முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் ஜந்துகோடி லஞ்சம்…….?

282

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் ஜந்துகோடி லஞ்சம்…….?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் ஜந்துகோடி லஞ்சம் வாங்கியே அவர் குற்றவாளி இல்லை என்று இன்று வடமாகாண சபையில் ஏக மனதாக தீர்மானித்து விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தாலும் யாரும் இனி நம்பமாட்டார்கள்.

சத்தியலிங்கம் குற்றவாளியல்ல- வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல

என்று வடக்கு மாகாண சபையில்

இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மீதான குற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

அதனால் அவர் குற்றவாளியல்ல என்று சபை அறிவித்தது.

அவர் குற்றவாளி இல்லை என்றால் அவரது அமைச்சுப்பதவி மீண்டும் வழங்கப்படவேண் டும்

இது தொடர்பில் முதலமைச்சரின் கருத்து வேறுபட்டதாய் உள்ளது

இதோடு நடந்த சம்பவங்களை பார்கின்ற போது மீண்டும் அமைச்சுப்பதவி கிடைக்கும் என்பது சந்தேகம் தான்

2013 ஆண்டு நடைபெற்ற தேர்தலின் அடிப்படையாக உதயமான வடக்கு மாகாண சபை கைதடி பகுதியில் சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன உள்ளிட்ட 38 உறுப்பினர்களுடன் இயங்கி வந்தது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன் புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதும் நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றுவதும் என்கின்ற விடயங்கள் தற்போது வட புல அரசியலில் பேசும் பொருளாக வெளிவந்துள்ளது. இதில் தற்போதைய முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்புவது என்றும் புதிய முதலமைச்சராக தற்போதைய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களை நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. அத்துடன் இது தவறின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பெயரும் முதலமைச்சர் பதவிக்காக முன்மொழிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன

இந்நிலைமையில் தான் ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 15 உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் உள்ளடங்களாக முதலமைச்சருக்கு எதிராகவும் ஏனைய ஆளுங்கட்சி 14 உறுப்பினர்களுடன் சில எதிர்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு ஆதரவாகவும் ஏட்டிக்கு போட்டியாக ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.எதிர்வரும் ஜுன் மாதம் 22 இடம்பெறவுள்ள சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபித்து தற்போதைய முதலமைச்சரை மீளவும் கொண்டு வர முயற்சிக்க ஒரு குழுவும் மற்றுமொரு குழு தற்போதைய முதல்வரை அகற்றுவது அதனுடன் புதிய ஆளும் கட்சி தலைவர் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது என்ற நிலைப்பாட்டில் நடவடிக்கை மேற்கொண்டு டார்.

இதனால் அடிக்கடி ஊடக சந்திப்புக்கள் இவ்விரு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தென்னிந்திய அரசியலாகவும் மாற்றமடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த செயற்பாடு சமரசத்திற்கான நடவடிக்கைகள் அதற்காகான வாய்ப்புக்கள் மேற்கூறப்பட்ட செயற்பாடுகளினால் இல்லாமல் சென்று விட்டது என கூறத் தோன்றுகின்றது.எனினும் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலப் பகுதியிலும் வட மாகாண சபை நெருக்கடியான சூழலுக்குச் சுமூகமானதொரு தீர்வு காண வேண்டுமெனில் தற்போதைய முதலமைச்சரே பதவியில் நீடிக்க வேண்டும் என இன்னொரு தரப்பும் தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவதுகுறித்து பேசி வருவதாக தெரியவருவதாக தெரிய வந்துள்ளது.தற்போது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாகநம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளமையே இவ்வாறான பிரச்சினை தோன்ற காரணமாக அமைந்து

இந்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப் ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்குதமது ஆதரவையும் வழங்கியுள்ளன.பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்க முடிவு செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது இதே வேளை வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் ஜனாதிபதியை சந்திக்க சென்ற ஆளுநர் ரெஜினோர் குரே  வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் அதனை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனே பார்த்துக்கொள்ளட்டும் என கூறினார் அத்துடன் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வரும் நல்லாட்சி அரசில் ஊழல் தொடர்பான வடக்கு முதலமைச்சரின் விடயத்தில் தலையிடுவது பொறுத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த பிரச்சினைகள் வடக்கு மாகாண சபையில் நடைபெற காரணம் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.  நடந்தது என்ன? அமைச்சர்களைப் பதவி நீக்க விசாரணைக்குழு பரிந்துரை -வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைத்தது  கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன கூட்டுறவுத்துறை மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலக வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். அவர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சொந்தக் கட்சியினராலேயே முன்வைக்கப் பட்டு வந்தன. அது தீவிரம் பெற்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை அடுத்து அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுயாதீனமான குழு ஒன்றை நியமிக்கின்றேன் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன் எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை விதிமுறை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கண்டறிவுகள் பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள் நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பதவி பறிபோகுமா ? விசேட அமர்வாக கூடிய சபை வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் விசேட அமர்வு ஜுன் 6 இல்  வடமாகாணசபையின் 94ம் அமர்வாக மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது . இதில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நெருங்கிய உறவினர் ஒருவருடை ய மரண சடங்கிற்காக சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் மேற்படி விசாரணை குழுவின் அறிக்கை சபையில் எடுத்து கொள்ளப்படவிருந்தது. ஆனால் மேற்படி விசாரணை குழு வடமாகாணசபையின் பிரேரணை அல்ல. அது முதலமைச்சருடைய பிரேரணையாகும். எனவே அந்த விசாரணை குழுவின் அறிக்கையை சபைக்கு கொண்டுவருவதற்கு உரிமை மற்றும் கடமை முதலமைச்சருக்கே உள்ளது. எனவே முதலமைச்சர் ஜுன் 7 மாகாணசபைக்கு கூறுவார். எனவே இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சருடன் பேசி இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளேன். எனவே குறித்த விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய ஜுன் 7 விசேட அமர்வு நடைபெறும் என்றார்.

