மூன்று தலைமுறை நடிகர்கள் நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சன்!

667

தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அலை’, மாதவன் நடித்து வெளிவந்த ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார்.

தற்போது இவர் தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகர்ஜூனா, மற்றும் அவருடைய பேரன் நாக சைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் சினிமாவில் முதன்முறையாக இருக்கும்.

நாகேஸ்வரராவ், இந்தப் படத்தில் நடித்த பின் காலமானார். இந்நிலையில் படத்தின் 90 சதவீத வேலைகள் முடிந்துவிட்டனவாம். இப்போது மூன்று தலைமுறை நடிகர்களுடன் புதிதாக அமிதாப் பச்சனும் கைகோர்க்கவிருக்கிறார். ஆமாங்க, இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம்.

இந்த தகவலை அவரே தனது இணையதளத்தில் வெளியிட்டும் உள்ளார். மனம் படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். தமிழில் சிவாஜி கணேசன், பிரபு, விக்ரம் பிரபு ஆகிய மூன்று தலைமுறை நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் மூவரும் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE