தமிழ் மக்களின் பலம் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் மிகவும் பலமாக இருந்தது. அது போன்றுதான் இன்றும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பு சர்வதேச மட்டத்திலும் பலம் பெற்று வருகின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற பெரும் எண்ணங்கொண்டிருந்தவர் தந்தை செல்லா. 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் மாநாட்டிலே தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதனை அவர் அன்று கூறியிருந்தார்.
புத்தளத்திலும் காலியிலும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோது குரல் கொடுத்தவர்கள் நாங்கள். முஸ்லிம் அரசியல் வாதிகள் நாடாளுமன்றதத்தில் இருந்த போதும் தந்தை செல்வாதான் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுத்திருந்தார்.
தற்போது சிங்கள தேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகளினாலும் குறிப்பாக பௌத்த துறவிகளும் இந்த வார்த்தையை தவிர்க்குமாறு வற்புறுத்தி வருகின்றார்கள்.
இப்போது ஒருமித்த இலங்கை என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள். மாகாணத்திற்குரிய சகல அதிகாரங்களையும் பகிருகின்ற போது கேள்வி எழுப்பப்படுகின்றது.
அன்று விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திய பலத்துடனும், தமிழ் மக்களது பலத்துடனும் இருந்த போது முஸ்லிம் மக்களும் எங்களுடன் இருந்த போது சிறிய தேசிய இனங்களின் பலம் மிகவும் மேலோங்கி இருந்தது.
ஆனால் இன்றைக்கு எமது மக்களுடைய ஜனநாயக பலம் சர்வதேச தீர்மானங்கள் எங்களுக்கு பலமாக இருக்கின்றதா இல்லையா என்பதனை சிந்தித்து பாருங்கள்.
மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேற்பார்வை செய்வதற்கு இலங்கைக்கு வருகின்றார்கள்.
ஆயுத பலம் இல்லாமல் இருந்த போது ஆயுத பலமாக இருந்து, ஊழல் ஆட்சியை மாற்றுவதற்கு பலமாக இருந்தோமா இல்லையா?
தமிழர்கள் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இராணுவ பலம் மிக்க கொடூர ஆட்சியை மாற்றியிழுக்கின்றோம். இது பலம் இல்லையா இதனை எண்ணிப் பாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.
பொன்னாலையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் அபிலாசைகள், நிறைவேற்றப்பட்டு, அவர்கள் தமது சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து கௌரவமாக வாழவேண்டும்.
அதன் அடிப்படையிலேயே எமது தேர்தல் அறிக்கையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள், இணைந்த வடக்குகிழக்கில், சுயநிர்ணய அடிப்படையில், சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
அனைத்துலக நாடுகளில் பல்வேறுபட்ட சமஸ்டி கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சமஸ்டி என்பது தனிநாட்டுக்கான கோரிக்கையல்ல. இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்தர அமைதி தொடர்வதையே நாம் விரும்புகின்றோம்.
நாம் முன்வைத்துள்ள கோரிக்கையை புறந்தள்ளும் வகையில், தென்னிலங்கை சிங்களக் கடும்போக்குச் சக்திகள் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றன.
எம்மைப் பொறுத்தவரையில் 13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தராது என்பதை சிறிலங்கா அரசாங்கத்திடமும் அனைத்துலகத்திடமும் வெளிப்படுத்தியுள்ளோம்.
எதுஎவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரதீர்வை சமஸ்டி அடிப்படையிலேயே எட்ட முடியும்.
சமஸ்டி அடிப்படையில் தீர்வொன்று கிடைக்கப் பெறாது விட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஐக்கியமாக வாழ்வதென்பது கேள்விக்குறியாகிவிடும்.
தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதை ஏற்கமுடியாது.
தமிழ் மக்கள் தமது பலத்தை வெளிப்படுத்தி ஓர் அணியில் திரளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.
மகிந்த ராஜபக்வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி – ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.
என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.
ஷ மைத்திரிபால – ரணில் – சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.
இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.
இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.
இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.
ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.
ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.
அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.
அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.
இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.
ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.
அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?