கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.
இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் கமலுக்கு பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. கமல்ஹாசன் தேர்தலுக்கு மறுநாள் ஆஸ்திரேலியா செல்கிறார். இதையடுத்து இன்று உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் கே.பாலசந்தர் மற்றும் கே.விஸ்வநாத்,ஊர்வசி ஆகியோர் கவுரவ வேடங்களில் நடிக்கிறார்கள். இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடம் ஒன்றில் நாசர் நடிக்கிறார்நடிகரும், கமலஹாசனின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் அரவிந்த இந்தபடத்தை இயக்குகிறார்.