மகிந்தவின் ஆட்சி வந்தாலே தமிழ் இனம் போராடி தமிழ்ஈழத்தை பெறமுடியும் இல்லையேல் நல்லாட்சி என்று நடுத்தெருவில் நிக்க வரும்

322

 

மகிந்தவின் ஆட்சி வந்தாலே தமிழ் இனம் போராடி தமிழ்ஈழத்தை பெறமுடியும் இல்லையேல் நல்லாட்சி என்று நடுத்தெருவில் நிக்க வரும்
சிங்கள அரசியல் தலமைகள் ஒருபோதும் எமது தமிழ் இனத்திற்கு தேசியம் சுயநிர்னைய எரிமைகளை பெற்றுத்தரமாட்டார்கள் என்பது உறுதி ஆகவே தமிழ் மக்களாகிய நாம் எமது இலக்கை அடையவில்லை ஏதோ சமாதானம் தற்போது கிடைத்துவிட்டது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே தவிர நடமுறைசாத்தியமாக எதுவும் நடைபெறவில்லை மறைமுக இனப்படுகொலைகள் நடக்கிறது

 

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு திட்டமிட்டு செயற்படுத்திய இலங்கை அரசியல் ஐ.நா தீர்மானத்தோடு தனது பெரும்பகுதி வெற்றியை எட்டியுள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அரசும் இலங்கை அரசும் இணைந்து ஐ.நாவில் சமர்ப்பித்த இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் தெற்காசியப் பிராந்திய ஜனநாயகத்திற்கும், புரட்சிக்கும் அமெரிக்க அரசு விடுத்துள்ள எச்சரிக்கை! தெற்காசியப் பிராந்தியத்தில் மக்களின் விடுதலைக்கான எந்தப் போராட்டமும் இந்திய அரசிற்கும் எதிரானதாகவே ஆரம்பத்திலிருந்து திட்டமிடப்பட வேண்டும் என்பது மறுக்கவியலாத உண்மை. இன்று அது அமெரிக்க அரசிற்கும் எதிரான மூலோபாயங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதை அமெரிக்க அரசு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இன்றைய நகர்வு பல வருடங்களின் முன்னரே திட்டமிடப்பட்டது.

imperialismஆசியாவை முன்னிலைப்படுத்தல்(Asia Pivot) என்ற அமெரிக்க அரசின் கோட்பாட்டு வரைமுறை 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அத் திட்டத்தில் தெற்காசியாவின் ஈர்பு மையமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டது. அதன் பின்னான ஒவ்வொரு நகர்வுகளும் மிகவும் அவதானமாகத் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டன.

உலகத்தை ஆட்சி செய்யும் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் நிர்வாகியாக ஒபாமா தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சரக் கூட்டத்தில் ஒபாமா தனது வெளியுறவுக் கொள்கையை முன்வைத்தார். ‘மத்திய கிழக்கு நாடுகளில் தாம் கவனம் செலுத்திய அளவிற்கு ஆசியாவில் தமது கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறினார். அமெரிக்கத் தலையீட்டால் மத்திய கிழக்கு முழுவதும் இரத்தம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்த வேளையில் ஒபாமாவின் அரச துறைச் செயலாளராகவிருந்த ஹில்லாரி கிளிங்டன் ஆசியா பிவோட் கோட்பாட்டைச் செழுமைப்படுத்தி தெற்காசியாவில் அமெரிக்கத் தலையீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

அமெரிக்கத் தலையீட்டின் தெற்காசிய ஈர்ப்பு மையம் இலங்கை

ban_mahindhaதெற்காசியாவில் அமெரிக்கத் தலையீட்டின் ஈர்ப்பு மையமாக இலங்கை மாற்றமடைந்த போதே அந்த நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நபர்கள் நியமிக்கப்பட்டனர். தென்கொரியாவின் வெளிவைகார அமைச்சராகவிருந்த பன் கி மூன் ஊடாக ராஜபக்ச குடும்பத்திற்கு தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளராகப் பதவியேற்ற பன் கீ மூன், புது டெல்லியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திலேயே தனது முதலாவது வெளிவிவகாரத் தொழிலை ஆரம்பித்தார். பன் கீ முன் ஐ.நா செயலாளராகப் பதவியேற்றதும் தனது தலைமை நிர்வாகியாக விஜை நம்பியாரை நியமித்தார்.

ஹம்பாந்தோட்டை தாதாவான ராஜபக்ச ஆட்சியமைத்ததும் அமெரிக்காவில் குடியிருந்த கோத்தாபய மற்றும் பசில் ராஜபக்சக்கள் இலங்கைக்குத் திரும்பினர்.

வன்னிப் படுகொலைகளின் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டதற்கான ஆதாரங்கள்

Mahinda with George Bushவன்னி இனப்படுகொலை ஆரம்பித்த நாட்களில் அதனை விரைபடுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் ராஜபக்சவிற்கு அறிவுறுத்தியதாக விக்கிலீக்ஸ் இன் மற்றொரு தகவல் கூறுகின்றது.

