வனவளப் பாது காப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் அரசாங்கம் ஈடுபடுகிறது!

777

இராணுவத்திடம் இருக்கும் தங்களுடைய நிலங்களைத் தங்களிடம் மீளவும் தாருங்கள் என்று எமது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அரசாங்கம் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ முகாம்களை விரிவுபடுத்துவதற்காக எமது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. இப்போது பச்சை முகமூடி அணிந்து கொண்டு காடுகளை விரிவுபடுத்துவதற்காக என்று சொல்லி எமது நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றன. மகிந்த அரசு வன்வலுவால் செய்ததை, மைத்திரி அரசு மென்வலுவால் சாதிக்கிறது

விவசாயிகள் இடப்பெயர்வின் காரணமாகத் தங்களுடைய பெரும்பகுதி நிலங்கள் பற்றைக்காடுகளாகி விட்டதால் அவற்றை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்துள்ளதாக முறையிட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது உரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களுக்கென்று நிலங்களைக் கையகப்படுத்தும்போது இங்கு எழும் போராட்டங்களால் அரசுக்குச் சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக அரசு இப்போது புது உத்தியைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. சர்வதேச அரங்கில் தனக்கு அவப்பெயர் ஏற்படாத விதத்தில் எமது நிலங்களை வனவளப்பாதுகாப்பு என்ற பெயராலும், வனவள ஜீவாராசிகள் என்ற பெயராலும் சட்டபூர்வமாகக் கையகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வால் காணிகள் பராமரிப்பில்லாமல்போக, அங்கு மரங்கள் வளர்ந்துள்ளன. அதைக் காரணம் காட்டியே வனவளத் திணைக்களம் தனது காடென்று சொந்தம் கொண்டாடுகிறது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தமிழ்பேசும் மக்கள் எல்லோருடைய நிலங்களும் இவ்வாறு பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணக் காணி ஆணையாரிடம் இது தொடர்பான தகவல்களைத் தருமாறு கோரியிருந்தேன். யுத்தத்தின் பின்னர் வவுனியாவில் 32,017 ஹெக்டயர் காணியும் முல்லைத்தீவில் 64,314 ஹெக்டயர் அளவு காணியும் வனவளத் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அறியத்தந்துள்ளார். மற்றைய மாவட்டங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அனுப்பிவைக்கப்படவில்லை. காடுகளின் அவசியம், சூழற்பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக யாரும் சொல்லி எங்களுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எங்கள் வாழ்நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் சூழல் பாதுகாப்பு என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்த அரசு பறிப்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட கூறாக சுற்றாடல் பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது. மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழுள்ள மூன்று செயற்திட்ட ஆக்கக்கூறுகள் சுற்றாடல் கூருணர்வுமிக்க பிரதேசங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எனவே அவை தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சுற்றாடல் அழுத்த மதிப்பீடு (EIA) அல்லது ஆரம்ப சுற்றாடல் மதிப்பீடு (IEE) என்பவற்றின் தேவைக்காக  இது ‘விபரிக்கப்பட்ட செயற்திட்டங்கள்’ என அடையாளாம் காணப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பாதுகாப்பு கொள்கை கூற்றுடன் (2009) இணங்கியொழுகுவதுடன் சேர்த்து தேசிய சுற்றாடல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் இணங்கியொழுகி சுற்றாடல் தாக்கங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு  சாத்தியமான செயற்திட்ட மாற்றீடுகளையும் தணிக்கும் நடவடிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது. இந்த அழுத்தங்கள் செயற்திட்ட தயாரிப்பு பணிகளின்போதும் அமுல்படுத்துகின்றபோதும் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவம்வாய்ந்த நிபுணர்கள் குழுவொன்றினால் மதிப்பீடு செய்யப்படுகின்றது. அந்தவகையில் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற  இந்த மூன்று நிர்மாண செயற்திட்டங்கள் நிர்மாண செயல்முறைகள் மற்றும் நடவடிக்கை முறைகள் என்பவற்றுடன் சேர்த்து சுற்றாடல் நேயம்கொண்ட செயற்திட்டங்களாக வடிவமைக்கப்படுகின்றன.

