மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்று  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  செயற்ப்பாடுகள் இலங்கை அரசியலில் அர்த்தமற்றது

315

 

05

கடந்த வருடம் செப்டம்பர் 21ம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பிறகு இத்தகையதொரு ஊடகவியலாளர் சந்திப்பை இன்று தான் நடத்துகின்றேன் என நினைக்கின்றேன்.

விசேடமாக தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக தௌpவூபடுத்தவே நான் எதிர்பார்க்கின்றேன்.

தற்போதை அரசியல் சூழ்நிலை தொடர்பாக கதைக்கும்போதுஇ நான் அனைவரினது கவனத்தையூம் ஈHத்து கடந்த ஜனவரி 8ம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட பிரதான காரணமாக இருந்த மக்களுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் உங்கள் கவனத்தை கொண்டுபோக வேண்டும் என நினைக்கின்றேன்.

ஜனவரி 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம்இ ஜனநாயக புரட்சிஇ சாதாரணமாக இத்தகைய மாற்றம் மிக குறுகிய காலத்தில்இ அதாவது நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நவம்பர் 21ம் திகதி முதல் ஜனவரி 8 ம் திகதி வரையான 42 நாட்களுக்குள் இடம்பெற்றது. நாட்டின் எதிர்காலத்திற்காக ஜனநாயகம்இ சுதந்திரம்இ அடிப்படை உரிமைஇ மனித உரிமைகள்இ ஊடக சுதந்திரம் இவை அனைத்தையூம் உறுதிப்படுத்தும் புதிய அரசாங்கமொன்றை உருவாக்க 42 நாட்களில் எம்மால் முடிந்தது.

இதன்போது நான் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் விசேடமாக நல்லாட்சி தொடர்பாக நான் ஞாபகப்படுத்துகின்றேன். இந்த விஞ்ஞாபனத்தை மிக முக்கியமானதாக கருதி நாட்டு மக்கள் முன் சமர்ப்பித்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பொது வேட்பாளராக களமிறங்கிய என்னை வெற்றிபெறச் செய்வதற்கான பின்னணியை ஏற்படுத்தியது.

எனது 49 வருட அரசியலில் நான் பெற்ற அனுபவங்களான  பாராளுமன்ற உறுப்பினர்இ பிரதி அமைச்சர்இ அமைச்சர் போன்றனவூம்இ இந்த 49 வருடத்தில் நான் ஆற்றிய சேவைகளுக்காகவூம் பொதுமக்கள் மத்தியில் எனக்கொரு நன்மதிப்பு கிடைத்திருந்தது. நான் ஊழல் செய்பவன் அல்ல. அதேநேரம் மிக தௌpவாக சுதந்திரத்தையூம்இ ஜனநாயகத்தையூம் பாதுகாக்கும் ஒருவனாவேன். எனக்கு கிடைக்கும் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தமாட்டேன்இ எனவே ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவன் என்ற கருத்து மக்களிடையே நிலவியது. எனது குணநலன்கள்இ ஆளுமை மற்றும் நீண்டகால அரசியல் அனுபவங்களுடன் இணைந்திருந்த எனது அரசியல் நற்பெயர் காரணமாக மக்கள் என்மீது நம்பிக்கை மற்றும் எதிர்பார்பபை வைத்திருந்தனர்.

நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் பிரதானமாக என்னை தேர்தலுக்கு பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் வரைஇ நான் அப்போதும் கூறியதை போன்று நவம்பர் 21ம் திகதி அரசாங்கத்திலிருந்து வெளியேறும் வரை ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களை ஒருநாள் சந்தித்து ஒரு மணித்தியாலயத்திற்கும் குறைவாக கலந்துரையாடியிருந்தேன். அதேபோல் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை 49அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கைச்சாத்திட்டோம்.

அந்த 49 குழுக்களில் பெரும்பாலானவர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவூம் இல்லை. அதாவது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்ததும்இ கைச்சாத்திட்டதும் அந்த குழுக்களின் பிரதிநிதிகளை கொண்டவர்கள்இ அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜெனரால் சரத் பொன்சேக்காவின் ஜனநாயக கட்சியூம் அதேபோல் முஸ்லிம் காங்கிரஸ்இ முஸ்லிம் தேசிய முன்னணிஇ தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றவற்றுடன் ஒப்பந்தமின்றியூம்இ மக்கள் விடுதலை முன்னணியூடன் ஒப்பந்தமின்றியூம் அவர்களது ஒத்துழைப்பு கிடைத்தது.

அந்த ஒத்துழைப்புடன் எம்மால் வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த வெற்றியை பெற்று ஜனவரி 9ம் திகதி இத்தகைய மாலைப் பொழுதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டேன். அதன்மூலம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களையூம் நான் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வையூம் நிறைவேற்றும் பொறுப்பு என் மீது வந்தது.

