Vido எனும் நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட W8C Freedom Light எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.97 டொலர்கள் மட்டுமே பெறுமதியான இந்த டேப்லட்டில் 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய IPS தொடுதிரை Intel Atom Z3735F Quad-Core Bay Trail Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 4200mAh மின்கலம் தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்பினை மேற்கொள்வதற்கான கமெராக்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன. |