ராஜபக்ச அரசு ஆட்சியமைப்பதற்கு பன் கீ மூன் மட்டுமல்ல, அமெரிக்கா சார்பான மேலும் சக்திகளும் உதவி வழங்கின. விக்கி லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில், எவ்வளவு உயிரிழப்பு எற்பட்டாலும் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று உலக வங்கியும், உலக நாணய நிதியமும் விரும்பியிருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைக் கூறுகளான இந்த நிறுவனங்களின் விருப்புத் தொடர்பாக ஹில்லாரி கிளிங்டனுக்கு அவரது ஆலோசகர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் அனுசரணையுடன் அமெரிக்க அரசால் திட்டமிட்டு ஏவப்பட்ட இனப்படுகொலையின் உள்ளூர் வேலையாள் தான் மகிந்த ராஜபக்ச. சந்திரிக்கா ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் அவரின் கைப் பொம்மையாகச் செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் காலத்திற்குரிய திறைமையை அமெரிக்க ஏகாதிபத்தியம் அடையாளம் கண்டுகொண்டது.

அமெரிக்கா மக்கள் கொல்லப்படுவதை விரும்பியது

no_fire_zoneதெற்காசியாவில் தனது ஆதிக்கத்திற்கான மையப் புள்ளியாக இலங்கை மாற வேண்டுமானால் இலங்கையில் ஆயுதப் போராட்டமும் சமூக முரண்பாடுகளும் தணிந்திருக்க வேண்டும் என அமெரிக்கா சார்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது. அந்த அடிப்படையில் இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன.

1. புலிகளை முற்றாக அழிப்பது

2. அதிக அளவிலான மக்கள் அழிப்பை ஏற்படுத்தி மிக நீண்ட காலத்திற்குப் ஆயுதம் தாங்கிய போராட்டம் மீதான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது.

அதன் முதல் பகுதியாக புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலின் சிறிய பகுதிக்குள் முடக்கும் திட்டம் அரங்கேறியது. அங்கு மக்களின் ஓலம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் எதிரொலித்தது.

கிரேக்க கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள்
கிரேக்க கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள்

1949 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானிய அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் இதே போன்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறுகிய பிரதேச வரம்புக்குள் முடக்கப்பட்ட போராளிகளும் மக்களும் நீண்ட அவலத்தின் மத்தியில் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இன்றுவரை கிரேக்கத்தின் மீது தமது ஆதிக்கத்தை கோரமாகச் செலுத்தும் ஏகாதிபத்தியங்கள், அங்கு மீண்டும் மக்கள் எழுச்சி தோன்றிவிடாமல் திட்டங்களை வகுத்துக்கொள்கின்றன. கிரேக்கத்தில் மிக நீண்ட காலத்திற்கு ஆயுதப் போராட்டம் பின்போடப்பட்டது. அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன.

அதே போன்ற திட்டம் ஒன்றே வன்னியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. நோர்வேயின் மத்தியத்துவத்தின் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்தி புலிகள் இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை களைந்து மானில சுயாட்சி போன்ற அமைப்பு வழங்கப்பட்டிருந்தால் கூட அது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியாகவே கருதப்பட்டிருக்கும். திட்டமிட்டு மக்களையும் போராளிகளையும் விரக்திக்கு உள்ளாகி ஏகாதிபத்தியங்கள் நடத்திய அழிப்பின் விளை பலனாக மிக நீண்ட காலத்திற்கு மக்கள் ஆயுதப் போராட்டம் குறித்துச் சிந்திக்க மாட்டார்கள்.

தவிர, கிரேக்கத்தில் நடைபெற்றது கம்யூனிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் என்பதால், அதன் அழிவிலிருந்தே பல கம்யூனிஸ்டுக்கள் தோன்றினார்கள். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான உணர்வு இன்றுவரை கிரேக்க மக்களை உறுதி குலையாத போராட்ட சக்திகளக ஐரோப்பாவில் பேணி வருகிறது என்பது வேறு விடையம்.

அழிக்கப்பட்டதற்குக் காரணம் ஏகாதிபத்தியங்கள் மட்டுமல்ல..

vietnam-war-rare-incredible-pictures-history
வியற்னாம் போரின் போது தோற்றுப் போன அமெரிக்கப்படைகள் அப்பாவிகளைக் குறி வைத்தன.