செயற்திட்டத்தின் தயாரிப்பு மற்றும் அமுல்படுத்தல் கட்டங்களின்போது எழலாம் எனக் கருதப்படுகின்ற சுற்றாடல் தாக்கங்களைத் தணிப்பதற்கு சுற்றாடல் முகாமைத்துவ திட்டத்தை முன்வைப்பதன் மூலம் ‘சுற்றாடல் பாதுகாப்பு’ உறுதிப்படுத்தப்படுகின்றது. சுற்றாடல் முகாமைத்துவ திட்டத்தில்  குறித்த தணித்தல் நடவடிக்கைகள் அமைவிடம், காலம், அமுலாக்கலுக்குப் பொறுப்பான முகவர் நிலையம் ஆகிய விபரங்களுடன் தரப்பட்டுள்ளன. நிர்மாண கட்டத்தில் பெரும்பகுதியான ஆக்கத்திறனில் பாதகமான அழுத்தங்கள் குறிப்பிடப்பட்டன. அவற்றை செயற்திட்ட முன்மொழிவாளர்கள் மற்றும் ஏனைய பங்கீடுபாட்டாளர்கள் ஆகியோர் பொருத்தமான முறையிலும் உரிய நேரத்திலும் தலையிடுவதன் மூலம் குறைத்துக்கொள்ளவும் தணித்துக்கொள்ளவும் முடியும்.

இன்று International Day of Forests எனப்படும் பன்னாட்டு வன நாள் ஆகும். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் நாளன்று சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறன.

உலகளவில் காடுகளுக்கு நேரும் பேராபத்தை கட்டுப்படுத்தும் முகமாகவே இன்றைய நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

உலக வெப்பமயமாதல் மற்றும் மழை அற்றுப்போதல் போன்ற காரணங்களுக்கு காடழிப்பு ஒரு முக்கியாமான பிரச்சினையாக இருந்துவருகின்றது. பூமியின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கின்ற செயற்பாடாக காடழிப்பு நிகழ்ந்துவருகிறது.

காடுகள் மனிதர்களாலும் இயற்கையாலும் அழிக்கப்படுகின்றன. பாரிய மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்தல், காடுகளுக்கு தீ மூட்டுதல் உள்ளிட்ட மனித செயற்பாடுகள் வனங்களின் பாதுகாப்பை சீர்குலைக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை காடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்கள் பரவலாக காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் நிலப்பரப்பு அளவில் அதிகமான மரங்களால் நிறைந்த மாவட்டமாக விளங்குகின்றது.

யாழ் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் காணப்பட்டு யாழ்ப்பாணம் பனையின் தனித்துவ பிரதேசமாக விளங்குகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டுப் போரின்போது வடக்கு கிழக்கில் அதிகமான காடழிப்பு நிகழ்ந்தது. குறிப்பாக இராணுவத் தளபாடத் தேவைகளுக்காக அதிகமான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் அதிகமான பனை மரங்களை வெட்டி தமது காவல் அரண்களைப் பலப்படுத்தியதாக கடந்தகால செய்திகள் கூறுகின்றன. அதேபோல மோட்டார் எறிகணைகள் மற்றும் ஆட்லறி உந்து கணைகள் ஏராளமான பனைமரங்களை தலையற்ற முண்டங்களாக மாற்றின.

இலங்கையில் காடுகளைப் பாதுகாக்கும் அமைப்பாக வனவள பாதுகாப்புத் திணைக்களம் விளங்குகின்றது. அதே போல் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களது “வன வள பாதுகாப்பு பிரிவு” காடுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தது.