ஜனவரி 8 இற்கு முன்னர் கைச்சாத்திட்ட இரண்டு புரிந்துணர்வூகள் இருந்தன. அதில் ஒன்று தான் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு உரிய தகவல்கள் தொடர்பாக அந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் 49 உடன் நாங்கள் கைச்சாத்திட்டது.

இரண்டாவது நான் ஜனாதிபதியானவூடன் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமிப்பது. அதற்கமைய நான் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சில நிமிடங்களிலேயே ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக்கினேன்.

ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக்கும் போது பாராளுமன்றத்தின் நிலைமை என்ன? பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகும்போது ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 47 ஆகும். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை நான் பிரதமராக்கினேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றக்கொண்டது தவறு என்றும்இ அவ்வாறு செய்யாமல் இருந்திருக்க வேண்டும் எனவூம் என்னை பதவிக் கொண்டு வந்தவர்களும்இ எனக்கு நெருக்கமானவர்களும் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.

பாராளுமன்றத்தில் 225 பேரில் 47 பேரின் ஆதரவை கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக்கி அத்துடன் கையெழுத்திட்ட இந்த புரிந்துணர்வில் எனது விருப்பம் எதுவாக இருந்ததென்றால்இ ஜனவரி 9ம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு 10ம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது. மிக இலகுவானது அதுவே என்பதே எனது நம்பிக்கையாகும்.

எனினும் இந்த விஞ்ஞாபனத்தை தயாரித்த அமைப்புகளிள் ஒருங்கிணைந்த முடிவூ பாராளுமன்றத்தை கலைக்காமல்இ 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும். இந்த 100 நாள் திட்டத்தில் சாதாரண விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியூம்.

அரசியலமைப்பை மாற்றுதல். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் அல்லது அதன் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்குஇ சுயாதீன ஆணைக்குழுக்களுக்குஇ ஏனைய நிறுவனங்களுக்குஇ அமைச்சரவை வழங்குவதாக நான் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டது பாரிய தவறென குற்றஞ்சாட்டிய என் நண்பர்களிடம் கேட்பது எதுவெனில்இ 47 பேரைக் கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக்கிஇ எனக்கு அரசியலமைப்பின் 19வது திருத்தை மேற்கொள்ள முடிந்தது. அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழித்தல்இ அதன் அதிகாரங்களை குறைத்தல். நான் இந்த பதவிக்கு வர முன்னர் எனது இரண்;டு கைகளையூம் உயர்த்திக் கொண்டு வந்தது பதவியை இல்லாதொழித்தல் மற்றும் அதிகாரங்களை குறைத்தல் போன்ற நோக்கத்துடனேயே. நான் நேற்றும்இ இன்றும்இ நாளையூம் அதே நிலைப்பாட்டுடனே இருப்பேன். அதுதான் எனது கொள்கை. நாட்டு மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காகவூம் பொது மக்களுக்காகவூம் அந்த நடவடிக்கையை எடுத்தேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நான் ஜனவரி 16 ஆம் திகதி ஏற்றுக்கொண்டேன். அதையூம் நான் பலவந்தமாக பெற்றுக்கொள்ளவில்லை. நான் கேட்கவூம் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் பொறுப்பேற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திப்போம் என அவர்கள் கூறினார்கள். சபாநாயகரின் இல்லத்தில் 10இ15 நிமிட கலந்துரையாடல் நடைபெற்றது. கட்சியை பொறுப்பேற்குமாறு கூறினார். நானும் விருப்பத்தை தெரிவித்தேன். மறுநாள் மத்திய செயற்குழுவையூம்  நிறைவேற்றுக்குழுவையூம் கூட்டி கையளித்தார்கள்.

பாராளுமன்றத்தில் 2ஃ3 அதிகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர். ஆகவே நான் பாராளுமன்றத்தில் 2ஃ3 அதிகாரம் உள்ள 142 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தiலைவராக நியமிக்கப்பட்டேன். ஆகவே நூறு நாள் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க  முடிந்தது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது மாத்திரமல்ல இன்று ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைவரும் பேசுகின்ற மக்களுக்கான நிவாரணங்கள்இ அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புஇ எண்ணெய் விலைஇ எரிவாயூ விலைஇ பொருட்களின் விலை குறைப்பு ஆகியவற்றை நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்றதன் மூலமே பெற்றுக்கொடுக்க முடிந்தது.  கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் வழிநடத்தியதாலேயே தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தவற்றை சாத்தியமாக்கிக்கொள்ள முடிந்தது

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகாமல் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைவராக பதவியில் இருந்திருந்தால் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இடமளித்திருக்கமாட்டார். பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரின் வரவூ செலவூத் திட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைவர் பதவியில் இருந்திருந்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள்இ பொருட்களின் விலை குறைப்புஇ சம்பள அதிகரிப்பு ஆகியவற்றுக்கான வரவூ செலவூத் திட்டத்தை நிறைவேற்ற இடமளித்திருக்க மாட்டார்.