தமிழரசுக்கட்சியின் சதிவலை – ஐங்கரநேசன் வெளியே – குருகுலராசா உள்ளே வடமாகாண அமைச்சர்கள் விடயத்தில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை பதவியிலிருந்து அகற்றிவிட்டு கல்வி அமைச்சர் குருகுலராஜாவை காப்பாற்றும் நோக்கில் தமிழரசு கட்சி மும்முரமாக செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மும்முரமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குருகுலராஜாவைக் காப்பாற்றும் கைங்கரியங்களில் கடுமையாக ஈடுபட்டு வந்தார். கல்வி அமைச்சரிற்கு எதிரான நடவடிக்கைகளினால் சீற்றமடைந்துள்ள அவர் இது தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவையிடம் காட்டமான கருத்துக்கள் சிலவற்றினை முன்வைத்துள்ளதாக சொல்லப்பபட்டது . அதே நேரம் பிரபல வர்த்தகரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐங்கரநேசனை பதவிநீக்கம் செய்யும் முனைப்பில் காய்களை நகர்த்தி  அதற்காக அவர் தனது கட்சி ஊடகத்தை கடுமையாகப் பயன்படுத்தி ஐங்கரநேசனை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றமையும் தெரிந்ததே. இவருக்குப் பக்கபலமாக சுமந்திரன் ஆதரவு அணியினரும் ஐங்கரசேனை இலக்குவைத்து அவரை வெளியகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்  வடக்கு மாகாணசபையைப் பெறுத்தவரை நான்கு அமைச்சர்களும் மோசடிகளில் ஈடுபட்டதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல எனக் கூறப்படுகின்றபோதும் ஐங்கரநேசன் முதலமைச்சருக்கு நெருக்கமாகச் செயற்பட்டமையே அவரை பழிவாங்குவதனூடாக முதலமைச்சரை ஓரங்கட்டும் வேலைத்திட்டமே அமைச்சர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் தற்போதுவரையான நடவடிக்கைகளும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்னர்.சகல அமைச்சுக்களின் மீதும் முறைப்படியான நீதியான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டால் நான்கு அமைச்சர்களும் பதவி இழக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றதுகல்வி அமைச்சர் த.குருகுலராசா மீதான குற்றச்சாட்டு கல்வி அமைச்சர் த.குருகுலராசா கல்விச் சேவைப் பின்புலத்திலிருந்து வந்தவர். வடக்கின் கல்வி வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வாறான சூழலில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னரும் கல்விப் புலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அமைச்சர் குருகுலராசா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாலரின் அதிகாரத்தை அமைச்சர் தனது கையில் எடுத்துள்ளார். இடமாற்றங்களின் போது அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது. செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் அமைச்சர் பயன்படுத்த வகை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டது. இதில் செயலாளரும் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்திருகிறார். இப்படியானதொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டபோது தலைமைச் செயலாளரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்துள்ளார். வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டு வருவதை ஆமோதிப்பது போன்று இது உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைச் சிறுமி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் குறித்துக் குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியரை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். இது மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம். எனவே கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உடனடியாகத் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும். அத்துடன் கல்வி அமைச்சின் செயலாலரும் அந்தப் பதவிலியிருந்து விலக வேண்டும். விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஆளும் கட்சி உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், தன்னுடன் வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசாவுடன் விசாரணைக் குழுவிடம் முன்னிலையாகியிருந்தனர். அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம், தவராசா குறுக்கு விசாரணை செய்திருந்தார். அதிகார வரம்பு மீறல், முறைகேடுகள், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இருக்கின்ற நிலையில், இளையவரான ம.பற்றிக் டிறைஞ்சன் இவரது அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார். இது இவர் செய்கின்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு இணங்கிச் செயற்படுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  மரம் நடுகை, பாதீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற கோதாவில் முன்னெடுத்துள்ளார். சுற்றுச்சூழல் விடயம், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கியைவு நிரலில் உள்ளது. இவற்றை கொழும்பு அரசுடன் சேர்ந்து திணைக்களம் உருவாக்கி மேற்கொண்டிருக்கவேண்டும். அப்படியல்லாமல் அமைச்சரை முன்னிலைப்படுத்தியே இவரது செயற்திட்டங்கள் அமைந்துள்ளன. இத்தகைய செயற்றிட்டங்களின் தொடக்க நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் அழைக்கப்பட்டிருதார். அவரே இவற்றை இயக்குவதான , பின்னணியில் இருப்பதான மாயை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளார். அதனை வைத்து தனது கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார். இவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களை, உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விவசாய கிணறு புனரமைப்பு, புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராகக் கடமையாற்றிய திருமதி மதுமதி வசந்தகுமார், இவரது அழுத்தங்கள் காரணமாகவே மாகாண சபை சேவையை விட்டு வெளியேறினார் என்று விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரை பதவி நீக்கம் செய்தமை உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர் நேரடியாக தலையீடு செய்து அழுத்தங்களை வழங்கியுள்ளார். இதேபோன்று யாழ்க்கோவிலும் தலையீடு செய்துள்ளார். இதனால் விசாரணைக் குழு விசனமடைகின்றது. பிந்திய செய்தியாக, யாழ்கோ பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனத்திலும் அழுத்தம் கொடுத்துள்ளார் என்று அறிகின்றோம். திணைக்கள அதிகாரிகள் மிரட்டப்பட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர் முன்னெடுத்த தன்னை முதன்மைப்படுத்திய செயற்திட்டங்களால் மாகாண சபை நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், அவரது செயலாளருமான பற்றிக் டிறைஞ்சன் ஆகியோர் பதவி விலக வேண்டும். வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக கொண்டு நடத்துவதற்கு எமது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய அமைச்சர்களது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. இதனால் அவர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப் படுகின்றார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தியவர்கள், விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை. எனினும் குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டன. ஆதாரங்கள் இல்லாததால் அவரும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். இதற்கிடையில் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில்  நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்ச்சியில் உரையாற்றியிருக்கும் அமைச்சர் ஐங்கரநேசன் மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது  . எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்கமுடியாது என்று தெரிவித்திருந்தார். விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை தமக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை மீது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் எதிராக வாதாடும் ஒருவர் அதனோடு தொடர்புடைய விசாரணைக் குழுவின் நீதிபதியாக இருந்து தீர்ப்பளிப்பதை தான் முரண்பாடாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை வடக்கு மாகாண சபையில் முதலமைச்சரால் சமர்பிக்கப்பட்டபின் அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே விவசாய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட முன்பு அது தொடர்பில் தகவல்கள் வெளியில் வந்து ஊகங்களும் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளும் வருவது எம்மைப் பாதிக்கும். நாங்கள் கூறிய விடையங்கள் பல அறிக்கையில் வெளியிடப்படவில்லை. கூறாத பல விடையங்கள் வெளிவந்திருக்கின்றன. பல விடையங்கள் பிழையானவை. சபை உறுப்பினர்கள் அனைவரது கைகளிற்கும் அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான விளக்கம் அளிக்கின்றேன் என்றார் விவசாய அமைச்சர் முதலாமிடம் வடக்கு மாகாண அமைச்சர்களிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில்

விவசாய அமைச்சரிற்கு எதிராக அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விவசாய அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும், 

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக் எதிராக 5 குற்றச்சாட்டுக்களும், கல்வி அமைச்சர் குருகுலராஜாவிற்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களிற்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் சிலர் விசாரணையின் போது சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேரடி ஒளிபரப்பிற்கு தடை – அச்சு ஊடகங்கள் பாவம் – கண்ணீர் வடித்த சி.வி.கே ஜுன் 14 ஆம் திகதி நடைபெறும் விசேட அமர்வில் ஊடங்கள் அமர்வினை இலத்திரணியல் ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதை தடை செய்வதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டிருந்தார்.  இலத்திரனியல் ஊடகங்களை நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதித்தால் உடனடியாகவே தகவல்களை வெளிக்கொணர்ந்துவிடும் இதனால் இங்கு அமர்விற்கு செய்தி எடுத்துச் செல்லும் அச்சு ஊடகங்கள் பாவம் என அவர் குறிப்பிட்டது கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை விசாரணை அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படமுன்பு ஊடகங்களால் அமைச்சர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என இது தொடர்பில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் அரசின் ஏஜன்ட் – சி.வி.கேயின் கருத்தால் சர்ச்சை கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்தின் ஆள். அவர் சட்டம் ஒழுங்கு தொடர்பான விடயங்களைக் கையாள அரசாங்கம் அனுமதிக்கிறது. வடக்கில் நிலமை அவ்வாறில்லை. வடக்கு முதல்வருக்கு அவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சந்தர்ப்பங்களில் அவற்றிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். கிழக்கு மாகாண முதல்வர் இவ்வாறன விடயங்களில் உடன் நடவடிக்கை எடுக்கிறார். அவர் பள்ளிவாயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் போது சிறப்பாக செயல்பட்டதை காண முடிகின்றது. என கூறினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவைத்தலைவர் மேற்குறித்தவாறு கூறியுள்ளார். வடக்கு அமைச்சர்கள் நால்வரும் அவுட் – வீட்டிற்கு அனுப்பினார் முதல்வர் ஐங்கரநேசன், குருகுலராஜா பதவி விலகல்- டெனிஸ்வரன், சத்தியலிங்கத்துக்கு கட்டாய விடுமுறை– புதிய விசாரணையின் பின் அவர்களும் வெளியேற்றம் வடமாகாண சபையின் அமைச்சர்கள் நால்வரும் பதவி விலகுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  வடமாகாண சபையில் அறிவித்துள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோக விசாரணைக் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களின் நிலை பற்றி இன்று வடமாகாண சபையில் விவாதிக்கப்பட்டது. அதன்போதே இந்த அதிரடி அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நான்கு அமைச்சர்களில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகிய இருவரும் நாளை நண்பகலுக்கு முன்னர் தாமாகப் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் கோரியுள்ளார். அத்துடன் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் மீது உடனடியாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், அவர்கள் இருவரும் ஒரு மாத விடுமுறைக் கடிதத்தை நாளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையில் இருக்கும் போது குறித்த இரு அமைச்சர்களோ அல்லது அவர்களின் பிரத்தியேக ஆளணியினரோ அந்தந்த அமைச்சு தொடர்பான விடயங்களில் தலையிடக்கூடாதெனவும் முதலமைச்சர் கண்டிப்பாக கூறியுள்ளார். பதவி விலகப்போகும் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படும் நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளையும் இனிமேல் தானே கவனித்துக் கொள்ளப்போவதாகவும், அமைச்சின் செயலாளர்கள் தனக்கே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதேவேளை நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக பதவி நீக்கம் செய்ய தமிழரசுக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய மதிநுட்பத்தால் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாகப் பதவியில் இருந்து வெளியேற்றாமல், கட்டம் கட்டமாக அவர்களின் பதவியை முதலமைச்சர் பறித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