வன்னியில் விடுதலைப் புலிகள் காடுகளைக் காத்தது மட்டுமன்றி புதிதாக காடுகளையும் உருவாக்கிவைத்தனர். குறிப்பாக வன்னிப் பிராந்தியமெங்கும் காணப்படும் தேக்கு மரக் காடுகள் விடுதலைப் புலிகளின் வளர்ப்பாகும். 1990ஆம் ஆண்டளவில் தாண்டிக்குளம் பகுதியில் நடப்பட்ட தேக்குமரக் காடும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டப்பட்ட தேக்கு மரக் காடுகளும் விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்பு முகாமைத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதுமட்டுமன்றி ஏராளமான மா மரங்கள் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை நெடுகிலும் நாட்டப்பட்டதுடன் மர முந்திரிகை மரங்கள் யாழ்ப்பாணம்-மன்னார் நெடுஞ்சாலை நெடுகிலும் நாட்டபட்டன. இவை அனைத்தையும் இன்றும் கூட குறித்த சாலைகளால் பயணிப்பவர்கள் காணலாம்.

யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்த விடுதலைப் புலிகளின் பெரும்பாலான தேக்கு மரக் காடுகள் இராணுவத்தாலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்கினாலும் அழிக்கப்பட்டதுடன் வெட்டிக் களவாடப்பட்டும் உள்ளன.

1990 காலப்பகுதியில், யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் வீதியோரங்களில் அதிகமான பனை மரங்களை நாட்டியிருந்தனர் என்பதற்கு இன்றும் பல வீதிகளின் ஓரங்களில் வரிசையாக நிற்கும் பனை மரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிரதேச மக்கள் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கையின் யானைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும், யானைகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு 270 யானைகளும், யானைகளால் ஆண்டுக்கு 70 மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

வில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்து மீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வன வள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .

மன்னார் வில்பத்து பகுதில் அமைத்திருந்த முஸ்லிம் கிராமம் ஒன்றில் வாழந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப் பட்டு வெளியற்றப்பட்டிருந்தனர். அங்கு முஸ்லிம்கள்    24 ஆண்டுகளுக்கு முன்னர் நீண்டகாலமாக வாழ்ந்தமைகான ஆதாரம் இருப்பதாக பிரதேச  முஸ்லிம்கள் தெரிவிப்பதுடன் அங்கு முஸ்லிம் மையவாடி ஒன்று இருப்பது அதற்கு போதுமான ஆதாரம் என்றும் தெரிவிகின்றனர் .

கடும்போக்கு  அமைப்பான பொது  பல சேனா முஸ்லிம் மீள் குடியேற்றம் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து . அரச அதிகாரிகள் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது .

குறித்த சிங்கள பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவலில் படி , அங்கு இருப்பவர்கள் அப்படி வெளியேறா விட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. என தெரிவித்துள்ளதுடன்

வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது இக்குடும்பங்கள் சரணாலயத்துக்கும் வனவளப் பாதுகாப்பு பிரதேசத்திலும் குடியேறியிருப்பதாக தெரிய வந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