கிரேக்க கெரில்லாக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையேயான சில ஒற்றுமைகளும் உண்டு, இரண்டு போராட்டங்களுமே மக்கள் அணிதிரட்டப்பட்ட ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தை மறுத்து ஆயுதம் தாங்கிய கெரில்லா யுத்தத்தையும், மரபு வழிப் போர்முறையையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலை புலிகள் ஏகாதிபத்திய நாடுகளில் குடியிருந்த தமிழர்களை ஆயுதக் கொள்வனவிற்காக நம்பியிருந்ததைப் போன்று கிரேக்கக் கெரில்லாக்கள் யூகோஸ்லாவியாவை நம்பியிருந்தனர். இரண்டு பகுதியினரும் மக்களை நம்பியிருக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைத் தொழிற்சங்கங்களாகவும், நிர்வாக அலகுகளாகவும் அணிதிரட்டி தற்காப்பு யுத்தத்தை நடத்துவதை விட சில நபர்களின் கூட்டான இராணுவத்தை உருவாகுவதையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் தோற்றதாக வரலாறில்லை. சீனாவில் மாவோ சேதுங்கும் அவரது தோழர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் இராணுவத்தை ஒழுங்கமைப்பது தொடர்பன நவீன முறையை உலகத்திற்கு வழங்கியிருந்தனர். அதனைப் பின்பற்றிய வியட்னாமியப் போராட்டம் அணுவாயுதங்களோடு யுத்தம் செய்த பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஆகிரமிப்புப் படையை புறமுதுகு காட்டி ஓடச் செய்தது. இன்று பிலிப்பைன்ஸ் கெரில்லாக்களை அமெரிக்கப் படைகளால் கூட அணுக முடியவில்லை. இந்திய அரசின் கொல்லைப் புறத்தில் நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் மன்னராட்சியை அழித்துத் தலை நகரைக் கையகப்படுத்தியது.

ஆக, தெளிவான அரசியல் வழிமுறையும் அதன் வழியில் கட்டமைக்கப்பட்ட மக்கள் இராணுவமும் இல்லாமை புலிகளை அழிப்படக்கூடிய இயக்கமாகவே பேணி வந்தது. ஏகாதிபத்தியங்கள் அழிப்பின் வழிமுறையைத் தமது எதிர்கால நலன்களுக்கு ஏற்பவே திட்டமிட்டன. மக்கள் அழிவில்லாமல் புலிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தால் போராட்டம் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிராது. ஆக, இலகுவில் அழிக்கப்படக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை பேரழிவின் ஊடாக அழித்தமைகான காரணங்கள் தெளிவானவை. அவ்வாறான கோரமான அழிப்பின் பலனை இன்றைய அமெரிக்கத் தீர்மானம் அறுவடை செய்திருக்க்றது.

போரின் பின்னரும் ராஜபக்சவின் பங்களிப்பு அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது

வன்னி இனப்படுகொலையின் பின்னர் ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்டார். போர் வெற்றியை வாக்குகளாக மாற்றிய ராஜபக்ச ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய அரசிற்கும் தேவைப்பட்டது.

போரின் பின்னான அரசியலில் இரண்டு முக்கிய நகர்வுகளைக் காணலாம்:

1. போரை எதிர்த்க்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை அமெரிக்க சார்ப்பனவர்களாக மாற்றுவது.

2. எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கக் கூடியவர்களை ராஜபக்ச ஊடாகச் சுத்திகரிப்பது.

இந்த இரண்டையும் போரின் பின்னான ஐந்து வருடங்களின் கன கச்சிதமாக அமெரிக்க அரசு நடத்தி முடித்துள்ளது.

அதே காலப்பகுதியில் ராஜபக்ச அரசிற்கு எதிரான விசாரணை என்ற பெயரில் தனது புலம்பெயர் அடிமைகள் ஊடாக அமெரிக்க அரசு போர்க்குற்ற விசாரணை என்ற நாடகத்தை நடத்தி புலம்பெயர் தமிழர்களின் பெரும் பகுதியினரைத் தமக்கு ஆதரவாக உள்வாங்கிக் கொண்டது. புலம்பெயர் நாடுகளிலுள்ள அனைத்து அமைப்புக்களும் இணைந்து உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்து மக்களை அன்னியப்படுத்தின.

ஆக, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கருதிய அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் அன்னியப்படுத்தப்பட்டு போராட்டத்திற்கான நியாயம் அழிக்கப்பட்டது. மறுபக்கத்தில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தவிர்க்கவியலாமல் ராஜபக்ச எதிர்பு என்ற தலையங்கத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை நோக்கித் தள்ளப்பட்டனர்.

தவிர, அமெரிக்காவின் நோக்கங்களைப் புரிந்துகொண்ட எதிர்ப்பு நாடுகளை இலங்கை மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தும் பணியையும் அமெரிக்கா செய்து முடித்திருக்கிறது.

அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரவர்க்கங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென இதனைக் கருதலாம்.
இவ்வாறு இலங்கையிலிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளும், புரட்சிகரச் சிந்தனை கொண்டவர்களும் சுத்திகரிக்கப்பட்டதோடு ராஜபக்சவின் பணி தேவையற்றதாகிவிட்டது.

அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட புதியவர் மைத்திரிபால

புலம்பெயர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய அமெரிக்க பிரதி ராஜாங்க செயலருடன் மைத்திரி
புலம்பெயர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய அமெரிக்க பிரதி ராஜாங்க செயலருடன் மைத்திரி

புலிகளை அழிப்பதற்கு தகுதியானவராக ராஜபக்சவை அடையளம் கண்ட அமெரிக்கா, ராஜபக்சவை அகற்றுவதற்கு தகுதியானவராக மைத்திரிபாலவை அடையாளம் கண்டுகொண்டதன் விளைவே ஜனவரி 8ம் திகதி ஆட்சி மாற்றம். அதன் பின்னர் ஏற்கனவே அமெரிக்காவின் ராஜாங்கத் திணைகளத்தின் நிதி வளத்தில் மசூசெட் பல்கலைக் கழகத்தில் பயிற்சிபெற்ற ரனில் விக்ரமசிங்க என்ற நேரடி முகவரின் கீழ் இலங்கையில் புதிய ஆட்சி நிறுவப்பட்டது.
இந்த வெற்றிகளின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் அமெரிக்கா தொடர்பான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும், தமிழர்கள் மத்தியில் அதனைப் பேணுவதற்கும் போர்க்குற்ற விசாரணை நாடகத்தை முடிவிற்குக் கொண்டுவர வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருந்தது.

அதுவே இப்போது வெளியிடப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானம்.

அமெரிக்கத் தீர்மானத்தின் நோக்கம்

சிங்கள மக்கள் மத்தியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்பான நேர்மறையான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதும், சிங்கள அதிகாரவர்க்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டைப் பேணுவதுமே தீர்மானத்தின் முதலாவது பிரதான நோக்கம்.

இரண்டாவதாக தமிழ்ப் பேசும் ஜனநாயக சக்திகளின் மத்தியில் சமரசப் போக்கை வளர்ப்பதும், ஒரு வகையான அச்ச உணர்வை ஏற்படுத்துவதும் அதன் அடுத்த நோக்கம்

மூன்றாவதாக பயங்கரவாதம் என்று அமெரிக்க அரசு கருதும் அனைத்தும் அழிக்கப்படும் என்றும்  அழிக்கப்பட்டவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் நீதி கிடைக்காது என்ற பொதுக் கருத்தை ஏற்படுத்துவது.

இவை அனைத்தையும் நிறைவேற்றிய பெருமை தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களையும், புலம்பெயர் ஏகாதிபத்திய முகவர்களையுமே சாரும்.

மகிந்தவும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவார்களா?

Mahinda-KPஇதன் மறுபக்கத்தில் இனப்படுகொலையை நடத்தி முடித்த மகிந்த ராஜபக்சவின் குடும்பம் தண்டனைக்கு உட்படுத்தப்படுமா என்றால் இல்லை என்பது தான் பதில். இன்று சிங்கள ஏகாதிபத்திய அடிவருடிகளைத் திருப்திப்படுத்த போர்க்குற்ற விசாரணை மாற்றியமைக்கப் படுகிறது என்றால், அந்த அதிகாரவர்க்கத்தின் பேரினவாதக் குறியீடாகவிருக்கும் ராஜபக்சவைத் தண்டிபது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல நடைபெறாது என்பதும் உண்மை.

வேண்டுமானால் ஊழல் குற்றங்களை முன்வைத்து ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சிகள் இடம்பெறலாம். ஆபத்தானவர்கள் அல்ல என இலங்கை அரசும் அமெரிக்காவும் கருது சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படலாம். போர் வெற்றியுடன் நேரடியாக அடையாளப்படுத்தப்படாத சில இராணுவத் தொழிலாளர்கள் தண்டிக்கப்படலாம்.

இனி…

GTF74இதன் பின்னரும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடரும். உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசுடன் நேரடியான தொடர்பிலிருப்பார்கள். பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமிழ் அதிகாரவர்க்கத்துடன் இணைந்துகொள்ளும் இன்னும் எஞ்சியிருக்கும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட உணர்வைக் கையகப்படுத்தி, தமிழ்த் தேசியம் பேசி அழிப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தென்னிந்திய ‘உணர்வாளர்’ உணர்ச்சிக் குழுக்களும் செயற்படும்.

தவிர, அமெரிக்கத் தலையீடுகளுக்கு எதிரான குழுக்களை அமெரிக்காவே உருவாக்கும். மறுபுறத்தில் இலங்கையில், இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்ற மக்கள் போராடிப்பெற்ற உரிமைகள் அழிக்கப்பட்டு அதன் வளங்கள் சுரண்டப்படும் மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்படுவர்.

இவை அனைத்திற்கும் எதிராகப் போராட புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் இதனை மறுப்பவர்கள் தமிழ் நாட்டிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலுமிருந்தும் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது அமெரிக்க அரசு மக்கள் அழுத்தங்களுக்கு செவிசாய்க்கும் ஜனநாயக அரசு என்ற தோற்றப்பாடை மக்களுக்கு மீண்டும் வழங்க முற்படுகின்றனர்.

