அஜீத் சிபாரிசு செய்த கார் ரேஸ் வீரர்.

410

 

சென்னை: கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சிபாரிசு செய்தார் அஜீத்.கார் ரேஸில் நண்பர்கள் ஆனவர்கள் அஜீத், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன். ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து ‘10 எண்ணறதுக்குள்ள’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம்-சமந்தா ஜோடி. இப்படத்தில் கார் ரேஸ் காட்சி இடம்பெறுகிறது. வேகமாக வரும் கார் திடீரென்று  குட்டி கரணம் அடிப்பதுபோல் திரில்லான காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதை பாதுகாப்பாக படமாக்குவது எப்படி என்பதுபற்றி அஜீத்திடம் யோசனை கேட்டார் விஜய் மில்டன். 

‘இதுபோன்ற விஷயத்தில் என்னைவிட அதிக விவரம் தெரிந்தவர் பார்முலா ஒன் கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன். அவரிடம் கேட்டால் விளக்கமாக சொல்வார். அவர் எனது நண்பர்தான். நான் கூறியதாக அவரிடம் சொல்லி தகுந்த ஆலோசனை கேளுங்கள்’ என்றார் அஜீத். இதுபற்றி நரேனிடம் பேசிய இயக்குனர், நடிகர் அஜீத் கூறியதை தெரிவித்தார். உடனே நரேன் இயக்குனருக்கு ஆலோசனை கூற ஒப்புக்கொண்டார். கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அந்த இடத்துக்கு நரேன் நேரில் வந்து தகுந்த ஆலோசனை வழங்கினார். அதன் படி காட்சியை படமாக்க உள்ளார் இயக்கு னர். நரேன், விஜய் மில்டனை சந்தித்ததால் அவர் இப்படத்தில் நடிப்பதாக கிசுகிசு வருகிறது. இதுபற்றி விஜய் மில்டன் கூறும்போது, ‘நரேன் படத்தில் நடிக்கவில்லை. ஆலோசனை கேட்கவே சந்தித்தேன்’ என்றார்.

SHARE