முதலில் ஒன்றை தெளிவுப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.
புத்த மதத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்ற என்னம் ஏன் ஏற்ப்பட்டது?
சில நன்பர்கள் தவறாக நினைப்பது போல் புத்த மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியோ.நையாண்டி செய்வதோ ஒருமதத்தை அதன் கொள்கைகளை இழிவுப் படுத்தி இதை விட எனது மதக் கொள்கைதான் சிறந்தது என்று நிறுபிக்கிற நோக்கில் செய்யப்பட்ட ஒப்பாய்வுவோ அல்ல.
இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைப்படி அதற்கு அனுமதியும் இல்லை.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய அனைத்து சீர்திருத்தவாதிகளையும்,தூதர் களையும் இஸ்லாம் கண்ணியப்படுத்தியது ஒரு இடத்தில் கூட முஹமது நபி(ஸல்) அவர்கள்
மோஸஸ் (மூஸா) பொய் சொல்லிவிட்டார் இயேசு (ஈஸா) பொய் சொல்லி விட்டார் என்று ஒரு இடத்தில் கூட சொன்னதில்லை.
மாறாக அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கண்ணியவன்கள் மீது இட்டுக்கட்டி பொய் சொல்லி விட்டார்கள் என்றே சொன்னார்கள் நீங்கள் திறந்த
மனதோடு நபிமொழிகளையும் குர்ஆனையும் ஆய்வு செய்தால் இவைகள் தெரிய வரும்.
இந்துத்துவவாதிகள்,பின்நவீனத்து வாதிகள்,கம்யூனிஸ்ட்கள்.
முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவர்கள் அனைவரும் தங்கள் எழுத்திலும் மேடை பேச்சிலும் புத்தரையும், சூஃபிஸ கொள்கையும் புகழ்வதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.ஒன்றுகொன்று முரண்பட்ட கொள்கையைச் சார்ந்தவர்கள் ஒரு இஸத்தை புகழும் போது இயல்பாகவே அந்த கொள்கையில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று அறிவதற்கு ஆர்வம் ஏற்படும் அப்படித்தான் புத்த மத கொள்கைகளையும் சூஃபித்துவத்தையும் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.
அதற்கு பிறகு பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
சூஃபிஸமும்,புத்த மதமும் இயங்குவியல் தன்மையற்ற துறவறத்தை போதிக்கின்ற மற்ற இஸங்களை நடைமுறையில் கொண்டு வர உழைக்கின்ற மாற்று கொள்கையுடைவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத மதங்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.
இஸ்லாத்தையும் அதன் உண்மை அடிப்படைக் கொள்கைகளான குர்ஆன் ஹதீஸ்களையும் மற்ற கொள்கையை சார்ந்த அனைவரும் கடித்துக் குதறுகிறார்களே ஏன்? பிராண்டி எடுக்கிறார்களே ஏன்? இதற்கும் பதில் கிடைத்தது ஆம் இஸ்லாம் இயங்குவியல் மார்க்க்கம் இவர்கள் செயல்படுத்த துடிக்கிற கொள்கைகளுக்கு தொந்தரவாக எதிராக நிற்கின்ற மார்க்கம்.
இதை நான சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு சொல்லவில்லை வரலாறுகள் இதற்கு சாட்சி பகர்கின்றன.
சரி விஷயத்துக்கு வருவோம்
புத்த மதம் தன்னுடைய இயங்குவியலற்ற தன்மையால் உலகமெங்கும் பெயர் சொல்லும்படியான பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ பெளத்தத்தால் ஸ்தாபிக்க இயலவில்லை.வேறொரு பண்பாட்டின் மீது வீரியமான தாக்கத்தை ஏற்ப்படுத்துமளவு வலிமை கொண்டதாக மாறவும் இயலவில்லை.பெளத்தம் சென்றடைந்த நாடுகளில் ஒழுக்கவாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்! எனினும் அந்நாடுகளின் சமூக அமைப்பையோ அரசியல் அமைப்பையோ பெளத்தம் மாற்றி அமைக்கவில்லை;அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை.
உலகின் பல்வேறு இடங்களுக்கும் பெளத்தம் பரவியுள்ளது.மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்ககாசிய நாடுகளிலும் பெளத்தம் பரவியதைப் போன்று வேறு சமயநெறிகள் பரவவில்லை.கவனத்தைக் கவரும்படி பெருந்திரளான மக்கள் பெளத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஏதேனுமொரு சமூகத்தின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்களை பெளத்தம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ சாதனை ஒன்றையேனும் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ வரலாறு நெடுக தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்காது.
நேர்மாற்றமாக வேறேதேனும் சமயத்தோடு அல்லது பண்பாட்டோடு மோதுகின்ற சூழல் எங்காவது ஏற்பட்டால் பெளத்தம் தோற்றுப் போயிருப்பதையே நாம் காண்கிறோம். பெளத்த மதம் இந்தியாவில் தோன்றியது.நீண்டதொரு காலம் இங்கேயே பல்கிப் பெருகியது.கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலும் நான்கில் மூன்று பகுதியினர் அதாவது ஏறக்குறைய மூக்கால் பாகம் பெளத்தத்தையே பின்பற்றி வந்தனர்.கி.பி. நான்காம் நூற்றாண்டில் ‘பாஹியான்’ இந்தியாவிற்கு வந்த போதும் இங்கு மக்களிடையே பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது.
ஆனால் அதன்பிறகு பிராமண மதம் தலைதூக்கியபோது ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குள் பெளத்தம் சுத்தமாக துடைத் தெறியப்பட்டுவிட்டது.இன்றைக்கு இவ்வளவு பெரிய நாட்டில் மிகக்குறைவான பெளத்தர்களே காணப்படுகிறார்கள்.
அவ்வாறே அசோகர் காலத்தில் ஆஃப்கானிஸ்தானத்தில் பெளத்தம் பரவியிருந்தது.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காபூலை ஆண்ட மன்னர் மீனாந்தர் பெளத்தத்தைத் தழுவியிருந்தார்.ஆனால் ஆஃப்கானில் இஸ்லாம் அடியெடுத்து வைத்ததும் ஒரு கணம்கூட அதனை எதிர்கொள்ள பெளத்தத்தால் இயலவில்லை.
’தாவோயிசம்’ உடைய ஒத்துழைப்பு உதவியின் கருணையினால் சீனாவில் பெளத்தம் பரவியது.இல்லையென்றால் கன்பூஸியஸின் சமயநெறி அதை ஒழித்தே விட்டிருக்கும்.
‘ஷிண்டோ’ சமயநெறியை அட்ஜெஸ்ட் செய்துகொண்டு கொடுத்தும் பெற்றும்தான் ஜப்பானில் அதனால் நிலைகொள்ள முடிந்தது.தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அடிப்படைக் கோட்பாடுகளையும் அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
எவ்விடத்திலும் அரசமைப்பையோ சீரழிந்துபோன சமூக அமைப்பையோ எதிர்த்து அது குரல் கொடுத்ததே கிடையாது.அரசியலுக்கு பெளத்தத்தில் இடமே கிடையாது.அரசை மற்றும் முயற்சிகளுக்கு பதிலாக, நல்ல அரசோ தீய அரசோ அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து ஒழகவேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.தீய சக்திகளுக்கு எதிராகவும் வாய் திறவாது கட்டுப்படவேண்டும் எனும் போதனைகளின்காரணமாக என்ன தான் கொடுமைப் படுத்தப்பட்டாலும் பெளத்தர்கள் அதிருப்திப் பெருமூச்சு விடுவதில்லை.
மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் தற்போது துன்பங்களாகத் தொடருகின்றன.கொடுமைப் படுத்துவோர் மீது யாதொரு குற்றமும் கிடையாது.நாமிழைத்த தீவினைகளின் பலாபலன்களே அவை! அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.(நூல்:Buddha and His Religion.P.150,151.)
ஒரு தீய அரசுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? அதிருப்தி அடைவதற்குப் பதிலாக இத்தகைய சமயங்களை அவை ஆதரித்து போற்றவல்லவா செய்யும்? தாம் செய்யும் தீமைகளுக்கு இவர்கள் எதிர்த்து முனகக் கூடமாட்டார்கள் என்பதால், அரசுகள் பெளத்தத்தை வரவேற்கின்றன அதே நேரத்தில், தடை செய்யாமல் கொடுமைகளைப் புரிகின்றன; லஞ்ச -லாவண்ய நிர்வாகத்தைத் தொடர்கின்றன.
பெளத்த மதம் பரவத்துவங்கிய உடனே மகத நாட்டு மன்னர் பீமபஸாரன் பெளத்தத்தைத் தழுவிக் கொண்டார்.பெளத்தத்துக்கு ஆதரவாக அரசாங்க ஆணையையும் வெளியிட்டார்.தொடர்ந்து அவருடைய மகன் அஜித்த சத்ருவும் பெளத்தத்தின் தீவிர ஆதரவாளாராக மாறினார். கோசல நாட்டு மன்னர் அக்னிதத்தன் வலியச் சென்று தன் நாட்டில் பெளத்தத்தை வரவேற்றார்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இன்னோரு வலிமைகொண்ட மன்னரான ஹரிஷ் பெளத்தத்துக்கு எல்லாவகையிலும் வீறு கொண்டு துணை புரிந்தார். பிராமணர்கள் அவரைக் கொலை செய்யவும் சதி செய்தனர்.
இந்திய அல்லாது திபெத்,மங்கோலியா நாடுகளில் கிப்லாய் கான் பெளத்தத்துக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.பெளத்தம் பரவுவது அரசியல் ரீதியாக தனக்கு நன்று என்பதை அவர் உணர்ந்தர்.பெளத்த சமயப் பிரச்சாரகர்களை சீனாவுக்கு மன்னர் மங்க்டே வரவழைத்தார். இவ்வாறாக பல மன்னர்கள் உதவி ஒத்தாசை புரிந்துள்ளதை வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இறுதியாக ஒன்று
ஆக நான் என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்தேன் என்பதை தெரிவித்து விட்டேன் இன்னும் வேறு கோனங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
புத்த மதம் இயங்குவியல் மதமா? என்ற கோனத்தில் செய்த ஆய்வு இதோடு முற்று பெறுகிறது.