ஏகாதிபத்தியங்களுக்கு என்று திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது. அதன் அடிப்படையில் அவை எந்த அழிவுகளை வேண்டுமானாலும் ஏற்படுத்தத் தயார். சொந்த நாட்டு மக்களையே அவர்கள் மதிப்பதில்லை. அமெரிக்கா முழுவதும் கருப்பு நிற தொழிலாளர்கள் மூன்றாம் தரப் பிரசைகளாகவே இன்றும் நடத்தப்படுகின்றனர். அரைக் கருப்பரான ஒபாமா ஆட்சியிலேயே அதிகமான கருபர்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள தமிழ்த் தலைமைகளின் பலத்தை மீறி, புதிய அரசியலை முன்வைத்து நடைமுறைப்படுத்துவது என்பது இன்று இலகுவானதல்ல. பெரும்பாலான ‘தமிழ்த் தேசிய’ வாதிகள் தங்கள் ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்கு பிரபாகரனையும் புலிப் போராளிகளின் தியாகங்களையும் துணைக்கு இழுக்கின்றனர். விமர்சனம் சுய விமர்சனம் என்ற பக்கத்தை நிராகரித்து தோற்றுப்போன வழிமுறைகளையே மீண்டும் அரசியலாக்க முனைகின்றனர். இலங்கையில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற நிலை அழிந்து அவர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டாலும் பிழைப்புவாதத் தலைமைகள் மாறப்போவதில்லை.

எது எவ்வாறாயினும் இன்றைய அரசியல் சூழல் முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு சார்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதி முன்னணிச் சக்திகள் ஏகாதிபத்தியங்கள் என்றால் என்னவென்று நடைமுறை அளவில் புரிந்துகொண்டுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வறிய சமூகம் ஒன்று மைத்திரி-ரனில் கூட்டரசால் தோற்றுவிக்கப்படும். அந்த சமூகத்தின் போராட்டங்களில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பங்களிப்பை வழங்குவதன் ஊடாக சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும். அதற்கான அரசியல் வழிமுறை மட்டுமே இலங்கை பேரினவாத அரசையும், அதிகார வர்க்கத்தையும்

யுத்தம் என்ற பெயரில் அப்போது நடைபெற்ற இனப்படுகொலை

முள்ளிவாய்கால் எனப்படும் குருதிச் சரித்திரம் மறைக்கப்படலாம், ஆனால் அதனால் ஏற்பட்ட வடுவினை தமிழர்கள் மனதில் இருந்து அகற்றிட முடியாது

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள்.

அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நரகமெனும் கொடூரத்தையும் கூட கண்முன்னே காட்ட வைத்தது ஓர் யுத்தம். காலம் அதற்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் எனப் பெயர் பொறித்துப்போனது.

இரத்தச் சரித்திரத்திரமான அந்த இன அழிப்புப் படலம், இன்றுரை இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயமாக மாறாத வடுவை ஏற்படுத்தியது 2009 மே 18 இல்.

குருதியால் வரையப்பட்ட அந்த நாளை தமிழர்கள் மட்டுமல்ல அத்தனை எளிதில் எவருமே மறந்து விடமாட்டார்கள் என்பது திண்ணம்.

நாட்டில் தீவிரவாதத்தை அழிக்கின்றோம், அதற்காக விடுதலைப்புலிகளைக் கொல்கின்றோம் என்ற பெயரில், திட்டமிட்டு தமிழர்கள் தலைகளில் அள்ளி வீசிய குண்டுகளால் கண் திரும்பிய பக்கம் அனைத்திலும் புதைக்கப்படாத உடலங்கள்.,

அத்தோடு சிதறிப்போன அவையவங்களால் ஏற்பட்ட செங்குருதி ஆறாக மாறி நந்திக்கடல் எனும் சிறப்புக்கடற்கரையை சிவப்பாக்கிய நாற்களை இன்று நினைக்கையிலும் இரு விழிகளும் சிவப்பாகும் ஒன்று கோபத்தில், மற்றொன்று வேதனையில்.

அத்தகைய கொடூரங்களையும் சுமந்து கொண்டு, வேர் அறுக்கப்பட்டதாக பலர் இன்றும் நினைக்கும் ஓர் விடுதலைப் போரின் வடு இன்று மௌனமாய் காற்றில் இரத்த வாடை கலந்து வீசுகின்றது முள்ளிவாய்க்கால் பகுதியில்.

2009 மே 18 ஆம் திகதிக்கு சில நாட்களுக்கு முன்னர் வரையிலும் ஓர் விடுதலைக் கனவு மெய்படப் போகின்றது என்ற ஆவல் ஈழத் தமிழர்களிடையே மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரிடமும் இருந்த ஓர் அவா.

ஆனால் திடீரென தலைகீழாகிப் போனது ஓர் சரித்த வரலாறு. தமிழரின் தலைகளில் குண்டுகளும் மனங்களிலும், நம்பிக்கையிலும் மண்ணும், மரணமும் வாரி இரைக்கப்பட்டன.

அதனால் என்ன நடக்கின்றது?, ஏன் நடக்கின்றது? ஏன் கொல்லப்படுகின்றோம்? என்பது கூட தெரியாமல் பதறிய பெண்களுக்கும், புரியாத குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏன் முதியோருக்கும் கூட, என அனைவருக்கும் பாகுபாடுகளும், பாரபட்சமும் இன்றி அவல மரணம் எனும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டன.

