ஆளில்லா விமானம் மூலம் பழமையான கிராமம் கண்டுபிடிப்பு

812
அமெரிக்காவில், ஆளில்லா விமானம் மூலம், ஆயிரம் ஆண்டு பழமையான கிராமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எதிரிகள் முகாம்களை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை, அவர்களது வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும், ஆளில்லா விமானங்கள் தற்போது, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க தொல்லியல் துறை ஆய்வாளர்கள், ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி, நியூ மெக்சிகோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கிராமத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து, புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர், ஜான் கென்ட்னர் கூறியதாவது:
நியூ மெக்சிகோவில், சாகோ கென்யா பகுதிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிராமத்திற்கு, “லூ ஜே’ என்று, தொல்லியல் துறை பெயரிட்டுள்ளது. பண்டைய அமெரிக்க நாகரிகத்தை வெளிப்படுத்தும் இந்த கிராமம் குறித்த தகவல், 1970ம் ஆண்டு தெரிந்தாலும், இதுவரை புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது, ஆளில்லா விமானத்தின் மூலம் இந்த கிராமத்தின் புகைப்படம் கிடைத்துள்ளது.
60 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தை நிர்வகித்த மூதாதையர், “கிவா’ (சின்னத்தம்பி)
என்றழைக்கப்பட்டார். இவர், பூஜைகள் செய்பவராகவும், கிராம கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும் இருந்தார். இவ்வாறு ஜான் கென்ட்னர் கூறி உள்ளார்.

 

SHARE