வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

716

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த அன்பைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று போல இருப்பதில்லை. ஆண்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு மிகவும் முக்கியமானது மற்றும் நாம் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் இருந்தால், பெண்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள்.

அதனால் அவ்வளவாக அன்பில்லாத ஆண்களிடம் தங்களுடைய மனதைப் கொடுத்து விடுவார்கள். எனவே தான், ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் போது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பார்க்க நன்றாக இருக்கக் கூடிய ஆண்களுடன் நாம் பழகி, மனதைப் பறிகொடுத்து பின்னர் மனமுடைந்து விடுவதால், தனிமையில் வருத்தப்படுவோம்.

எனவே, ஒரு இளைஞன் உங்களிடம் உண்மையாகவே அன்பு கொள்ளாமல் இருப்பதை உணர்ந்தால், அவருடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டாம். ஏனெனில், அந்த உறவு கண்டிப்பாக மகிழ்ச்சியில் முடியப் போவதில்லை. பெரும்பாலான பெண்கள் காலப்போக்கில் உண்மையான உணர்வுகள் வரும் என்று நம்புகிறார்கள் மற்றும் அந்நேரத்தில் சூழல் மாறிவிடும் என்றும் நினைக்கிறார்கள்.

ஒரு நல்ல மனிதரை நீங்கள் சந்தித்து, அவரை உங்களுக்குப் பிடித்திருந்தால், ஒரு துணைவராக இருக்கத் தேவையான உங்களுக்குப் பிடித்த தகுதிகள் அவரிடம் உள்ளனவா என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். ஆண்கள் மோகம் கொண்டவர்கள் என்பது ஒரு வெளிப்படையான இரகசியம். உண்மையில், எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஆனால் பெரும்பாலானவர்கள் முதலில் முகம் மற்றும் உடலின் மேல் தங்களுடைய கவனத்தை செலுத்தி விட்டு, பின்னர் தான் நமது ஆன்மாவின் மேல் காதல் கொள்ள விழைகிறார்கள். உறுதியான மற்றும் நீண்ட கால உறவை நீங்கள் விரும்பினால் உடல் ரீதியான கவர்ச்சிக்கு அங்கு இடம் இருக்கக்கூடாது.

எனவே, உங்களுடைய இதயத்தைக் கொடுக்கும் முன்னர் சற்றே பொறுத்திருந்து விட்டு, பின்னர் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள். ஒரு ஆண்மகனின் துணையை நீங்கள் தேடும் போது உங்களுடைய மனதில் உள்ள, மிகச்சரியான மனிதரின் உருவத்தை வரைந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய ஆண் நண்பரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணங்கள் உள்ளதா என்று பார்ப்பதன் மூலம் உங்களுடைய கனவுகளை உண்மையாக்க முடியும். பெண்களில் பலரும் தங்களுடைய முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டு விடுவதால், இந்த முடிவில்லாத நிலை தவறான மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் முடிவடைகிறது.

உங்களுடைய வாழ்வில் சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாகவும், சரியாகவும் எடுக்க வேண்டும். ஆண்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த குணங்களை எப்பொழுதும் கவனித்திருங்கள் மற்றும் அதைப் பெற்றுள்ள மனிதருக்காக காத்திருங்கள்.

இந்த தேவைகளை கொண்டிருக்காத மனிதரைப் பார்த்து உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்ற துணைவர் யார் என்று இன்னமும் உணராமல் இருந்தால், யாரோ ஒருவரின் அன்பு மற்றும் கவனத்திற்காக உங்களுடைய மனதை கொடுத்துள்ளீர்கள் என்று அர்த்தமாகும்.

அழகான மற்றும் கவர்ச்சியான ஒரு ஆணை நீங்கள் சந்திப்பது மட்டுமே, அவரிடம் காதல் வயப்பட ஏற்ற காரணம் கிடையாது. அழகான முகத்தை விட, அவருடைய தனித்தன்மையான குணங்களே அதிக முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். நீங்களும் அழகான மற்றும் இளமையான பெண்ணாக இருப்பதால், வரும் காலத்தில் ஆர்வமூட்டக் கூடிய நபர்களை சந்திக்க நேரிடும்.

பெரும்பாலான ஆண்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதில்லை என்பதும், அவர்கள் நம்முடன் டேட்டிங் வரும் போது நிறைய விஷயங்களை மறைக்கிறார்கள் என்பதும் தான் நமது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். எனவே தான் வாழ்நாள் முழுவதும் பழக வேண்டிய மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் அவசரம் காட்டக்கூடாது.

SHARE