சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 14 முறை கர்ப்பமடைந்த சீனப் பெண்: நீதித்துறையை ஏமாற்றி வந்தது அம்பலம்

662

சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக பெண்மணி ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளில் 14 முறை கர்ப்பம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. images (8)

சீனாவில் உள்ள க்ஸிங்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி பகுதியை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஊழல் வழக்கில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையில் இருந்து தப்பிக்க, தான் கர்ப்பமாக இருப்பதாக அப்போதைய நீதிபதியிடம் அந்தப் பெண் தெரிவித்தார்.

அந்நாட்டு சட்டங்களின்படி, கர்ப்பிணிப் பெண்களை சிறையில் அடைப்பது முறையில்லை என்பதால் பிரசவத்துக்கு பின்னர் அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த சாதக அம்சத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள திட்டமிட்ட அந்தப் பெண், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி, கருக்கலைப்பு செய்து கொண்டார்.

பின்னர், உடல்நலம் தேறியதும் மீண்டும் கர்ப்பம் ஆனார். சில மாதங்களுக்கு பின்னர், அவரை தேடிவந்த பொலிசார் உப்பிய வயிற்றுடன் இருந்த அந்தப் பெண்ணை கைது செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் முறையிட்டு கைதாவதில் இருந்து அவர் மீண்டும் விலக்கு பெற்றார்.

இப்படியே கடந்த 10 ஆண்டுகளாக கர்ப்பிணியாவதும் கருச்சிதைவு செய்துகொள்வதும் என பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதும் சுதாரித்துக்கொண்ட பொலிசார், நீதித்துறை மற்றும் மருத்துவத்துறையின் உதவியுடன் இதுவரை ஏமாற்றி வந்த அந்தப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE