பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும்
அதன் பின் விளைவுகளும்
புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளவைத்துவிட வேண்டும் என்பதில் ராஜீவ் காந்தி திண்ணமாக இருந்தார். அதனால் புலிகளை இணங்க வைக்க அவர் சில தந்திரங்களை கையாண்டார்.