முதலமைச்சரது உரையின் முழுவடிவம்

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே,அமைச்சர்களாகிய நாம் உரிய பயிற்சியுடன் இந்தப் பதவிக்கு வரவில்லை. சட்டங்கள் எமக்குச் சாதகமாக இருந்ததில்லை. அரசியல் சூழல் எமக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் எம் மக்களின் எதிர்பார்ப்பு எல்லை கடந்திருக்கின்றது. எம்மவர் எமக்குப் பெற்றுத் தருவார்கள் என்ற திடநம்பிக்கை அவர்களுக்குண்டு. அதை நாம் சிதைத்தலாகாது. எம் அமைச்சர்கள் குற்றங்கள் இழைத்தார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. சட்டப்படி அவை குற்றங்களா இல்லையா என்பதும் முக்கியமில்லை. அவை தண்டணைக்கு உட்படுத்தப்படக் கூடிய குற்றங்களா அல்லது வெறும் தவறுகளா என்பது கூட முக்கியமல்ல. அமைச்சர்களின் நடவடிக்கைகள் என்று கூறப்பட்டுள்ளவை மக்கள் மனதில் எந்த விதமான எண்ணங்களை, மனத்திருப்தியின்மையை, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன என்பன சிந்திக்கப்பாலன. அந்த வகையில் குறையோ நிறையோ, சரியோ பிழையோ, ஒரு செயல்முறையின் ஊடாக நாங்கள் வந்துள்ளோம். “ஒருவர் மேல்த்தான் குற்றம், முதலமைச்சர் மற்றையோரையும் தேவையில்லாது உள்ளடக்கியுள்ளார்” என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்தார்கள். விசாரணை அறிக்கை அதற்கு விடை பகர்ந்திருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் அரசியல் கலக்கப்பட்டமை வருத்தத்திற்குரியது. இது சம்பந்தமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். விசாரணைக்குழு முன் சமர்ப்பித்த குற்றச் சாட்டுக்களுக்கு மேலதிகமாக முறைப்பாட்டாளர்கள் வராமையால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே உரிய விசாரணைகள் உண்மையைக் கொண்டு வருவன. ஆனால் முறைப்பாட்டாளர் வராததால் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் செய்யாத நிரபராதிகள் என்று கூறித் திரிவது மன வருத்தத்திற்குரியது. அவ்விரு அமைச்சர்கள் சம்பந்தமாக குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது முழுமையான உண்மை அல்ல. முறைப்பாட்டாளர்கள் வராததால் அவர்கள் மீதான குற்றங்களைப் பரிசீலித்து முடிவுக்கு வர முடியாததாக இருந்தது என்பதே உண்மை. முறைப்பாட்டாளருள் ஒருவர் பகிரங்கமாகவே இம்மன்றில், தான் விசாரணைத் தினமன்று போக முடியாமைக்கான காரணங்களைக் கூறினார். மீண்டும் விசாரணை நடந்தால் தன்னால் தனது குற்றச்சாட்டுக்களை நிலை நாட்ட முடியும் என்றுங் கூறியுள்ளார். இரு அமைச்சர்களின் தன்நிலை விளக்கங்கள் எந்த அளவுக்கு மக்களின் நல்லெண்ணத்தை மீண்டும் நிலை நிறுத்துவன என்பது சர்ச்சைக்குரிய விடயம். ஆனால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய பல விடயங்கள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பந்தமாக விசாரணைக் குழுவொன்றை மீள் நியமனம் செய்ய முடியாது. அவர்கள் பேரிலான மேலதிக விசாரணைகள் காலத்தை விரயமாக்கும் செயல்கள். எமக்கிருக்கும் மிகுதிக்காலம் சொற்பமே. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் கூறியிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் எமது வேலைகளைத் துரிதமாகச் செய்ய எம்முள் ஒற்றுமை வேண்டும். சுயநலம் மேலிட்டால் பொதுநலம் மறந்து போய்விடும். சில அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்காது பிற நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்ப்படுவது நன்கு புலனாகின்றது. அவர்களுக்கு மத்திய அரசாங்கமும் அங்குள்ள அமைச்சர்களும் கூடிய முக்கியத்துவம் பெற்று விட்டார்கள். அதனால் எம்மைத் தூ~pக்கவும் தயங்குகின்றார்கள் இல்லை. இது ஒற்றுமையை வளர்க்காது ஒத்துழைப்பின்மையையே வலியுறுத்தும். அமைச்சர்கள் ஐவரும் ஒருமித்து வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும் முன் சென்றால்த்தான் மக்கள் பயன் அடைவார்கள். நாம் ஒருவரோடு ஒருவர் ஒத்துழையாது செயல்ப்படுவது எமது மக்களுக்கு நாம் செய்யுந் துரோகமாகும். எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்களோ இல்லையோ காணப்படுவார்களோ இல்லையோ இன்றைய நிலையில் அவர்கள் பதவியில் தொடர்ந்தால் எமது அமைச்சர்கள் மக்களின் ஏளனப் பார்வைக்கு ஆளாக வேண்டி வரும். அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். அதுதான் யதார்த்தம். நிர்வாக ரீதியான முறைகேடுகளும், ஒழுக்கவீனங்களும் நடைபெற்றுள்ளதாலும் ஒரு நேர்மையான கண்ணியமான நாணயமான நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்த்திருப்பதாலும் இந்த அறிக்கையில் உள்ள சில விடயங்களையும் மற்றும் வேறு காரணங்களையும் கவனத்தில் எடுத்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடொன்று எனக்குள்ளது. முன்னர் சாட்சியங்கள் வராமையால் விடுவிக்கப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தாது அவர்களைத் தண்டிப்பது பொருத்தமாகாது. இன்றைய இந்த நிலைமையை நான் ஏற்படுத்தவில்லை. இந்த மன்றின் உறுப்பினர்களே ஏற்படுத்தினார்கள். சில உறுப்பினர்கள் என்சார்பானவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு அமைச்சரை மட்டும் வெளியேற்ற முற்பட்டு அவர்களின் மதிப்புக்குரிய இன்னொருவரையும் பதவி இறக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். எமது வெளிப்படையான செயற்பாடுகள் சகலதையும் மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்று விட்டன. இது எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். குற்றங்கள் எனக் கூறப்பட்டவற்றை என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருந்தால் அவை பற்றி உரிய விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுத்திருப்பேன். சந்தி சிரிக்க மன்றில் எடுத்து பத்திரிகைகளில் விளாசித் தள்ளி அமர்க்களம் ஆக்கிவிட்டீர்கள். இப்பொழுது ஏன்தான் இவ்வாறு செய்தோம் என்று அல்லல் படுகின்றீர்கள். அமைச்சர்களின் மனங்களையும் புண்படுத்தியுள்ளீர்கள். இவ்வாறான புகார்கள் இனியாவது இரகசியமாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டால் உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம். பன்டோராவின் பெட்டியைத் திறக்காதீர்கள் என்றார்கள். திறந்தார்கள். அத்துடன் வேண்டத் தகாத பலவும் வெளியே வந்துவிட்டன. அது போல் இது வரை நடைபெற்ற செயல்பாடுகள் யாவும் எம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும். தனிப்பட்ட குரோதங்களுக்கும் பதவியாசைக்கும் பேராசைக்கும் எம்மை அடிமைப் படுத்திக் கொண்டால் வரக்கூடிய விளைவுகளுக்கு எங்கள் எல்லோரதும் இதுவரையிலான நடவடிக்கைகள் சாட்சியமாக அமைகின்றன. வேறெங்கோ இருப்பவரின் பதவி ஆசையானது எம்முள் சிலரை வழிநடத்திக் கொண்டிருக்கின்றதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. மக்கள் எமது வேலைகளைத் துரித கதியில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள். அவற்றை நேர்மையுடனும் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். இந்த நிலைமையில் இம்மன்றின் 16 உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் கோரி சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு மனுச் செய்திருந்தார்கள். எந்தவித குறைகளும் கூறப்படாமல் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று நான் அவர்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கத் தாமதித்தேன். ஆனால் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சர் இல்லை என்ற விடயத்தைக் கருத்தில் எடுத்;திருந்தேன். அதன் பின்னர் தான் விசாரணைக்குழு அமைக்க வேண்டி வந்தது. அண்மையில் நான் அவர்களிடம் குறித்த கோரிக்கையை நினைவு படுத்தி அந்தக் கோரிக்கை இன்றும் வலுவானதா என்று அறிய முற்பட்டேன். அதில் இருந்து தெரிய வந்தவை அக் கோரிக்கை இன்றும் வலுவுடையது என்பதே. நான்கு உறுப்பினர்கள் மட்டும் எந்த விதமாற்றங்களும் இனித் தேவையில்லை என்று கூறியுள்ளார்கள். அதில் அரசியல் கலந்திருப்பதைக் காண்கின்றேன். எனவே எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று சென்ற வருடம் கேட்டவர்கள் இன்று ஒருவரையும் மாற்றத் தேவையில்லை என்கின்றார்கள். மாற்றக் கோரும் கோரிக்கை என்முன் கிடப்பில் இப்போது உள்ளது. மற்றையவர்கள் போனால் முதலமைச்சரும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது சிலர் மத்தியில் நடைமுறைச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஒரு முதலமைச்சரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அமைச்சர்களை முதலமைச்சரே கட்சி வரையறைகளைப் பேணி மாவட்ட நலவுரித்துக்களைச் சிந்தையில் நிறுத்தி தேர்ந்தெடுக்கின்றார். அதற்கு சட்ட வலுவை ஆளுநர் அளிக்கின்றார். ஆளுநரால் தான்தோன்றித்தனமாக அமைச்சர்களை நியமிக்க முடியாது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர், தான் சிபார்சு செய்த அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களை நியமிக்கக் கோரும் பொறுப்பை உடையவர் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.  அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நடைமுறை மாற்றம் ஒன்றை எமது உறுப்பினர்களும் மக்களும் விரும்புகின்றார்கள் போலத் தெரிகின்றது. இவற்றை எல்லாம் கவனத்திற்கெடுத்து செயற்படுவது எனது தார்மீகக் கடமையாகும். இதன் நிமித்தம் கௌரவ அமைச்சர்கள் திரு.குருகுலராஜா மற்றும் திரு.ஐங்கரநேசன் ஆகியோரைத் தாமாகவே தமது பதவிகளைத் தியாகம் பண்ணுமாறு வேண்டிக் கொள்கின்றேன். மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணையொன்று நடைபெறும். அவர்களுக்கு எதிராகக் கிடைத்திருக்கும் மேலதிக விடயங்களும் அவ்விசாரணையின் போது பரிசீலனை செய்யப்படுவன. விசாரணை முடிவடையும் வரை இயற்கை நீதியையும் நல்லாட்சி விழுமியங்களையும் கருதி இரு அமைச்சர்களும் விடுமுறையில் விலகி இருக்க வேண்டும். தமது அமைச்சு விடயங்களில் அவர்களோ அவர்களின் பிரத்தியேக ஆளணியினரோ பங்குபற்றல் ஆகாது. அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை நான் தற்காலிகமாக ஏற்றுக் கொள்கின்றேன். அவ் அமைச்சர்களின் செயலாளர்கள் எனக்குப் பொறுப்புக் கூற வேண்டும். விசாரணையில் அவர்கள் விடுதலை அடைந்தால் திரும்பவும் பதவிகளில் தொடர்ந்து கடமையாற்றலாம். எனவே முதலிரு அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களையும் மற்றைய இருவரின் ஒருமாதத்திற்கான விடுமுறைக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் நான் எதிர்பார்க்கின்றேன். கூடிய விரைவில் புதிய விசாணைக்குழு நியமிக்கப்படும். வேண்டுமெனில் விடுமுறையில் உள்ள அமைச்சர்களின் விடுமுறைக் காலம் தேவைக்கேற்றபடி நீட்சி செய்யப்படும் என முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். 5 நாள் அமர்விற்கு 20 இலட்சம் வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினது செலவாக 3 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில் தொடர்பில் தாங்களும் விவாதிக்கவேண்டும் எனக் கூறி சபை அமர்வுகளை நடாத்திய மாகாண சபையினர் 20 இலட்சம் ரூபா நிதியை ஏப்பமிட்டது அம்பமாகியுள்ளது.வடமாகாண சபையின் இன்றைய அமர்வின்போது அது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வாயினாலேயே குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அமைச்சர்கள்மீதான விசாரணைக்காக மூன்று இலட்சமும் விசாரணை குறித்த 5 விசேட அமர்வுக்க 20 இலட்சங்களும் செலவிடப்பட்டுள்ளன. வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு. முதலமைச்சருக்கு எதிரான பிரேரணை கையளிப்பு வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வடமாகாண ஆளூநரிடம் ஆளும் கட்சியினர் ஜுன் 14 விசேட அமர்வின் பின்னர் கையளித்துள்ளனர். அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலமையில் வடமாகாண ஆளுநரை சந்தித்த மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்துள்ளனர்.அதேவேளை முதலமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 22 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர் என தெரியவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா உட்பட ஈபிடிபி மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை. வடமாகாணசபை குறைந்தபட்சமாவது இயங்குவதற்கு ஈபிடிபி இன் ஒத்துழைப்பே முதலமைச்சருக்கு கை கொடுத்து வந்துள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி ஜுன் (14) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது.  இந்நிலையில்இ குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.அந்தவகையில்இ வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும்இ ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படிஇ தமிழரசு கட்சியின் வடமராட்சி தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களான சுகிர்தன்இ சிவயோகன்இ தர்மலிங்கம் ஆகியோரும் தென்மராட்சி தொகுதியிலிருந்து சயந்தனும் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலிருந்து ஆர்னல்ட்இ பரஞ்சோதிஇ அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அரியரத்தினம்இ பசுபதிபிள்ளைஇ கல்வியமைச்சர் குருகுலராசா ஆகியோரும்இ மன்னார் மாவட்டத்திலிருந்து சிறாய்வாஇ வவுனியா மாவட்டத்திலிருந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்இ முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கமலேஸ்வரன் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர். இதேவேளைஇ ரெலோ கட்சியை சேர்ந்த மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன்இ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஜவாகிர்இ ஜயதிலக ஆகியோரும்இ சுதந்திர கட்சியிலிருந்து அகிலதாஸ் மற்றும் போனஸ் ஆசனம் மூலம் தெரிவான அய்யூப் அஸ்மீன் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர்.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த றிப்கான் பதியுதீன் இச்சந்திப்பில் காணவில்லை.இதேவேளை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் பதவி மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன்இ எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு அவைத் தலைவர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தமிழரசுக் கட்சி சூழ்ச்சி – முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கான அறிவிப்பினை தமிழரசுக்கட்சி அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து வடமாகாண ஆளுநரிடம் இன்றிரவு கையளித்துள்ளனர். மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு வடமாகாண ஆளுநரை சந்தித்து 22 பேரது கையொப்பமிட்ட கடிதத்தினை வழங்கியுள்ளனர். இந்த 22 பேரினில் அமைச்சர்களும்,தமிழரசுக்கட்சியினரும் உள்ளடங்கியிருந்ததாக சொல்லபப்படுகின்றது.எனினும் ஆளுநரை சந்திப்பதில் 16 பேர் கொண்ட குழுவே பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது. மாகாண எதிர்க்கட்சித் தலைவருடன் அளுநர் இரவிரவாக மந்திராலோசனை வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே நேற்று இரவு அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறார். தமிழரசுக் கட்சி உறுப்பிரகள் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை நேற்றிரவு கையளித்துச் சென்றனர். அதன் பின்னராக உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநரிடமிருந்து அழைப்புவந்ததாகத் தெரியவருகின்றது. இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தான் கையெழுத்திடவில்லை என தெரிவித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் கையொப்பமிட்டார்களா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் பதிலளித்தார். விக்கியைக் கவிழ்க்க ஐங்கரநேசனிடம் தூது சென்ற சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே அணியினர் தூதனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் நீங்களாக பதவி விலகியதாக இராஜினாமாக்கடிதத்தை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிரான அணியில் இணைந்துகொள்ளுமாறு விவசாய அமைச்சருக்கு தூது அனுப்பப்பட்டதாக தெரியவருகின்றது. எனினும் இதனை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் உடனடியாகவே நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் ஆயிரமாய் ஒன்றுகூடினர் – கைதடியிலிருந்து நல்லூர் கோயில் வீதி வரை-ஜுன்  வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தும் இளைஞர்கள் நேற்று ஒன்றுகூடினர். கைதடியிலுள்ள மாகணசபை முன் நூற்றுக்கணக்காய் கூடிய இளைஞர்கள் முதலமைச்சரிடம் தங்கள் ஆதரவை நேரில் தெரிவிப்பதற்காக வாகனங்களில் கைதடியிலிருந்து நல்லூர் கோவில் வீதி வரை திரண்டுவர அவர்களோடு பிறரும் வீதியெங்கும் இளைஞர்கள் அணிதிரண்டு முதலமைச்சர் இல்லத்திற்கு முன்னால் தங்கள் ஆரவுக் கோசங்களை எழுப்பினர். அதன்போது வெளியில் வந்த முதல்வர் ஆயிரக்கணக்காய் திரண்டுவந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு விம்மலுடன் கண்ணீர் மல்கினார். என்றும் உங்களுடன் நானிருப்பேன் – ஆதரவாளர்கள் முன் விக்கி என்றும் உங்களுடன் நானிருப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் முதலமைச்சர் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

