கூட்டணி தலைவர்கள் ‘ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்’ ஆகியோரை சுட்டது யார்?

331

 

எனவே, ரெண்டு பேரை போடுங்கள் என்று யாழ்பாணத்துக்கு கட்டளை பறந்தது’.’யாரை போடலாம்’ என்று யாழ்பாண ரெலோ பொறுப்பாளர் தேடினார். மறுபடியும் அரசியல் களத்தில் குதிதிருந்த ஆலாலசுந்தரமும், தர்மலிங்கமும் தான் கண்ணில் பட்டனர். இரவோடு இரவாக ரெலோவின் இரு குழுவினர் புறப்பட்டனர். ஒரே நேரத்தில் இருவரையும் கடத்திச் சென்றார்கள். “பேச வேண்டியிருக்கிறது எம்மோடு வாருங்கள்”என்று சொல்லி அழைத்துப் போனார்கள். மறுநாள் இருவரும் பிணமாக வீதியில் கிடந்தார்கள்.  யார் காரணம்? கொலைக்கு யார் என்று எவருக்குமே தெரியவில்லை.

பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது.

ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது.

இயக்கங்கள் மட்டுமெ பேச்சிலே கலந்துகொண்டால் தமிழர் தரப்பிலிருந்து தீவிரமான நிலைப்பாடுதான் பேச்சு மேசையில் போடப்படும்.

மிதவாத தலைமையும் கலந்துகொண்டால் சூடு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் விவகாரத்தில் ‘தீவிரவாத இயக்கங்கள் ‘மட்டுமே தனித்துச் செல்வாக்கு செலுத்துவதையும் இந்திய அரசு அவ்வளவாக விரும்பியிருக்கவில்லை.

என்றாலும்கூட, ஜே.ஆர். அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த கூட்டணியால் ஒருபோதும் முடியாது என்பதும் இந்தியாவுக்கு தெரிந்தே இருந்தது.

jrjevarthanaj.r.jevarthana.

இயக்கங்களுக்கு ஆயதமும், பயிற்சியும் வழங்கியதை இந்திய மறுத்துக்கொண்டிருந்தமை ஒரு இராஜதந்திரமே தவிர, பரமரகசியமல்ல.

எனவே- இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதுபோது,ஜே.ஆர். இந்தியாவிடம் வந்தேயாக வேண்டும்.

‘அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்று கேட்டேயாக வேண்டும் என்று இந்தியா கணக்குப் போட்டிருந்தது.

கணக்குப் பொய்க்கவில்லை. தனித்து நின்றோ, இந்தியாவோடு முரண்டு பிடித்தோ இயக்கங்களின் நடவடிக்கைகளை அடக்கிவிட முடியாது என்பதை ஜே. ஆர். புரிந்து கொண்டார்.

எனவே –இந்திய பிரதமர் ராஜீவோடு நட்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

உள்நாட்டு பிரச்சனை என்ற நிலையில் இருந்து, வெளிநாட்டு மத்தியஸ்தத்தோடு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்றளவுக்கு இனப்பிரச்சனை தீவிரமானதை ஜே.ஆர். எற்கவேண்டியதாகிவிட்டது.

அதன் வெளிப்பாடுதான் இந்திய தலைநகரில் இருநாட்டு தலைவர்களும் நடத்திய உச்சிமாநாடு.

அதனைத் தொடர்ந்துதான் பூட்டானில் திம்பு பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டது.

அமிர் உத்தரவு

இக்காலகட்டதில் சென்னையிலிருந்து அமிர்தலிங்கம் யாழ்பாணப்பாணத்தில் இருந்து கூட்டணித் தவைர்களோடு தொடர்பு கொண்டார்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகப் போகின்றன. வடக்கு-கிழக்கில் உள்ள கூட்டணித் தலைவர்கள் மௌனமாக இருந்தால், பேச்சுவார்த்தையில் கூட்டணியின் பங்கு சிறு அளவில் மட்டுமே என்று மக்கள் நினைத்து விடுவார்கள்.

அரசியல் பேச்சுவார்த்தையில் வல்லவர்கள் என்ற எண்ணமும் அடிபட்டுப் போய்விடும்.

ஆங்கிலப் புலமையில் கெட்டிக்காரர்கள். பேச்சுவார்த்தைகளில் சாணக்கியர்கள். அனுபவசாலிகள் என்று தம்மைப்பற்றி மக்களிடம் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருந்தவர்கள் கூட்டணி தலைவர்கள்.

போராளி இயக்கங்கள் இலங்கை இனப்பிரச்சனையில் தீவிரமானதும், தீர்க்கமானதுமான பங்கை வகித்தபோதும், “பேச்சுவார்த்தைக்கு கூட்டணி, போருக்கு இயக்கங்கள்” என்று ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கவே செய்தது.

