மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை ,அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள் …–தழிழீழ தேசிய தலைவர்

461

 

 

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதபட்டு இருக்கிறது…இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல ..இந்த வீரர்களின் சாவு எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக ,எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக ,எமது போரளிகளுன் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டன .இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள் சுகந்திரச்சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டு சென்ற வீர மறவர்கள் .எமது இனத்துன் சுகந்திரத்துக்காக கவுரவத்துக்காக ,பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் ( தியாகிகள் )காலம் காலமாக எமது இதய கோவிலில் பூசிக்கபடவேண்டியவர்கள்

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் .ஒரு சாதாரண மனித பிறவி அல்ல அவன் ஓர் இலட்சியவாதி ஓர் உயரிய இலட்சியத்துக்காக வாழ்பவன் ,மற்றவர்களின் விடிவிற்காக ,விமோசனத்திற்காக வாழ்பவன் ,சுயநலமற்ற , அவனது வாழ்க்கை உன்னதமானது.அர்த்தமுள்ள சுகந்திரம் என்ற உன்னத இலட்சியத்துக்காக அவன் தன உயிரையும் அர்பணிக்க துணிகிறான் .எனவே ,விடுதலை வீரர்கள் அபூர்வமான மனித பிறவிகள் ,அசாதாரணமான பிறவிகள் ,

” புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்”

வே பிரபாகரன்
தலைவர்
தமிழ்ழீழ விடுதலை புலிகள்

மாவீரர் நாள் கையேடு  

“மாவீரர் “
தேசவிடுதலைக்காய் தன்னை முழுமையாக அற்பனித்தும்
எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்க்கும் .
சத்திய வேள்வியில் நித்தமும் வேகி
கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து
உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து .
தமிழ்ழீழ மண்ணெங்கும் நினைவு சிலைகளாய் ஓவியமாய் …
வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ..
ஈழமண்ணில் புதுவிதையாய் .
விடுதலையின் தீச்சுடராகி ..
தேசமெங்கும் சோதியாய் நிற்பவரே ..
“மாவீரராவர்”

“ஏன் இவர்கள் மாவீரர்கள்”

தமிழ் இனவிடிவிற்காய் மரணித்தவர்கள்..
தேசம் துங்கியபோது விழித்திருந்தவர்கள்..
உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறைபோட்டவர்கள் ..
தேசமக்களின் பாசபினைப்புக்களுக்காக ..
தமது பாசங்களை பொசுக்கியவர்கள்..
பள்ளிப்பராயத்தை பள்ளி தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ..
ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள் ..
எல்லை சுற்றி வேலிச்சுவராய் நின்றவர்கள் ..
தமது மக்களுக்காய் கால்களை ,கரங்களை இழந்து நின்றவர்கள் …

**மாவீரர் நாள் கையேடு**  

“துயிலும் இல்லம்”

துயிலுமில்ல மைதான நடுவில் ,சற்று உயரமான சுடர் நாட்டபட்டு இருக்கும் .மக்கள் வெள்ளம் உணர்வு கொந்தளிப்போடு மைதானங்களை சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திட தீச்சுடர் ஏற்றப்படும் ,அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையோர் சமகாலத்தில் ஏற்றுவார்கள் .சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் ,வாசலிலும் மாவீரர் சுடரொளியை ஏற்றுவார்.

சுடரானது சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும் ,தமிழ்ழீழம் எங்கும் சுடரொளி ஓங்கிபரவும் ,மக்கள் முமுறி எழுந்து காண்ணீர்விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வுரு தமிழ்ழீழ மக்கள் மீட்டப்படும் .
சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவு கூறப்பட வேண்டும்,வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழ்ழீழம் எங்கும் மாவீரர் சுடர்கள் இந்த நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும்,சிட்டி விளக்கேற்றகூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்கேற்றி நினைவு கூறலாம், வாசலில் தீபங்கள் எரியும் போது பெரிய சுடர்கள் ஏற்றியும் நினைவுகூற வேண்டும் .
“இந்த சுடரேற்றும் நிகழ்வானது”
“விடுதலை பாதைக்கு”
“உறுதியையும் உணர்வையும்”
“கொடுத்து நிற்கிறது”

மாவீரர் நாள் கையேடு 

“*நவம்பர் (27 ) இரவு நிகழ்வுகள்*”