அதன் போதே முதலமைச்சர் நான் என்றும் உங்களுடனே இருப்பேன் என தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார் எனக்காகத் திரண்டிருக்கும் உங்களிற்கு என்னால் ஒரே ஒரு வாக்குறுதியைத்தான் வழங்க முடியும். நான் என்றும் உங்களுடனேயே இருப்பேன். இதுவே எனது வாக்குறுதி என்றார் முதலமைச்சர் கோடிக்கணக்கில் நடந்த மருத்துவ உபகரண ஊழல் மோசடி – மக்கள் முன் அம்பலப்படுத்தினார் முதல்வர் வ டக்கு மாகணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இன்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும்  இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன் உரையாற்றிய முதலமைச்சர் உதாரணத்திற்கு ஒரு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதிலே ஊழல் செய்தால் அது மக்களையே பாதிக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக் கூறி வாங்கிய உபகரணங்களில் ஊழல் என்றால் பாதிப்பு மக்களுக்குத்தானே எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது, பணம் கிடைக்கிறது. வசதிகள் கிடைக்கிறது என்ற காரணத்தால் நாங்கள் செய்வது தார்ப்பரியம் விளங்காமல் போய்விடுகின்றது. இவ்வாறான ஊழல்களிற்கு எதிரான நான் நடவடிக்கை எடுக்கும்போது முட்டுக்கட்டை போடுகிறார்கள். என பூடகமாக உரையாற்றினார்.  எனினும் தனது அலுவலகத்துள் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது பாரிய மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாகக் கிடைத்துள்ள. தான் யாரிற்கும் அடிபணிந்துபோய் விசாரணைகளைக் கைவிடப்போவதில்லை என்றார். மருத்துவ ஊழல் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டவை அண்மையில் எழுத்து மூல உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பல கோடி பெறுமதியான மருத்துவ உபகரணக் கொள்வனவு ஊழல் குறித்தே என தகவலறிந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல தலைகள் சிக்கிவிடும் என்பதாலேயே குறித்த சுகாதார அமைச்சரைக் காப்பாற்ற தமிழரசுக் கட்சி கங்கணங்கட்டிநிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஆதரவு அணி ஆளுநரைச் சந்தித்தது-ஜுன் 16 இரவு  வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர் 15 பேர் கையொப்பம் இட்டு சத்திய கடதாசியுடன் வடமாகாண ஆளூநரிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர். வடமாகாண ஆளூநரின் வாசஸ்தலத்திற்கு ஜுன் 16 இரவு 9.45 மணியளவில் ஆளூநரை மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கடிதத்தினை கையளித்துள்ளனர். அக் கடிதத்தில் மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த கடிதத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் , எம்.தியாகராசா , ஜி. குணசீலன் , ஆர். இந்திர ராஜா, து.ரவிகரன் , கே.சிவநேசன், அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன் , விந்தன் கணகரட்னம் , ஏ.புவனேஸ்வரன் , செ.மயூரன் , ஜி.ரி.லிங்கநாதன், ப.கஜதீபன் ,சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில் ,எமக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கையுள்ளது. சபை அமர்வை கூட்டி முதலமைச்சரை பொரும்பான்மையை நிரூபிக்க கோரினால் , வாக்கெடுப்பில் நாமே வெற்றி பெறுவோம். அந்த வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக அமையும் என தெரிவித்தார். பல அமைப்புகள் கண்டனம்  சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கண்டித்துள்ளது வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அவரது பதவியைப் பறிக்க முற்பட்ட தமிழரசுக் கட்சி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்க முற்பட்டவரை நீக்க எடுத்திருக்கும் அவசரமான, அநீதியான நடவடிக்கை எனவும் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் எனவும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகள் துரோகம் செய்வது முதற்தடவையல்ல எனவும் இதற்கு முன்னர் அரங்கேறிய சம்பவங்களின் போது அமைதி காத்த தமிழ் மக்கள் இனியும் அமைதி காப்பார்கள் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு மக்களால் கொண்டுவரப்பட்டவரை எதேச்சாதிகாரமாகத் தூக்கியெறிய முற்பட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில்  வடக்கு முதல்வருக்கு ஆதரவு வழங்கும் வகையில்  பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.அதேவேளை முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூரில் ஒன்று கூடுமாறும் மக்கள் பேரவை அழைப்பு விடுத்தது. வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் பேரவை கண்டனமும் தெரிவித்திருந்தது.மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இருக்கின்றார்.யாழ் மாவட்டம் முழுவதுமாக நிர்வாக முடக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.இதற்கமைய தூர பேரூந்து சேவைகள் தவிர்ந்த ஏனைய உள்ளூர் பேரூந்து சேவைகள் நடைபெறவில்லை பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன் பூரண கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதே வேளை ஒரு சில தனியார் உள்ளூர் பேரூந்து சேவைகள் இயங்கி வருவதுடன் யாழ் நகரில் பொலீஸ் விசேட அதிரடி படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரின் வீடு முன்னால் திரண்ட மக்கள்-விசாரணையை கைவிடவேண்டாமென கோரிக்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இளைஞர்கள் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக  ;தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக  என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரும் கோரிக்கை விடுத்தனர் மக்கள் எழுச்சியே பதில் -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்களின் பலம் எனக்குள்ளது. எனவே என்னுடைய பாதை சரி என எனக்கு தோன்றுகின்றது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ். நல்லூரில் காலை ஒன்று கூடிய பொது மக்கள் பேரணியாக வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு சென்று தமது ஆதரவை முதலமைச்சருக்கு தெரிவித்தனர். இதன்போது, முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ” விரைவில் விக்னேஸ்வரன் தனது பதவியை பறிகொடுத்துவிடுவார் என, அண்மையில் சரத்பொன்சேகா, தெரிவித்தார். அப்போது, சரத்பொன்சேகாவுடன் எனக்கு தனிப்பிட்ட விரோதங்கள் எவையும் இல்லாத போது ஏன் இவ்வாறு தெரிவிக்கின்றார் என நான் சிந்தித்தேன். எனினும் அதற்கான காரணம் தற்போது புரிகின்றது. எனக்கான சதி ஏற்கனவே கொழும்பில் வைத்து தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சரத்பொன்சேகா அறிந்திருந்தமையாலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்வாறு சதி பின்னப்பட்டமை தொடர்பில் எனக்கு எவ்வித கவலைகளும் இல்லை.