காணி அதிகாரப் பகிர்வு பற்றி அதில் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்கள் திருப்தியளிப்பதாகக் காணப்படவில்லை. மத்திய அரசின்கீழ் காணி அதிகாரம் இருந்த வேளையிலே அரசுக்குச் சொந்தமான காணிகள் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் பாதுகாப்பு, தொல்பொருளியல் பாதுகாப்பு என்று பல்வேறு விதமான கோணங்களில் எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளிலே அவர்களது படுக்கையறை தொடக்கம் சமயலறை வரை எல்லைக் கற்களை நாட்டியுள்ளார்கள். இவ்வாறாக காணிகள் அனைத்தையும் பறித்துவிட்டு காணி அதிகாரத்தை மாகாணத்திற்குத் தருகின்றோம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே,  நாம் ஒன்றாகக் கதைத்துப் பேசி, குறிப்பிட்ட ஆண்டை எல்லையாக வைத்து, அந்த ஆண்டில் இந்தக் காணிகள் என்ன நிலையில் காணப்பட்டதோ அந்த நிலையிலிருந்து நகர்வதற்கான ஒரு முன்மொழிவு உட்புகுத்தப்பட வேண்டும். இதேபோல்தான் கடலோரப் பாதுகாப்புத் தொடர்பாகவும் பல்வேறுவிதமான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அமைச்சு மட்டங்களிலே இருந்து கடற்றொழிலாளர்களது கடற்றொழிலைப் பாதிக்கின்ற வகையிலே முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளை மற்றும் வேலைகளைத் தடுப்பதற்கான உயர் சட்டவாக்கங்கள் வகுக்கப்பட்டு, அந்த நிகழ்வகளிலிருந்து மக்களுக்கு விடிவு ஏற்படுகின்ற வகையிலே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேபோல் காணி அதிகாரத்தைப் பொறுத்த வரையிலும் எமது மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் செயப்பட வேண்டும். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் எங்களது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகள், அவர்களது வாழ்வாதாரத்திற்கான வயல் காணிகள் இன்று வேறு நபர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவை யாவும் மக்களுக்குத் திரும்பவும் வழங்கப்படக்கூடிய ஒரு பொறிமுறை உருவாகப்பட வேண்டும். ஆனாலும் நேற்றைய விவாதத்திலே கலந்து கொண்ட கெளரவ அமைச்சர் கிரிஎல்ல அவர்கள் காணி ஆணைக்குழு நிறுவப்படும். இதேபோல் சுயாதீனப் பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இவை எமக்கு வேதனையளிக்கின்ற விடயங்களாக இருக்கின்றன.

ஆகவே, கையகப்படுத்தப்பட்ட எமது மக்களது காணிகளைத் திரும்பவும் வழங்குவதற்கான ஒரு நேர அட்டவணை – கால அட்டவணை வகுக்கப்பட வேண்டும். இந்தச் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினுடைய நிலைப்பாடு என்னவென்பது மீளவும் பரிசீலிக்கப்பட வேண்டும். ஏனெனில், யுத்தத்திலே தோற்றுப் போயிருக்கின்ற, யுத்தத்திலே நொந்து போய் இருக்கின்ற எமது மக்களை மேலும் நோகடிக்கின்ற வகையில்தான் இன்று அங்கு பொலிஸ் நிர்வாக நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே, இந்த அதிகாரங்களை மாகாணங்களுக்குக் கையளிக்கின்றபொழுது அவற்றை மாகாணங்கள் முற்றுமுழுதாக அனுபவிக்கக்கூடிய வகையிலும், கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெற முடியாத வகையிலும் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு 12,000 லீற்றர் பால் உற்பத்தி இடம் பெறுகின்றது எமது பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடை வளர்ப்பிற்காக உரிய மேய்ச்சற் தரைகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  அடையாளம் காணப்பட்ட 11,000 ஏக்கர் கால்நடைகளுக்கான மேய்ச்சற் தரையில் வனவளப் பாதுகாப்பு பிரிவு அனுமதி தர மறுக்கின்றது. இவை விடுவிக்கப்பட்டு எமது மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்சற் தரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

கால்நடை வளர்ப்பிற்கென புல்லுற்பத்திகள் தற்போது இடம்பெற்று வந்தாலும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உரிய ஏனைய வசதி வாய்ப்புக்கள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை.

கால்நடைகளுக்கான தீவனங்கள் என கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் உரிய தர நிர்ணயங்களுக்கு அமைய உள்ளனவா என்பது பற்றி சம்பந்தப்பட்ட திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது பிரதேசத்தில் அதிகளவான பாலுற்பத்தி இடம் பெறுகின்ற போதிலும் உற்பத்தி செய்யப்படும் பால் மூலப்பொருளாக தென்பகுதியை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்தே அவை முடிவுப் பொருளாக மாற்றப்படுகின்றன.

ஏன் இந்நிலை? எமது பகுதியில் நிலப்பரப்புக்கள் இல்லையா? அல்லது மனிதவளம் இல்லையா? இந் நிலை மாற வேண்டும்.  எமது பகுதிகளில் தொடர்ந்தும் இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி அல்லற்படுகின்றனர்.  இவ்வாறான நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டு எமது பகுதிகளிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். அவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

(

SHARE