தேசியத்தலைவரின் மாவீரர் நாள் நினைவுரை

இன்று மாலை ( 6.05 ) மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்க கூடியதாக தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும்
நினைவொலி எழுப்புதல் (6.05 ) மணி
தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக ( 6.05 ) மணிக்கு அனைத்து வழிபாட்டு இடங்களிலும் மணி ஒலி ஒருமனித்துளி நேரம் எழுப்பப்படும் ,உயிர்காப்பு பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதுக்கு ஏற்ற வகையில் நிறுத்தபட்டு அமைதி பேணப்படல் வேண்டும்,
அகவணக்கம் (6.06 ) மணி
மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தபட்டவுடன் (6.06 ) மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும்.இந்த நேரம் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழ்ழீழ மக்கள் எழுத்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும் .
ஈகை சுடர்ரேற்ருதல் ( 6.07 ) மணி
அகவணக்கம் நிறைவுற்றதும் ( 6.07 ) மணிக்கு ஈகைசுடர் ஏற்றபடல் வேண்டும் ( மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள் ,நினைவு கற்களுக்கு முன்னால் ( 5.15 ) மணிக்கு நிற்ககூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும்)

மாவீரர் நாள் கையேடு 

மாவீர துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர் கல்லறைகள் நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் அதே நேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கு என ஒழுங்கு செய்யபட்ட இடங்களில் ஈகைசுடர் ஏற்றுவார் ,

இவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராத பொதுமக்கள் தமது இல்லங்களில் ,பொது இடங்கள். அலுவலகங்கள்,விளையாட்டு இடங்கள் ,தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைசுடர் ஏற்றுவார் ,ஏற்றும் பொது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும் ( மாவீரர் ஈகைசுடர் ஏற்றப்படும் நேரத்தில் அதன்நோக்கம் புரிந்துகொள்ளாது .வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறுவகையில் ஒலி ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும் .

அலங்காரம் (சோடனை)
எமது அமைப்பை சார்ந்த வீரச்சாவு ,வீரவணக்க கூட்டம் ,துயிலுமில்ல, மாவீரர் விசேட நிகழ்வு வேறு அனைத்து நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள் ,சமுக சமய ,வேறு அரசியல் சார்ந்ததாக இருக்காமல் எமது தேசியக்கொடி நிறங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டுமென கேட்டு கொள்ளுகிறேன்.
எமது அலங்கார முறையும் ,நிறங்களும்
சிவப்பு ,மஞ்சள் ,கருப்பு -தேசியக்கொடியைப் பிரதிபலிக்கும் ,கருப்பு கரும்புலிகள் தினத்திற்கும் கரும்புலிகள் சம்மந்தமான நிகழ்வுகளுக்கு மட்டும் கலந்து சோடிக்கலாம் ..

மாவீரர் நாள் கையேடு 

*வீரச்சாவு கால் நாடடலுக்கு சிவப்பு மஞ்சள் துணிகளை பாவித்தல் வேண்டும் .

*மேசை விரிப்பு ,பீட விரிப்புகளும் சிவப்பு மஞ்சள் துணியாக இருந்ததால் வேண்டும் ,வெள்ளை விரித்தல் தவிர்ப்பது நன்று

*இசசோடனைகளை தனித்துவமாக மாவீரர்களின் தற்கொடை தியாகம் ,அமைப்பு இலட்சியங்களை மக்கள் மனங்களில் தோன்றி பதிந்து எமது போராட்டத்தின் பால் இணைந்து செயற்பட வழிசமைத்தல் வேண்டும் ..

கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் ஆரம்ப நிகழ்வுகள்
( 1 ) பொதுச்சுடர்
(2 )தேசியக்கொடி ஏற்றல்
( 3)ஈகைசுடர்
( 4 ) மலர்வணக்கம்
( 5 ) அகவணக்கம்
( 6 ) உறுதியுரை
(7 )நினைவுரை
*எமது மாவீரர் நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைசுடர் ஏற்றுதல் கட்டாயமாகும் ,மங்கள விளக்கு ஏற்றகூடாது
*அகவனக்கத்திற்க்கு நேரம் குறிக்க கூடாது ..

மாவீரர் நாள் கையேடு 

***தவிர்க்க வேண்டியவை***
அன்ஞ்லி ,மவுன வணக்கம் ,மலரஞ்சலி ,மங்கள விளக்கு ,அஞ்சலிஉரை,அஞ்சலி கூட்டம் ,அகவணக்கம் -ஒருநிமிடம் இரு நிமிடம் என குறித்து குறுதல்
****சேர்க்கப்பட வேண்டியவை ****
*வீரவணக்கம் ,அகவணக்கம் ,மலர்வணக்கம் ஈகைசுடர் ,வீரவணக்க உரை ,வீரச்சாவு வீரச்சாவு கூட்டம்
***முக்கிய விடையம்***
மாலை ( 6.00 ) மணிக்குப் பின்னர் எந்த நிகழ்வுக்கும் தேசியக்கொடி ஏற்றுதல் தவிர்க்கபடல் வேண்டும் ,இரவு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுமானால் நிகழ்வு முடிய இறக்குதல் வேண்டும் ,இரவில் தேசியக்கொடிக்கு வெளிச்சம் இருத்தல் வேண்டும் .

*எக்காரணம் கொண்டும் தேசியக்கொடி கம்பத்துடன் மடித்து கட்டுதல் வேண்டும்,தேசியக்கொடியை மடித்து பீடத்திற்கு அருகில் ஒரு இருக்கையில் வைக்க வேண்டும் ..
*போற்றப்பட வேண்டிய பண்பாடகட்டும்*
எமது தாயகமாம் தமிழ்ழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும்,மாவீரர் நாள் என்பது தமிழ் ஈழத்தின் விடிவிற்காகவும் உயர்வுக்ககாவும் உழைத்து உயிரை தற்கொடையாக ஈந்து ,இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் .எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும் ..

உங்கள் உயிரினும் மேலான குழந்தைகளும் ,எமது சக போராளிக்களுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறைக்கப்பட முடியாதவையாகும் ,புனித தன்மை வாய்ந்ததாகும் ,காலம் கலாமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியதாகும் ..
இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் இருக்கும் ,மாவீர்களின் இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக இருந்து விடாது ,எமது மக்களின் வரலாற்று சுவடியகவும் பண்பாட்டுக்கு உரியவையாகவும் வளர்ந்து வரவேண்டும் .

இந்த எமக்குரிய உயரிய நிகழ்வை தத்துவார்த்த மாகவும் ,உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழ்ழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ,ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கிறோம்,
*புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம் *
நன்றி !
*பணி முதல்வர்*
*தமிழீழ மாவீரர் பணிமனை*
*அரசியல்துறை*
*தமிழீழ விடுதலை புலிகள்*
*தமிழீழம்*
மாவீரர் நினைவாக அனுஸ்டிக்கப்படும் நாட்கள்
1) கடலில் காவியமான கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாக ( 16-01-1993 )
2)அன்னைபூவதி அம்மா நினைவு நாள் மார்ச் மாதம் (19 ) ஆம் தொடக்கம் ஏப்ரல் மாதம் (19 ) ஆம் திகதி வரை
3)கரும்புலிகள் தினம் ( 05-07-1987 )
)தியாக தீபம் நினைவு நாள் செப்டம்பர் ( 15 ) ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் (26 ) ஆம் திகதி வரை
)குமரப்பா புலேந்திரன் உட்பட (12 ) வேங்கைகள் சயனேட் அருந்தி வீரச்சாவு அடைந்த நாள் ஒக்டோபர் மாதம் ( 5 ) ஆம் திகதி
)தழிழீழ விடுதலை போரில் இன்னுயிர் ஈந்த முதற் பெண் புலி மாலதி -( தமிழீழ பெண்கள் எழுர்ச்சி நாள் )(10-10-1987 ( )
)மாவீரர் நாள் நவம்பர் மாதம் (25 ) ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் ( 27 ) ஆம் திகதி வரை

*தமிழீழ மாவீரன் பணிமனை
*அரசியல்துறை
*தமிழீழ விடுதலை புலிகள்
*தமிழீழம்

” எங்கள்  தேசிய கொடியிது”
 ஏறுதுபார்  கொடி  ஏறுதுபார்-
ஏறுதுபார்  கொடி  ஏறுதுபார்-இங்கு
ஏறுதுபார்  கொடி  ஏறுதுபார் -தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி -எட்டு
திக்கிலும் மானத்தை செர்த்தகொடி
காலத்தை வென்றுமே  நின்றகொடி -புலி
காட்டிய பாதையில் சென்றகொடி
  ஏறுதுபார்கொடி
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
சீறிடும் கொடியிது -தமிழ்
மக்களைகாத்த நம் மானமா வீரரை
வாழ்த்திடும் கொடியிது -புலி
வீரத்தின் கொடியிது -மா
வீரரின் கொடியிது
ஏறுதுபார்கொடி
எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது -பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாற்றிய கொடியிது -தமிழ்
ஈழத்தின் கொடியிது -புலி
ஏந்திய கொடியிது
ஏறுதுபார்கொடி
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனை கொடியிது -சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது -சம தர்மத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது
ஏறுதுபார்கொடி
ஆயிரமாயிரம் பேரனே வேங்கைகள்
ஆக்கிய கொடியிது -பிர
பாகரன்  என்றிடும் காவியநாயகன்
போற்றிடும் கொடியிது  தமிழ்
தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது

SHARE