அமைச்சர்கள் மீதான விசாரணையை கொண்டு எனக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என சதி செய்தே அவ்விசாரணை இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்களை நான் காப்பாற்ற முயன்றால் பக்கச்சார்பாக முதலமைச்சர் செயற்படுகின்றார் என தெரிவித்து என்மீது நடவடிக்கை எடுக்கலாம். இல்லையேல் தற்போது போன்று, அமைச்சர்களை பதவி விலக்கினாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம் என சிந்தித்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களின் எண்ணத்துக்கு மக்களே பதில் கூறிவிட்டனர். எமக்கு எத்தனையோ வேலைகள் உள்ளன. தேவைகள் உள்ளன. எனினும் வடமாகாண சபையில் தேவையற்ற விடயங்களை பேசி பேசியே நேரத்தை வீணாக்கியபடி உள்ளனர். அப்படியான நிகழ்வே இந்நிகழ்வும். நான் என்னுடைய கடமையை சரிவரச்செய்கின்றேன். கடமையை செய்வது ஒருவருக்கு தோல்வியோ வெற்றியோ இல்லை. அமைச்சர்கள் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று தனிப்பட்டரீதியில் என்னிடம் தெரிவித்தாலே நான் விசாரணை மேற்கொண்டு இருப்பேன். எனினும் உறுப்பினர்கள் சிலர் தமது பெயர்கள் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காக தனிப்பட்ட ரீதியில் என்னிடம் தெரிவிக்க வேண்டியவற்றை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தனர். எனவே தான் நான் விசாரணைக்குழுவை நியமித்தேன்.

