தனக்கு ரகசிய காதலன் இருப்பதாக பிரியாமணி கூறினார்….

373

 

சென்னை: தனக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறினார் பிரியாமணி.தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாத பிரியாமணி பிறமொழியில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:படங்களில் நடிப்பதுடன், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறேன். மேலும் இணைய தள பக்கங்களிலும் என் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து இடைவிடாமல் மெசேஜ் போடுகிறேன். அப்போது உடன் பணியாற்றும் நடிகர்கள் போன்றவர்களுடன் ஜோடியாக இருப்பதுபோன்ற படங்களும் வெளியிடுகிறேன்.அதைப் பார்த்ததும் குறிப்பிட்ட நடிகருடனோ அல்லது நபருடனோ நான் டேட்டிங் செய்வதாக கூறிவிடுகிறார்கள். 

இதேபோல்தான் கோவிந்த் பத்மசூர்யா என்பவருடன் இருப்பதுபோல் ஒரு படம் வெளியிட்டேன். உடனே எங்களுக்குள் காதல் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கோவிந்துடன் படம் எடுத்துக்கொள்வதாலோ அல்லது எடுத்துக்கொள்ளாததாலோ அவருடன் எனக்கு காதல் என்று அர்த்தமில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான். என் வாழ்க்கையில் ஸ்பெஷலான நபர் யாரும் இருக்கிறாரா என்கிறார்கள். ஆம், ஆனால் அது கோவிந்த் இல்லை. நேரம் வரும்போது அதை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் நானே தெரிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

SHARE