அந்த கொலை (இன) வெறி கொண்ட யுத்தம், இப்போது 8 வருடங்களை விழுங்கி விட்டு சலனமின்றி நிற்கின்றது என்பது தீராத வேதனையே.

ஆனால் யுத்தம் என்று கூற முடியாத அளவு நடைபெற்ற அந்த இன அழிப்பு, கொடூரங்களுக்கு தீர்வுகளோ, தண்டிப்புகளோ இன்று வரை கொடுக்கப்பட வில்லை என்பதற்கு ஆத்திரப்படுவதா அல்லது துயரப்படுவதா என்பதும் புரியாத மனநிலை.

அந்த இன அழிப்பிற்கான தண்டிப்பை பற்றி கேட்கும் போது பதிலமைகின்றது இவ்வாறாக அதாவது.,

“அந்த யுத்தம் இன அழிப்பு இல்லை, இனப்படுகொலை மட்டுமே, தண்டிப்பிற்கு ஆதாரம் வேண்டும், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தமே அது”.

இந்த கேலிக்குரிய வாதத்தினை, மனித உரிமை அமைப்புகளும் தலையாட்டி பொம்மைகளாய் கேட்டுக் கொண்டிருப்பது எத்தகையதோர் மிகப்பெரிய கேலிக் கூத்து. கொடுத்த, கிடைத்த ஆதாரங்களுக்கு என்ன நடந்தது?

அதற்கும் மேல் ஆதாரம் வேண்டும் எனில் சுட்டுக் கொன்றதால், சுடுகாடு கூட செல்லாமல் சொர்க்கம் சேர்ந்த உயிர்கள் தான் மீண்டு வந்து சாட்சியமளிக்க வேண்டுமா? என்றும் கேட்கத் தூண்டும்.

கொத்துக் கொத்தாக குண்டுகள் போட்டும், தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை கொட்டியும் பல பொதுமக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அடைக்கலம் அளிக்கின்றோம் எனக் கூறி வெளிப்படையான துரோகத்தனமான அழிப்பு நடந்தேறியது முள்ளிவாய்க்கால் களத்தில்.

வரலாற்றில் இந்த முள்ளிவாய்க்கால் இன அழிப்பும், அழிந்து போகாமல் பதியப்பட வேண்டிய ஒன்றே. 8 வருட பூரணத்தைச் சந்தித்து விட்ட நிலையிலும், இனியும் என்றாவது இந்த கொலைகளுக்கு தண்டிப்புகளும் பதில் கூறல்களும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் வேடிக்கைத் தனமானது.

அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கின்றது அதாவது, சர்வதேசமே இணைந்து நடத்தி அப்பாவிகளைக் கொன்றதோர் கோர யுத்தத்திற்கு சர்வதேசமே நீதி பெற்றுத் தரும் என எதிர்ப்பார்ப்பதும் கூட அறியாத்தனமானதோர் முட்டாள் தனம் எனலாம்.

அதுவும் தவிர இன்றுவரை மர்மம் காத்துக் கொண்டிரும் முள்ளிவாய்க்காலில் கொலைகள் மட்டுமா அரங்கேறியது?

அதனையும் தாண்டி கொலை செய்யப்பட்டவர்களை தவிர எஞ்சியவர்கள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். அதிலும் பலர் சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட, கணக்கிலடங்காதோர் பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர்.

அவ்வாறு தொலைந்து போக வைக்கப்பட்ட உறவுகள் இன்று உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என்று இன்றும் கதறும் பொதுமக்கள் கணக்கற்றவர்கள்.

ஆனால் இதற்கு கூட தீர்ப்போ அல்லது தீர்வோ தர எவரும் இதுவரை மெய்யாக முன் வந்ததாக தெரிய வில்லை. ஆனாலும் ஒன்று அரசியல் இலாபம் இருந்தால் இதுவும் கூட தீர்க்கப்படலாம்.

எவ்வாறெனினும் அழிப்புகளை மீட்டிப்பார்ப்பது வேதனையை மீண்டும் வரவழைப்பதற்கு சமமானது என்பது நன்றாகவே தெளிவான விடயம்.

இருந்தாலும் நடந்த அழிப்புச் சம்பவத்தை மீட்டாவிட்டால் சிலவேளைகளில் அந்த இன அழிப்பை பொய்யாகக் கூட பலர் சித்தரித்து விடலாம் என்பது பின்னோக்கிய காலப் பயணத்தை பார்க்கும் போது தெளிவாகப் புலப்படலாம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராஜபக்ச அதிபராக இருந்த காலப்பகுதியில் ஈழத்தின் விடுதலைப்போர் உச்சத்தை எட்டியது. அதனால் இலங்கையின் முப்படைகளும் இணைந்து வடக்கை தும்சம் செய்து கொண்டிருந்தது.