திம்பு பேச்சில் இயக்கங்கள் தமது அரசியல் வெளிப்பாட்டையும் காட்டிவிட்டால், தமக்குள்ள ஒரேபிடியும் போய்விடும் என்று கூட்டணித் தலையினர் கவலை கொண்டனர்.

யாழ்பாணத்தில் இருந்த கோப்பாய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரம், மானிப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகிய இருவரையுயும் உடனே கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் அமிர்தலிங்கம்.

ஆலாலாசுந்தரம் ஊழலுக்குப் பேர்போனவர். ஆனால், அவர்தான் அப்போது கூட்டணியின் நிர்வாகச் செயலாளர்.

தாமலிங்கம் நேர்மையானவர். சோஷலிசக் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடும், பற்றும் கொண்டவர். கூட்டணித் தலைவர்கள் மத்தியலேயே சோவியத் யூனியனுக்கு சார்பான போக்கை கொண்டிருந்தவரும் அவர்தான்.

பொதுத்தேர்தல் வந்தால் தமது தொகுதிக்கு செல்லாமலேயே வெற்றி பெறக்கூடியவர்களில் ஒருவர் தர்மலிங்கம்.

இருவரும் கொழும்பு வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்தார்கள்.

ஆலாலசுந்தரம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். போர் நிறுத்தத்தை அரசு சரவர அமுல் நடத்தும் நம்புவதாகக் கூறிக் கொண்டிருந்தார்.

கூட்டணி மட்டுமே தமிழர் தரப்பில் இருந்து அக் காலகட்டத்தில் போர்நிறுத்தத்தை விரும்பிய ஒரே ஒரு அமைப்பாகும்.

போர்நிறுத்தம் வெற்றியளித்தால் ஆயுதப் போராட்டம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுவிடும். அதன்பின்னர் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர தடைகள் இருக்காது என்பது கூட்டணியினரது நினைப்பு.

ஆனால், சம்பவங்கள் அவர்களது நினைப்புக்கு மாறாகவே நடந்துகொண்டிருந்தன.

நேரடி எச்சரிக்கை

திம்பு பேச்சுவார்த்தையில் கூட்டணியினர் கலந்துகொள்வதை தடுக்கமுடியவில்லை என்பதால், மாற்று நடவடிக்கை பற்றி நான்கு இயக்க் கூட்டமைப்பு கூட்டத்தில் ஆராயப்பட்டது.

நான்கு இயக்கங்களும் திம்பு பேச்சுவார்த்தையில் தமது நிலைப்பாட்டை முன்வைப்பது என்றும், முடிவு செய்யப்பட்டது.

திம்பு பேச்சில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் புறப்பட்டு சென்றுவிட்டார்.

yogeswaran_1
யாழ்பாண தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சென்னையில் இருந்தார்.

அவரை நேரில் அழைத்து கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முடிவெடுக்கப்பட்டவுடன் ரெலோ தலைவர் சிறீ சபாரத்னம், “யோகேஸ்வரனை இப்போதே அழைத்து எமது நிலைப்பாட்டை சொல்லிவிடலாம். கூப்பிடுங்கள்” என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபாகரனும் அதனை வலியுறுத்தினார்.

ஈரோஸ் பாலகுமார் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு யோகேஸ்வரனுடன் பேசினார்.

“.இங்கே பிரபா,சிறீ,பத்மநாபா எல்லோரும் இருக்கிறார்கள். உங்களை உடனடியாக சந்திக்கவேண்டும் வாருங்கள்” என்று கூட்டமைப்பு அலுவலக முகவரியை சொன்னார்.

தனியாக வர யோகேஸ்வரனுக்கு ஒரு தயக்கம். “திரு.தங்கத்துரையும் என்னோடு இருக்கிறார். அவரையும் அழைத்து வரலாமா?” என்று கேட்டார் யோகேஸ்.

“சரி”என்றுவிட்டார் பாலகுமார்.

” அவர்கள் வந்ததும் தம்பி முறை சொல்லி அழைத்து சமாளிக்க பார்பார்கள். அதற்கெல்லாம் இடம் வைக்காமல் எமது முடிவை கண்டிப்பான’ குரலில் கூறிவிடவேண்டும்”என்று அனைவரையும் உஷார் படுத்தினார் சிறிசபாரத்னம்..

Balasingam
” பாலசிங்கம் அண்ணர் எமது கருத்தைச் சொல்லட்டும.நாம் எதுவம் பேசாமல் சீரியஸாக இருப்போம்” என்றார் பிரபாகரன்.

அரைமணி நேரத்தில் ஓட்டோ ஒன்றின் மூலம் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும்.

எதிர்பார்த்தது போலவே இருவரும் வாய்கொள்ளாத சிரிப்போடு தோன்றினார்கள்.

