திலான சமூக, பொருளாதார, கலாசார தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்தல்

வினைத்திறனான துரித தீர்மானங்களை எடுத்தல்

முக்கியத்துவம்[தொகு]

பிரதேச செயலகங்கள் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை சமூக. பொருளாதார முக்கியத்துவம், நிர்வாக, அரசியல் முக்கியத்துவமென இரு கட்டங்களாக வகுக்கலாம்:

சமூக, பொருளாதார முக்கியத்துவம்[தொகு]

  • மக்களின் தேவைகள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பூர்த்தி செய்யப்படுவதால் காலதாமதம், நேரவிரயம், போக்குவரத்துச் செலவு என்பன குறைவடையும். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயரும்.
  • மக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படும் போது அவர்களிடம் காணப்படும் விரக்தி அமைதியின்மை என்பன நீங்கி நாடு வளம் பெறும்.
  • கிராமிய மட்ட முன்னேற்றம் ஏற்படும். இதனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் சம அளவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
  • மக்கள் முன்னேற்றப்பணிகளில் சமூகச் செயற்றிட்டங்களில் பங்குபற்ற வாய்ப்புண்டாக்கிக் கொடுக்கப்படும். இதனால் மக்களின் பங்கு பற்றல் அதிகரிக்கும்.
  • நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசத்தையும் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடியுமானதாக இருப்பதினால் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.

நிர்வாக அரசியல் முக்கியத்துவம்[தொகு]

  • முன்பு கச்சேரிகள், உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் என்பவற்றை நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பிரதேச செயலகங்களை மட்டுமே நிர்வகிக்க வேண்டி உள்ளன. இதனால் நிர்வகிப்பதும் இலகு, கட்டுப்படுத்துவதும் இலகு, தீர்மானங்களைத் துரிதமாக மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
  • நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ நோக்கில் கட்டுப்படுத்துவது இலகுவாகவும், ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும்.
  • அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், தீர்மானங்கள் என்பவற்றை உடனுக்குடன் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பிவைக்க முடியும்.
  • மக்களின் பங்குபற்றல் அதிகரிப்பதனால் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்துடன் ஜனநாயக முறைக்கு மேலும் வலுவூட்டப்படும்.

வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு தொடர்ச்சியான நிலப்பகுதியில் அமையாமல் பல்வேறு தொடர்பில்லாத துண்டுகளாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் தெற்கிலும் கிழக்கிலும், அநுராதபுரம் மாவட்டமும்; வடக்கில் வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவும்; மேற்கில் வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவும்வெங்கலச்செட்டிகுளம் பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிரிவே வவுனியா மாவட்டத்தின் மிகச் சிறிய பிரதேசச் செயலாளர் பிரிவு ஆகும்.[1].

வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 43 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், வடக்கில் வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவும்,எல்லைகளாக உள்ளன. இது அநுராதபுரம் மாவட்டத்துடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.

இப்பிரிவு 614 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், அநுராதபுரம் மாவட்டமும்வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன. மேற்கு, வடக்கு, கிழக்குத் திசைகளில் இப் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தினால், சூழப்பட்டுள்ளது. கிழக்கில் இதற்குத் திருகோணமலை மாவட்டத்துடனும் ஒரு சிறிதளவு எல்லைப்பகுதி உண்டு.

இப்பிரிவு 408 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேசச் செயலாளர் பிரிவு (Vengalacheddikulam Divisional Secretariatஇலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கின் ஒரு பகுதியிலும் அநுராதபுரம் மாவட்டமும், மேற்கில் எஞ்சிய பகுதியிலும், வடக்கிலும் மன்னார் மாவட்டமும், மேற்கில் வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவுவவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும், எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 408 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

மடு பிரதேசச் செயலாளர் பிரிவு

மடு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மடு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 17 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. காக்கையன்குளம்விளாத்திக்குளம்மாளுவராயக்கட்டையடம்பன்பண்ணவெட்டுவான்தெக்கம்மடுகல்மடுபரசங்குளம்பெரியமுறிப்புமாதாகிராமம்பெரியபண்டிவிரிச்சான்இரணையிலுப்பைக்குளம்கீரிசுட்டான்பாலம்பிட்டி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளது. மேற்கில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுமுசலி பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும்; தெற்கில் வவுனியா மாவட்டம்அநுராதபுரம் மாவட்டம் என்பனவும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 553 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 48 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் பெரும்பகுதி தலைமன்னார்த்தீவு ஆகும். இதன் தலைநிலப்பகுதியின் வடக்கில் கடலும், மேற்கிலும், தெற்கிலும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவும்எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 212 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 36 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. தேவாம்பிட்டிவெள்ளாங்குளம்பாலியாறுஅந்தோனியார்புரம்இலுப்பைக்கடவைகள்ளியடிஆத்திமோட்டைபெரியமடுகாயாநகர்பள்ளமடுகோவில்குளம்விடலைத்தீவுபாப்பாமோட்டைபரப்புக்கடந்தான்கண்ணடிமினுக்கன்மாளிகைத்திடல்வெட்டையார்முறிப்புஅடம்பன்நெடுங்கண்டல்கருங்கண்டல்வண்ணாகுளம்ஆள்காட்டிவெளிஆண்டாகுளம்சோமபுரிபளிக்குழிகாத்தான்குளம்வட்டக்கண்டல்பாளையடிப்புதுக்குளம்பழைப்பெருமாள்கட்டு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் இந்தியப் பெருங்கடல்மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவும்; தெற்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும்; கிழக்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும்முல்லைத்தீவு மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 608 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அகக்கிமுறிப்புஅரிப்புசிலாவத்துறைகரடிக்குழிகொக்குப்படையான்கொல்லன்குளம்கொண்டச்சிமறிச்சுக்கட்டிமருதமடுமேதன்வெளிமுள்ளிக்குளம்பாலைக்குழிபண்டாரவெளிபெரியபுள்ளச்சி பொற்கேணிபூநொச்சிக்குளம்புதுவெளிசெவரியார்புரம்சின்னப்புள்ளச்சி பொற்கேணிவேப்பங்குளம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும்; மேற்கில் மன்னார்க் குடாக்கடலும்; தெற்கில் புத்தளம்அநுராதபுரம் மாவட்டங்களும்; கிழக்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 475 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்

ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 27 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அம்பாகமம்இந்துபுரம்கற்சிலைமடுகனகரத்தினபுரம்கணேசபுரம்கருவேலங்கண்டல்கதலியார்சமலங்குளம்கூழமுறிப்புமணவாளன்பட்டமுறிப்புமாங்குளம்முத்தையன்கட்டுக்குளம்முத்துவிநாயகபுரம்ஒட்டுசுட்டான்ஒலுமடுஒதியமலைபாலம்பாசிபண்டாரவன்னிபணிக்கன்குளம்பேராறுபெரியஇத்திமடுபெரியகுளம்புளியங்குளம்தச்சடம்பன்தட்டயாமலைதண்டுவான்திருமுறிகண்டிவித்தியாபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டம்புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும்; மேற்கில் துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவுமாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும்; தெற்கில் வவுனியா மாவட்டமும், கிழக்கில் கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவும், புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 46 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால்அலம்பில்அம்பலவன்பொக்கணைசெம்மலைகள்ளப்பாடுகணுக்கேணிகருநாட்டுக்கேணி,களிக்காடுகேப்பப்புலவுகொக்கிளாய்கொக்குத்தொடுவாய்கோவில்குடியிருப்புகுமாரபுரம்குமுழமுனைமாமூலைமணல்குடியிருப்புமாதவாலசிங்கன்குளம்முல்லைத்தீவுமுள்ளியவளைநீராவிப்பிட்டிபுதாரிக்குடாசெல்வபுரம்சிலாவத்தைதண்ணிமுறிப்புதண்ணீரூற்றுஉப்புமாவெளிவண்ணான்குளம்வற்றாப்பளைஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுபுதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பவற்றோடு வவுனியா மாவட்டமும்; தெற்கில் திருகோணமலை மாவட்டமும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 789 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆலங்குளம்அமைதிபுரம்அம்பலப்பெருமாள்குளம்அனிச்சியன்குளம்இயங்கன்குளம்கல்விளான்கோட்டைகட்டியகுளம்மல்லாவிபழையமுறிகண்டிபாரதிநகர்புகழேந்திநகர்புத்துவெட்டுவான்தெண்ணியான்குளம்தேராங்கண்டல்திருநகர்துணுக்காய்உயிலங்குளம்யோகபுரம்ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் கிளிநொச்சி மாவட்டமும், மன்னார் மாவட்டமும்; தெற்கிலும், கிழக்கின் ஒரு பகுதியிலும் மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கின் எஞ்சிய பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 329 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனந்தபுரம்இரணைப்பளைகோம்பாவில்மாளிகைத்தீவுமாணிக்கபுரம்மண்ணக்கண்டல்மந்துவில்புதுக்குடியிருப்புசிவநகர்சுதந்திரபுரம்தேராவில்தேவிபுரம்உடையார்கட்டுவல்லிபுரம்வள்ளுவர்புரம்விசுவமடு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கிலும், தெற்கிலும் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடல்கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு, என்பனவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 1009 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது பாண்டியன்குளம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில்உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அம்பாள்புரம்கரும்புள்ளியன்கொல்லவிளாங்குளம்மூன்றுமுறிப்புநாட்டான்கண்டல்ஒட்டறுத்தகுளம்பாலிநகர்பாண்டியன்குளம்பொன்னகர்பூவரசங்குளம்செல்வபுரம்சிரட்டிகுளம்சிவபுரம்வன்னிவிளாங்குளம்விநாயகபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், தெற்கில் மன்னார், வவுனியா மாவட்டங்களும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 490 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

வெலிஓயா பிரதேசச் செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேசச் செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 09 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 11,189 ஆகக் காணப்பட்டது.[2] இங்கு 18 கிராமங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்

கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரமாக அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இப்பிரிவு 318 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்தெற்கில் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 44 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின்தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

பொருளடக்கம்

 [மறை

பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இப்பிரிவு 439 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

SHARE