இதற்கு இலங்கை இராணுவம் மட்டுமல்ல, பலம் மிக்க சில நாடுகளின் பக்க பலமும் இலங்கைக்கும், இலங்கை இராணுவத்திற்கும் தாராளமாக கிடைத்தன.

அதனால், முள்ளிவாய்க்காலினை கடல், வான், தரை மும்புறமாகவும் இராணுவம் (கள்) சிதைக்கத் தொடங்கின. அங்கு பொழிந்து கொண்டிருந்த குண்டுகளுக்கும், எறிகணை வீச்சுகளுக்கு எவரும் தப்பிப் பிழைக்கவில்லை.

அலறியபடி மக்கள் அவலச் சாவினை அடைந்து கொண்டிருந்தனர். அங்கே சிதறிய உடல்களைக் கண்டு சிரித்தபடி வெறி கொண்டு இராணுவங்கள் புலிகள் என்ற போலிப் போர்வையில் அப்பாவிகளை அழித்தன.

அந்த கடைசி மூன்று நாள் யுத்தத்தில் மட்டும் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழராக, அதுவும் வடக்கில் பிறந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டனர்.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் திக்கெட்டும் மரண ஓலம் எதிரொலித்துக் கொண்டிருந்த தருணம்..,

செல்களின் தாக்குதலால் படுகாயமடைந்து தப்ப முடியாத காரணத்தால் பரிதாபமாக கிடந்த பல அப்பாவிகளை கொத்தாக அள்ளி உயிருடன் புதைத்தன யுத்தக்கள இராணுவம்.

யுத்தம் என்ற பெயரில் அப்போது நடைபெற்ற இனப்படுகொலைகளை வார்த்தைகளால் விரிவு அல்லது தெளிவு படுத்த முடியாது. வடக்கு தமிழர்களுக்கு எதிராக வெறித்தனங்கள் அவை.

பாதுகாப்பு வலயங்களுக்குள் வந்தவர்கள், சரணடைந்தவர்கள், உட்பட அனைவருக்கும் மரணங்கள் வாரி வழங்கப்பட்டன. யுத்த ஆரம்ப கட்டத்தில் இரசாயன குண்டுகளான பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்த ஜெனிவா அமைப்பு முற்றாக தடை விதித்தது.

ஆனால் முள்ளிவாய்க்காலில் அவை தாராளமாகவே பயன்படுத்தப்பட்டன. பொது மக்கள் தவிர பாடசாலைகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அப்போது ஜெனிவா ஓய்விற்காக சென்று விட்டதா என்பதும் இன்றுவரை மர்மமே.

அதனால் இவற்றினை இன அழிப்பு எனச் சொல்லாமல் வேறு எப்படி சொல்ல வேண்டும், சொல்ல முடியும் எனத் தெரியவில்லை.

யுத்தம் என்பது அங்கு வெளிக்காட்டப்பட்ட போலியான விடயம் ஆனால் அன்று முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டது தமிழர்களை அழிக்கும் இன அழிப்பு தான் என்பதனை உண்மையறிந்தவர் எவரும் மறுக்கமாட்டனர்.

இவ்வாறான ஓர் கொடுங்கொலைகளை செய்து, பிணங்களை பார்த்த பின்பும் கூட கொலை வெறி அடங்கவில்லை அப்போது புலிகளுக்கு எதிராக போர் செய்கின்றோம் எனக் கூறிக் கொண்டவர்களுக்கு.

அதனால் போரின் பின்னர் முள்வேலிகளால் அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் எஞ்சிய மக்கள் அனுப்பப்பட்டனர் திருத்தம் அடைக்கப்பட்டனர். முகாம் என்ற பெயரில் அங்கும் சாவினைவிடக் கொடிய துன்பம் அனைவருக்கும் கிடைத்தன. குறிப்பாக பெண்களுக்கு.,

பிணத்தையும் விட்டுவைக்காத வெறிமிக்கவர்கள் சதைப்பிண்டமாக பெண்களைப் பார்த்தால் என்ன நடக்கும்? தமிழ்ப் பெண்கள் மீது வெறித்தனமான பாலியல் வன் கொடுமைகள் நடாத்தப்பட்டன.

இதனைச் செய்வதனை விடவும் சுட்டுக் கொன்றிருந்தால் மன மகிழ்வுடன் செத்திருப்பார்கள் அங்கு பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்கள்.

மாற்றான் மனைவியாக இருந்தால் என்ன? பிள்ளைக்கு தாயாக இருந்தால் என்ன? சிறுமியாக இருந்தால் என்ன? முள்ளிவாய்க்காலில் யுத்தம் செய்த இராணுவத்தினருக்கு அவர்கள் சதைப் பிண்டமான காமப் பொருள் மட்டுமே.

கூட்டாகச் சேர்ந்து இத்தகைய ரணக் கொடூரத்தை செய்து விட்டு இன்று “இந்திய இராணுவமே தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிந்தது, இலங்கை இராணுவம் ஒழுக்கமானது” என கேவலம் எனும் பட்டம் மாறி மாறி சூட்டப்பட்டு வருகின்றது.