அதனூடாக இரு அமைச்சர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் பதவிநீக்கப்பட்டனர். எனினும் மற்றைய இரு அமைச்சர்கள் மீது விசாரணைகள் முழுமையடையவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்லர் என தெரிவித்து வருகின்றனர். எனினும் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குற்றங்கள் நிரூபணமால் பதவி நீக்கப்படுவார்கள். இது முதலாவது வடமாகாண சபை. ஊழல்கள் குற்றங்கள் இதன்போதே களையப்பட வேண்டும். வளர விடக்கூடாது. மக்கள் பலம் எனக்குள்ளது. எனவே நான் செல்கின்ற பாதை சரியானது என எண்ணுகின்றேன்” என்றார்.   இளைஞர்கள் அரசியலில் உள்வாங்கப்பட வேண்டும். முதலமைச்சருடனான சந்திப்பில் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் தெரிவிப்பு  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சந்திப்பில் முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை எதிர்த்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு முழுமையான ஆதரவையும் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளனர். மேலும்தெரிவிக்கையில், தற்போது உள்ள அரசியல் பொறிமுறை சீரமைக்கப்பட்டு ஊழல் அற்ற தமிழ் அரசியல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் அத்தோடு உணர்வோடு பாடுபட்ட இளைஞர்கள் அரசியலில் உள்வாங்கப்பட வேண்டும். இவ் இளைஞர்களினூடாக அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.என வலியுறுத்தியுள்ளனர். தலைமை ஏற்க மக்கள் விக்கிக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து முதலமைச்சரின் இல்லம் வரை முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில்“சதிகாரர் வீட்டிலிருந்து வெளிவந்து தமிழருக்கு தலமையேற்க வா”“தலைவா வா தலைமையேற்க வா”, “விக்கி ஐயாவின் பேச்சு தமிழரின் மூச்சு” சுமந்திரன் ரணில் கூட்டு தமிழனுக்கு வேட்டு” சீனிக்கள்ளன் சிவஞானத்துக்கு வேண்டுமா முதல்வர் பதவி?”, “நிறுத்து நிறுத்து தமிழரசுக் கட்சியின் அடாவடியை நிறுத்து” என கோஷங்கள் எழுப்பினர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் முதலமைச்சர் சீ.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக முல்லைதீவு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்புவடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது  இதன் போது பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசுக் கட்சி நீதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நீதியின் குரலை நீக்குவதற்கு நீங்கள் யார்? குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா? பதிவி ஆசையே நம்பிக்கையில்லா பிரேரணை ஊழலை மறைக்க எதிரியூடன் கூட்டா? தமிழரசு கட்சியே நீ இலங்கை அரசின் கை கூலியா? கல்வி சீரழித்த கல்வி அமைச்சர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்இ போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையூம் ஏந்தியிருந்தனர். இதே வேளை முல்லைதீவு பகுதியில் முதலமைச்சருக்கு ஆதரவாக மாகாண சபை உறுப்பினர் து.ரவீகரன் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். முதல்வருக்கு ஆதரவாக முடங்கியது யாழ்ப்பாணம் சில கடைகளைத் திறக்குமாறு அச்சுறுத்தல்கள் வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சதி வேலைகளைக் கண்டித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக வடக்கு மகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வழமை நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.  வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து அவரை ஆட்சிக்கவிழ்ப்பு செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளைக் கண்டித்தும், முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வடக்கில் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக வடக்கின் பெரும்பாலான இடங்களில் வழமை நிலை மாறியிருப்பதை காண முடிந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், கடைகள் பூட்டப்பட்டிருப்பதனால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன இதனிடையே யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.  மேலும் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாககி முதலமைச்சர் இல்லம் வரை சென்றிருந்தது.இதனிடையே யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் கடைகள் பூட்டப்பட்டிருந்த பகுதிக்குச் சென்ற தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் கடைகளைத் திறந்து, வழமைக்குத் திரும்புமாறு வர்த்தகர்களை அச்சுறுத்தியிருப்பதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரிவிவிக்கப்படுகின்றது. எங்கள் அணியே ஊழலிற்கு எதிரானது – சுமந்திரன் விடுத்த விசேட அறிக்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கை ஊழலுக்கு எதிரான செயற்பாடேஆகும்.இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் “அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்” என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது. எமது வற்புறுத்தலின் காரணமாகத் தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பண மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார். இதன் பொழுதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம்முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன் வைத்தார்.  குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி திரு. சேனாதிராஜாவுடனும் பேசினார். ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார். நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார். ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாக க் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று திரு. சம்பந்தனும் திரு. சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறு நாள் மாகாண சபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்த நாள் மாகாண சபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார். நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம். ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும் என கூறினார். யு.எஸ். ஹோட்டல் சதித்திட்டம் அம்பலமாகியது mயு.எஸ். ஹோட்டல் சதித்திட்டம்   எனக் கூறப்படும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான சதித்திட்டம் ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால் முதலமைச்சருக்கு எதிராகத் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் இச் சதித்திட்டம் தொடர்பில் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் சதித்திட்டத்தில் பங்காளியாக இணையுமாறு அழைக்கப்பட்ட மாகணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தினால் 15.01.2017 அன்று அறிக்கை கையளிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த அறிக்கையினை விசாரணைக் குழு கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த சதித்திட்டம் தெடர்பிலான அறிக்கை இன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஒன்றரை வருடங்களிற்கு முன்னரே தமிழரசுக் கட்சியினர் சதித்திட்டம் தீட்ட முனைந்தமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய உடந்தையாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் இருந்துள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகி இருந்தது. சி.வி.கேயின் புதிய ஆடம்பர சிம்மாசனம் அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு சிம்மாசனம் போன்ற புதிய இருக்கை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த இருக்கையில் அன்றுதான் முதன்முதலாய் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அமர்ந்திருந்தார். இதற்கு முன்னர் இரண்டு இருக்கைகள் அவருக்காக வாங்கப்பட்டு அவை வசதியீனமாக இருப்பதாகக் கூறியே கடந்த அமர்வில் புதிய சிம்மாசனக் கதிரை அவரது அவைத்தலைவர் பதவியை அலங்கரித்தது. அதுவே தான் அவைத்தலைவராக உட்கார்ந்த கடைசி நாளின் கடைசிக் கதிரை என அவர் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். முதலமைச்சர் தொடர்பான பிரச்சரனைகளின் இழுபறி நீடித்து சி.வி.கே முதலமைச்சரானாலும் அவர் ஆசைப்பட்டு வாங்கிய அந்த சிம்மாசனத்தில் அமரப்போவதில்லை. முதல்வர் விக்கினேஸ்வரனே முதலமைச்சராக நீடித்தாலும் சி.வி.கே அவைத்தலைவராக அந்தச் சிம்மாசனத்தில் உட்கார வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது. தான் நடுநிலையான அவைத்தலைவர் என்ற நிலையைத் தியாகம் செய்தே அவர் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான பத்திரத்தை தன் கரங்களால் ஆளுனரிடம் கொடுத்திருக்கிறார். அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கதிரையில் அல்லவா இனி அமர முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். விக்னேஸ்வரனை அவசரமாக சந்தித்த சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் எம்.பிவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அவசரமாக சந்தித்து பேசியுள்ளனர்.இந்த சந்திப்பு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சுமூகமாக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள நிலையில் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு பேரம் பேசப்படுகிறது இந்திய அரசியல் மற்றும் தென் பகுதி அரசியல் போன்று என்னிடம் பேசப்படுகின்றது என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண சபையில் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 15 பேரும், முதலமைச்சர் தலைமையில் 15 பேரும் தற்போது இருக்கின்றனர். சி.வி.கே.சிவஞானம் தலைமையில் எங்களுடைய தரப்பில் எதிர்க்கட்சியையும் சேர்த்து 21 பேர் இருக்கின்றோம். இந்த நிலையில் இன்றைய தினம் சிலர் தொடர்பு கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பிற்கு வருமாறும் கேட்கிறார்கள். குறிப்பாக என்னிடம் தொடர்பு கொண்டு அமைச்சுப்பொறுப்பை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.  ஆனாலும், அமைச்சுப் பொறுப்புக்கு ஆசைபட்டு குறித்த செயற்பாட்டில் நான் இறங்கவில்லை. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே இறங்கியுள்ளேன். அற்ப சொற்ப அமைச்சுப்பதவிக்காக நான் நீதியை கொன்றுவிட்டு வர முடியாது. நடந்த பிழைகள் என்ன? என்பதினை ஏற்றுக்கொண்டு நகர வேண்டுமே தவிர, இரண்டு பகுதியிலும் மாறி மாறி பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோ, மாறி மாறி கட்சி தாவுவதோ தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தணிக்க சிறீதரன் முயற்சி வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சுமூகமாக தீர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருவதாக தெரவிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று மதியம் யாழ்ப்பாண மறை மவட்ட ஆயர் வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளாரை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நல்லை ஆதீனத்தின் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய ஞானதேசிக சம்பந்த சுவாமிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக கூறப்படுகிறது.குறித்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுகொடுக்க வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். >இதற்காகத்தான் நாம் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்தோம். இந்த இழப்புக்களின் மேல் நின்று நாம் எவரும் பிழையான வழிக்கு செல்லமுடியாது என சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஆகவே நீங்களும் குறிப்பிட்ட தரப்பினருடேன் பேசுங்கள் நாங்கள் விட்டுகொடுப்புடனேயே செயற்படுகின்றோம் என்றார்.மதத்தலைவர்களும் இந்த கருத்துக்கு உடன்பட்டதுடன் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்வதாகவும் கூறியதாக குறிப்பிடப்பட்பிட்டனர்.முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாக நிற்போம்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் வடமாகாண முதமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எத்தனிக்கும் அரசியல் சக்திகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கை தமிழ் அரசியல் போக்கில் ஊழல்கள் செய்ய எத்தனிக்கும் அரசியல் வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதாகவும்இ தூய்மையான அரசியல் போக்கிற்கான ஒரு பலமான அத்திவாரமாகவும் அமையும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் பாராட்டி வரவேற்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ‘வடமாகாண சபையில் தற்போது இடம்பெறுகின்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு  எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மூன்றாம் உலக நாடுகளின் சமகால அரசியல் தலைமைகளின் மத்தியில் அரசியல் வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகக் காத்திரமான முடிவினைத் துணிகரமாக மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சரைப் பல்கலைக்கழகச் சமூகம் சார்பாகப் பாராட்டி நிற்கின்றோம். வடமாகாண முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கும்இ அதனைச் சார்ந்த அரசியல் வாதிகளிற்கும் தமிழ் மக்களின் குரலாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இக்கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழப்பதோடு மாணவர்களிடமிருந்தான எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க நேரிடும். தமிழ் மக்களின் கொள்கைகளையும்இ அபிலாசைகளையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்லும் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் சார்ந்த அரசியல் வாதிகளின் நடவடிக்கையாகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கருதப்படுகின்றது.மேலும்இ இச் செயற்பாட்டிற்கு எதிராகவும்இ முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாகவும் நிற்போம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிலரின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை-அங்கஜன் எம்.பி வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் .அங்கஜன் இராமனாதனினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிரான கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகும் .இதன் தலைவரே இந்நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கின்றார்.எமது ஜனாதிபதியின் கொள்கையே இன்று இலஞச ஊழல் அற்ற நாட்டினை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது மட்டுமன்றி இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுத்து வருகின்றார் .  இப்படியிருக்க வடக்கு மாகாண சபையின் முதல்வர் இலஞ்ச ஊழல் தொடர்பாக எடுத்த எந்த ஒரு முடிவுக்கும் நாம் எதிர் செல்லவில்லை .எமக்கு அவ்வாறான பணிப்புரைகள் எதையும்ஜனாதிபதி எமக்கு தெரிவிக்கவும் இல்லை . இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வடக்கு முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவதென்பது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவே ஆகும் .இவர்களால் வெளியிடப்பட்ட முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்போ பொறுப்போ கிடையாது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து வடக்கு வாழ் தமிழ் உறவுகளுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் . வடக்கு முதலமைச்சர் இலஞ்ச ஊழலுக்கு எதிராக முடிவெடுக்கும் போது அதை தவறு என இன்னொரு கட் சியினரே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவிநீக்க செயல்படுகின்றனர் என செய்திகள் குறிப்பிடும் இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் சியின் பெயரை இதில் பயன் படுத்தி கொள்வது ஆரோக்கியமானதல்ல . வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த நல்ல விடயங்களையும் செயல்பாடுகளையும் முதன் முதலில் வரவேற்றவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்வடைகின்றேன் . எல்லா விதத்திலும் துன்ப துயரங்களை அனுபவித்த எம்மக்களின் வலிகளை நாம் உணரவேண்டும் .இதை உணராத சில அரசியல்வாதிகள் எதற்கும் கட்டுப்படாமல் மற்றவர்களின் அறிவுரைகளை பெறாமலும் எடுக்கும் முடிவுகள் வடக்கு மக்களுக்கு எதிராக எடுக்கும் முடிவுகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை .நாட்டின் அனைத்து மக்களினாலும் இலஞ்ச ஊழலற்ற நல்லாட்சி அரசு என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனாதிபதியை தலைவராக பிரதிபலிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்குமாறான இவ்வாறான செயல்ப்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் . என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . முதலமைச்சருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாண சபை உறுப்பினர் சிவகொழுந்து அகிலதாஸ் எதிராக செயற்பட்டிருந்தார். என்பதும் இங்கு சுட்டி காட்டத்தக்கது.