“லேட்டாகப் போச்சோ? முகவரியை கண்டுபிடித்துவர தாமதமாகிவிட்டது”என்றார் யோகேஸ்.

இயக்கத் தலைவர்கள் யாவரும் வாய்திறக்கவில்லை அன்ரன் பாலசிங்கம் மட்டுமே கூட்டமைப்பின் கருத்தை விளக்கினார்.

” நாங்கள் தீவிரவாத குழுக்கள் அல்ல. அரசியல், இராணுவ இயக்கங்களாக இருக்கிறோம். போரில் மட்டுமல்ல, பேச்சுக்களிலும் நாம் வல்லவர்கள்.எங்களுக்காக யாரும் பேசத்தேவையில்லை” என்று தனது பேச்சை ஆரம்பித்தார் அன்ரன் பாலசிங்கம்,

” நான்கு அடிப்படை அம்சங்களை நாங்கள் திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கபபோகிறோம்.அதற்கு மாறாக வேறு எத்தத் திட்டத்தையும் முன்வைக்க வேண்டாம். என்று அமுதருக்கு தெரிவித்து விடுங்கள்”

என்று தனது நீண்ட விளக்கத்தின் இறுதியில் கூறினார் பாலசிங்கம்.

04_80
மாறாக பேசினால்….?

அப்போது சிறி சபாரத்தினம் கண்டிப்பான குரலில் கூறியது இது…

” எங்களுக்கு மாறாக திம்புவில் அமுதர் பேசுவதாக இருந்தால், திரும்பிவரும் யோசனையை விட்டுவிடச் சொல்லுங்கள். வேண்டுமானால் அவர் திம்புவிலேயே இருந்துகொள்ளட்டும்”

யோகேஸ்வரன் ஆடிப்போனார்.

“அமிர் அண்ணா ஒருநாளும் உங்களுக்கு விரோதமாகச் செல்லமாட்டார். உங்கள் முடிவுதான் கூட்டணியின் முடிவும்.

stopterro_news_1315085513781அமிர்

நீங்கள் நான் சொல்வதை நூறுவீதம் நம்பலாம்” என்று சொன்னார் யோகேஸ்வரன்.

“நம்புவதும் நம்பாமலிருப்பதும் அமுதர் திம்புவில் நடந்து கொள்வதைப் பொறுத்தது. நீங்கள் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு, நாங்கள் சொன்னதைத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பிரபா.

இயக்கத் தலைவாகளை சமாதனபடுத்திவிட்டு யோகேஸ்வரனும், தங்கத்துரையும் சென்றனர்.

யோகேஸ்வரன் இன்றில்லை. திரு தங்கத்துரை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

எச்சரிக்கை வாய் மூலமாக மட்டும் தெரிவித்ததோடு நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை சிறி சபாரத்தினம்.

உரிமை கோராத அரசியல் படுகொலைகள்

‘யாழ்பாணத்தில் உள்ள கூட்டணி முக்கியஸ்தர்கள் இருவரை தீர்த்துக்கடடினால்தான் கூட்டணி ஒழுங்காக நடந்துகொள்ளும்’என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.

எனவே, ரெண்டு பேரை போடுங்கள் என்று யாழ்பாணத்துக்கு கட்டளை பறந்தது’

‘யாரை போடலாம்’ என்று யாழ்பாண ரெலோ பொறுப்பாளர் தேடினார்.

மறுபடியும் அரசியல் களத்தில் குதிதிருந்த ஆலாலசுந்தரமும், தர்மலிங்கமும் தான் கண்ணில் பட்டனர்

இரவோடு இரவாக ரெலோவின் இரு குழுவினர் புறப்பட்டனர். ஒரே நேரத்தில் இருவரையும் கடத்திச் சென்றார்கள்.

“பேச வேண்டியிருக்கிறது எம்மோடு வாருங்கள்”என்று சொல்லி அழைத்துப் போனார்கள்.

மறுநாள் இருவரும் பிணமாக வீதியில் கிடந்தார்கள்.

tharmalinkam
யார் காரணம்?

கொலைக்கு யார் என்று எவருக்குமே தெரியவில்லை.

புலிகள் இயக்கத்தினர் செய்திருக்கலாம் என்றே பொதுவாக நம்பப்பட்டது.

சென்னையில் கூட்டமைப்பு கூட்டம் நடக்கும்போது ஈரோஸ் பாலகுமார் பிரபாவிடம் கேட்டார் “நீங்கள்தான் போட்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையோ?”

அதற்கு பிரபா சிரித்துக் கொண்டே சொன்னார், ” சிறியின் பொடியள்தான் செய்தது என்றும் ஒரு கதை

சிறியும் அப்போது கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அவரும் சிரித்துக்கோண்டே “நாங்கள் செய்யவில்லை” என்று கூறிவிட்டார்.