இங்கு குற்றம் செய்தவன் மானம் கெட்டவன் என்றால், அதனை வேடிக்கை பார்த்தவன் கேடு கெட்ட கேவலமானவன் என்பதனையும் அறியாமல் கதை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர் என்பது என் அகராதியில் இல்லை.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை இன்று மறைக்கப் பார்க்கலாம், மறுக்கவும் கூட பார்க்கலாம் ஆனால் மாற்றியமைக்க முடியாது, என்பதனை குற்றம் செய்தவர் உணரவேண்டிய காலம் எப்படியும் வந்தே தீரும்.

அது அரசன் வடிவில் வந்தாலும் சரி, தெய்வத்தின் வடிவில் வந்தாலும் சரி தீர்ப்புகளும் தண்டனைகளும் கிடைக்கும் என்பதும் திண்ணம். ஆனால் அது யாரால்? எப்போது? எப்படி என்ற கேள்விகளுக்கு மட்டும் இப்போதைக்கு மௌனம் அர்த்தம் மிக்க பதிலாகும்.

இலங்கையில் நடந்த இந்த கொலைகளை, கொடூரங்களை இலங்கை (அப்போதைய) அரசு மறுத்த போது 2010ஆம் ஆண்டு நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற சர்வதேச அமைப்பு விசாரணை செய்து பல போர்க் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.

அதன் பின்னர் அமெரிக்க சட்ட வல்லுநரான பிரான்சிஸ் போய்ல் என்பவர்…,

“1948 ஆம் ஆண்டு இன அழிப்பு தொடர்பாக ஓர் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கையெழுத்தினை இட்டுள்ள 140 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு அல்லது பல, இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்தப் படும் எனத் தெரிவித்தார்.

ஆனால் அது என்னவாயிற்று அதற்கடுத்து தொடர்ந்து என்ன நடக்கின்றது என்பது இன்றும் மர்மமாகவே இருக்கின்றது.

இங்கு இலங்கை செய்த இனப்படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் நேரடி, மறைமுக உதவிகளைச் செய்த நாடுகள் இன்று, இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவு அளப்பறியவை என்பதனையும் மறக்கலாகாது.

அதனால் நாளையாவது இதற்கான தீர்ப்புகள் கிடைக்கும் என்பதும் சீச் சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாகிவிடுமோ என்பதும் இப்போதைக்கு ஐயம் கலந்த அச்சம்.

அதேபோல 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாடுகளிடம் செய்து கொண்ட இனப்படுகொலைகளை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்பாடு மூலம் இலங்கை மீது போர்க்குற்றம் விசாரிக்கப்படும் எனப்பட்டது. இதுவும் நடந்ததா எனத் தெரியவில்லை.

இவை தவிர சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை போன்றனவிடம் இன அழிப்புகளுக்கு, இனப்படுகொலைகளுக்கு, போர்க்குற்றங்களுக்கு எதிராக பல உடன்பாடுகள் காணப்படுகின்றன.

அவை அனைத்தும் இலங்கை விடயத்தில் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளன. தப்பித் தவறிக் கூட நடைமுறைப்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சர்வதேசமும் மிக உன்னிப்பாக இருக்கின்றன என்பதே மறைக்கப்படும் உண்மை.

உதாரணமாக அயல் நாடான இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவாம். இருந்தும் என்ன பயன் இலங்கையில் இன அழிப்பிற்கு பங்களிப்பு செய்ததே அந்த தொப்புள் கொடி உறவுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஈழத்தமிழர்கள் என்பவர்கள், அவர்களின் அரசியல் இலாபங்களுக்கான பகடைக்காய்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

முள்ளிவாய்க்கால் என்பது இறுதியில் செய்யப்பட்ட வெளிப்படையாக தெரிந்ததோர் இன அழிப்பு. இது தவிர தொடர்ந்து முத்தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர்களுக்கு பாரிய அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டன.

அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை என்றுமே வார்த்தைகளால் வர்ணித்திட முடியாது. அவை உணரவும் கூட முடியாத அளவு கொடூரமானவை.

எது எவ்வாறாயினும் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பினை ஒட்டுமொத்த சர்வதேசமே வேடிக்கைத் தான் பார்த்தது இன்றும் அதனையே செய்கின்றது.

ஆனால் பெயருக்கு மட்டும் ஏதோ போர்க் குற்றம், விசாரணை, தீர்ப்பு என்ற மாயச் சித்தரிப்பு இன்றும் இருக்கத்தான் செய்கின்றது.

இவ்வகையில் முள்ளிவாய்கால் எனப்படும் குருதிச் சரித்திரம் மறைக்கப்படலாம், ஆனால் அதனால் ஏற்பட்ட வடுவினை தமிழர்கள் மனதில் இருந்து அகற்றிட முடியாது என்பது மட்டும் உண்மை. இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்பதும் ஓர் எதிர்ப்பார்ப்பு.

தொடரும்;;;;;;;;;;

SHARE