வடமாகாண முதல்வர் தலைமையிலான மாகாண சபை உறுப்பினர்கள் நல்லூர் ஆதீனத்தை சந்தித்தனர். வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை உறுப்பினர்கள் நல்லூர் ஆதீன கர்த்தாவான நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். வெள்ளிக்கிழமை(16) மாலை 06 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றதுடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் திருமதி அனந்திசசிதரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத நிலையிலேயே மாகாண சபையின் ஆளுங்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையெழுத்திட்டதாக அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர் யாசின் ஜவாகீர் (ஜனூபர்) தெரிவித்தார்.வெளிநாட்டுப் பணத்திற்காகவோ அமைச்சுப் பதவிக்காகவோ நாங்கள் ஒருபோதும் சோரம்போகவில்லை. எந்தச்சந்தர்ப்பத்திலும்; சோரம் போகவும் மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். வடக்கு முதலமைச்சருக்கு எதிராக ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். போர்ச்சூழலால் பாதிக்கப்பட்டு உடலில் குண்டுத் துகள்களை தாங்கிக்கொண்டு ஊனமுற்றும் வாழ்வாதாரத்திற்கு பரிதவிக்கும் அபலைகளின் நல்வாழ்வுக்காகவும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் நலனுக்காகவும், எந்தவிதமான காத்திரமான திட்டங்களில் அக்கறை காட்டாமலும் மூவின மக்களின் நல்லுறவுக்காக எந்தமவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாமலும் இருந்ததனாலேயே நாம் கையெழுத்திட்டோம். மாகாணசபையின் ஆளுங்கட்சி கொண்டுவந்த பிரேரணையில் கையெழுத்திடுவதன் மூலம் மாற்றம் ஒன்று கிடைக்கும் என நம்பினோம். அரசின் நிகழ்ச்சி நிரலுக்கோ பணத்திற்கோ நாங்கள் இயங்கவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நாங்கள் எந்தக் காலத்திலும் எதிராக இருக்கவில்லை. இருக்கவும் மாட்டோம். தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் இந்தப் பிராந்தியத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இற்றைவரை மாகாணசபை நிருவாக நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கினோம். முதலமைச்சரின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் கொண்டு வந்த பிரேரணைக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்கினோமே தவிர பின்னால் நின்று எவருக்கும் முதுகிலே குத்தவில்லை. சதி வேலைகளிலும் நாம் ஈடுபடவில்லை.  முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவில் எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு. மாகாண சபையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் அனுப்புவது எந்த வகையில் நியாயம். அவ்வாறெனில் முதலமைச்சரின் கீழான அமைச்சுக்கள் ஊழலற்ற நிர்வாகத்தை மேற்கொள்கின்றது என்பதை முதலமைச்சரால் நிருபிக்க முடியுமா? ஒருவருக்கெதிராக சுட்டு விரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களை பற்றி சிந்திக்க வேண்டியது கடப்பாடு அல்லவா? இவ்வாறு அவர் கூறினார். அன்புக்குரிய விக்னேஸ் – சம்பந்தன் எழுதிய லெற்ரர் இதுதான் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் முழுமையாக வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வட மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்கள் உரையின் பிரதியுடன் 14.06.2017 அன்று அனுப்பியிருந்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நான் பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது. விசாரணையைப் பூர்த்தி செய்து அவர்களது அறிக்கையை உங்களுக்குச் சமர்ப்பித்திருந்தார்கள். இதில் இருவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய இருவரும் குற்றவாளிகளாகக் காணப்படவில்லை. விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீங்கள் செயற்படப்போவதாக மாகாண சபையில் தெரிவித்திருந்தீர்கள். குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் இராஜினாமா செய்யுமாறு நீங்கள் கோரிக்கை விடுத்திருந்தீர்கள். அந்தத் தீர்மானத்துக்கு எவரும் முறைப்பாடு தெரிவிக்கவில்லை. விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நீங்கள் எடுத்த நடவடிக்கை தொடர்பிலேயே முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானதும் பொருத்தமற்றதாகவுமே பார்க்கப்படுகின்றது. 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நான் தங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசியபோது இத்தகைய நடவடிக்கை குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களினாலும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படக்கூடும் எனவும் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறும் கூறியிருந்தேன். >அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு இந்த விடயம் தொடர்பில் நீங்கள் பேசியிருந்தபோதும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான கௌரவ மாவை.சேனாதிராஜா அவர்களோடு இந்த விடயம் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடாமை தொடர்பிலும் எனது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தேன். அதன் பின்னர், அன்று நீங்கள் அவரோடு உரையாடியபோது குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதனை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். 14ந் திகதி புதன்கிழமை, குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களுக்கு எதிராகவும் தண்டனை நடவடிக்கையை அறிவித்திருந்தீர்கள். அதற்குப் பிற்பாடு இடம்பெற்றவை எல்லாமே நீங்கள் மேற்கொண்ட மேற்குறித்த நடவடிக்கையின் விளைவேயாகும். இச் சம்பவங்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமெனில், முதலில் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும், வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பாதிப்பதாகவும் அமைந்துவிடக் கூடாது. எனவே, உங்களது விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இது, நீங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என இரா.சம்பந்தன் கூறியிருந்தார். சம்பந்தனின் பதில் வரும்வரை எதையும் கூற முடியாது: விக்னேஸ்வரன் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அதற்கு அவர் பதில் தரும் வரைக்கும் தன்னால் எதனையும் கூற முடியாது என்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையை தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலமைச்சரின் வீ்ட்டில் அவரைச் சந்தித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,  எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று இரவு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. அதன்படி, ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, சம்பந்தனுக்கு பதில் கடிதம் தயாரித்துள்ளேன். அதை இன்று அனுப்பவுள்ளேன். நாங்கள் அனுப்பும் கடிதத்திற்கு சம்பந்தன் தரும் மறுமொழியி்ல் இருந்து தான் என்னவிதமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்பது தெரியவரும். ஆகவே சம்பந்தனின் பதில் வரும் வரைக்கும் என்னால் எதுவும் கூற முடியாது. அமைச்சர்கள் டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தால் நான் அதனை ஏற்றுக் கொள்ளத்தயாரா இருக்கிறேன் என்றார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவாகியிருக்கும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின் பின் சம்பந்தனுக்கு பதில்கடிதம் அனுப்பினார் விக்கி  தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அன்றைய நிலமை இவ்வாறு இருக்க

முதலமைச்சர் மேலும் கூறுகையில்………

பதவி நீக்கம் செய்யப்பட்ட வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதும் உள்ள குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக விசாரித்து, தண்டனை வழங்குவதற்காக மேலும் ஒரு விசாரணையை நடத்துவதற்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னரும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் வாய்மொழி மூல வினா ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது முதலமைச்சர் மேலும் கூறுகையில், கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றம் செய்யாமல் நடத்தப்படும் விசாரணை பலனளிக்காது என்பதாலேயே நாம் அமைதியாக இருந்தோம். இப்போது அந்த அமைச்சுக்கள் இரண்டினதும் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.ஆகவே இன்போது சட்டரீதியாக விசாரித்து குற்றவாளிகள் என்றால் சட்டரீதியாக தண்டனை வழங்குவதற்கான விசாரணை குழு ஒன்றுக்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

SHARE