ரெலோ இயக்கத்தை தவிர, ஈ.பி.ஆர். எல்.எஃ, ஈரோஸ் இரண்டுமே புலிகள் தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ரெலோ செய்திருக்கும் என்று புலிகளைத்தவிர, யாருமே சந்தேகப்படவில்லை.

ரெலோ இயக்கத்தின் முக்கிய தளபதியாக இருந்த தாஸின் தலைமையில்தான் இருவரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஆலால் பற்றி யாருமே அலட்டிக்கொள்ளவில்லை.

தர்மலிங்கம் கொல்லப்பட்டது குறித்தே பரவலான கவிலை தெரிவிக்கப்பட்டது.

அமரர் தர்மலிங்கம் புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார் என்பது குறிப்பிடதக்கது.

ltte-Talaஇந்திய தலையீடும் பிரபகரனின் நிலைப்பாடும்.

இதற்கிடையே கூட்டணியினர் மேற்கொண்ட மற்றொரு நிலைப்பாட்டையும் குறிப்பிட்டாயாகவேண்டும்.

“இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய இராணுவத்தை உடனே அனுப்ப வேண்டும்” என்று கலைஞர் கருணாநிதி திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சென்னையில் இருந்த அமிர்தலிங்கம் ஒரு பேட்டியில், இந்தியா இராணுவத்தை அனுப்பவேண்டும் என்று தனது பங்குக்கு கூறிவைத்தார்.

பேட்டியைக் கண்ட புலிகள் இயக்கத்திற்குப் பொறுக்க முடியவில்லை.

உடனடியாக பிரபாகரன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையின் ஒரு பகுதி…

“எமது பழைய பாராளுமன்ற தலைமை-எதிரியைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும், அரசியல் ஞானமும் அற்றதாக இருந்ததுதான் எமக்கு இந்த துர்க்கதி ஏற்படக் காரணமாகும்.

அரச பயங்கரவதாம் கூர்மையடைந்து இனவாதப் பூதம் தமிழனத்தை அழிக்க கிளம்பிய போதும், இவர்கள் பாராளுமன்ற ஆசனங்களையும் பதவிகளையும் கட்டிப் பிடித்தபடி அரச தலைவர்களுக்கு துதிபாடிக்கொண்டிருந்தார்கள்.

கூட்டணி தலைவர்கள் புரிந்த மாபெரும் தவறு என்னவென்றால், தமிழ் புரட்சியவாத இளைஞர் பரம்பரயை அந்நியப்படுத்தி வந்தமையாகும்.

தேசிய சுதந்திரத்துக்காக நாம் வரித்துக்கொண்ட புரட்சிகர ஆயதப் போராட்ட வரலாற்றுக் கட்டாயத்தையும் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் கூட்டணி புரிந்து கொள்ளவில்லை.

எம்மை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று வர்ணித்தனர்.

இவர்கள் செய்தது எல்லாம் எமது ஆயதப் போராட்டத்தை ஒரு அரசியல் அழுத்தமாக பிரயோகித்து அரசிடம் சலுகைகளை வேண்டி சமரசப் பேச்சுகள் நடத்தியதுதான்.

இந்திய ஆதரவு

நாமே போராடி நமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற தன் நம்பிக்கை இவர்களிடம் இல்லை.

இதனால்தான் இந்திய இராணுவப் படையெடுப்புக்கு இவாகள் அழைப்பு விடுக்கிறார்கள்.

எமக்கு இந்தியாவின் உதவி அவசியம்.
இந்தியாவின் ஆதரவும் அவசியம்.

இந்தியாவின் நல்லெண்ணம் அவசியம்.

நாம் முதலில் இந்தியவிடம் எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

தமிழீழ தனியரசே எமது பிரச்சனைக்கு திட்டவட்டமான தீர்வு என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

இந்தியாவின் நல்லாதரவைப் பெறுவதைவிட்டு, எமது பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு இந்தியாவிடம் கைநீட்டி நிற்பது அரசியற் சாணக்கியம் ஆகாது”

அதுதான் பிரபா விடுத்த அறிக்கை.

இந்தியா நேரடியாக படை அனுப்பினால் தமிழீழத்திற்கு குறைந்த தீர்வை எற்கவேண்டி வரலாம் என்பதை உணர்ந்து பிரபா முன்வைத்த நிலைப்பாடு, ‘ படை அனுப்ப வேண்டாம் உதவி செய்தால் போதும்’

thimpuபேச்சில் சிக்கல்

திம்பு பேச்சுவார்த்தை பற்றி இலங்கைப் பத்திரிகைகள் உட்பட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் பல நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டு வந்தன.

அதே நேரம் திம்பு பேச்சை புத்திசாலித்தனமாக முறித்துக்கொள்ளக்கூடிய ஒரு தருணத்துக்காக இயக்கங்கள் காத்திருந்தன.

SHARE