பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அமெரிக்கா நிறுத்தம்

744

 பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கி வரும் ராணுவத்துக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா, 2009ல், பாகிஸ்தானுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும், “கெர்ரி-லூகர் பர்மன்’ மசோதாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டு உள்ளார். இந்த மசோதாவின்படி, ஐந்து ஆண்டில், 45 ஆயிரத்து 847 கோடி ரூபாய், பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவியாக கிடைத்துள்ளது. இது தவிர, குடியுரிமை நிதியுதவியாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம், இந்த ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நீட்டிப்பது குறித்து, அமெரிக்க அரசு இதுவரை எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, அமெரிக்காவின் ராணுவ நிதி உதவிக்கு பதிலாக, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ரீதியான உதவியை வழங்கும்படி, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் வலியுறுத்தி வருகிறார். எனவே, பாகிஸ்தானுக்கு வழங்கக்கூடிய இந்த நிதியுதவியை, சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

SHARE