அப்படியாயின் இன்று பேசப்படுகின்ற 100 நாள் திட்டத்தின் வெற்றிக்கு  ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எனது வெற்றிக்காக செயற்பட்ட 49 கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து வித்திட்டன. அதேபோன்று வகுக்கப்பட்ட திட்டம்  செயற்படுத்தப்பட்டமைக்கான முழு கௌரவமும் பாராளுமன்றத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையூம் சாரும்.

19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக 225 பேரில் 215 பேர் வாக்களித்தனர். நான் சொல்வதை செய்யாத ஒருவராக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்காது. அதேபோன்று தற்போது என்னை சிலர் வில்லன்இ துரோகிஇ காட்டிக்கொடுத்தவர் என கூறுகின்றனர். இதோ தற்போது ஜனநாயகத்தின் மலர்கள் மலர்ந்துள்ளன. ஜனநாயகம் பெருக்கெடுத்தோடுகிறது. ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட 78 ஆம் ஆண்டில் இருந்து ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் மூலம் இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட  ஆட்சி வரை நாட்டை ஆண்ட எந்தவொரு அரச தலைவரும் ஜனாதிபதியூம்  இந்த இரண்டு வார காலத்தில் நான் சந்தித்தளவூ விமர்சனங்களை சந்தித்திருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு காலத்திலும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட விடயங்கள்இ ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட விதம்இ ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்ட விதம் தொடர்பாக நான் உங்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக காலத்தை செலவிடப் போவதில்லை. உங்களைப் போன்றே இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட நாள் முதல் இந்த நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை கண்டவர்கள் அதனை நன்கு அறிவார்கள்

56 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்ய+.ஆர்.டி. பண்டாரநாயக்க பொதுஜன அரசாங்கத்தை உருவாக்கி நாட்டில் ஜனநாயக நீரோட்டத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுத்து சுதந்திரத்தை வழங்கி முற்போக்கு சட்டங்களை நிறைவேற்றி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். பண்டாரநாயக்க அவர்கள் ஆட்சிசெய்த மூன்றரை வருடங்களில் மாத்திரம் 459 வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பண்டாரநாயக்க அவர்களின் அமைச்சரவையூம் அமைச்சரவை கூட்டங்களை புறக்கணித்தது. அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. வேலை நிறுத்தம் நீடித்துச் சென்றபோது அதற்கு முன்னர் இருந்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலஇ நான் கட்டிவைத்திருந்த நாய்களை பண்டா அவிழ்த்து விட்டார். தற்போது அவை பண்டாவையே கடிக்கின்றன என்றார்.

ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டின் மக்கள் செய்த புரட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கினேன். நாட்டின் ஜனநாயகத்தை மிகவூம் தௌpவாக உறுதிப்படுத்தி அதற்காக பொறுப்புடன் செயற்பட்ட என்னை ஒரு சில ஊடக நிறுவனங்களும்  அரசியல் ஆய்வாளர்களும் கைகளை இறுக்கி துரோகிஇ வில்லன்இ காட்டிக்கொடுப்பவன் என எழுதுகின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை கூறுகின்றேன். ஜனநாயகத்தை நன்கு சுவையூங்கள். ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற புரட்சியின் ஊடாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை சீர்குலைக்க வேண்டாம்.

ஆறு மாதங்களுக்குள் இந்த சொற்பதங்;கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால் ஜனவரி எட்டாம் திகதிக்கு முன்னர் இன்று பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் என்மீது சுமத்தப்படுகின்ற  அவதூறில் ஒரு வீதம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இடம்பெற்ற சம்பங்கள் ஊடாக நாட்டு மக்களும் நீங்கள் உணரக்கூடியதாக இருக்கும். அதுவே உண்மை நிலை. கடந்த காலத்தில் இலங்கையில் மன்னர் ஆட்சியே  இருந்தது. ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் ஊடக நிறுவனங்களுக்கு எவ்வாறான ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள்மீது எவ்வளவூ வேண்டுமானாலும் அவதுறு சுமத்துங்கள். ஆனால் ராஜபக்ஷ குடும்பத்திலுள்ள  எவர் தொடர்பிலும் அவதூறாக பேசக் கூடாது.

இந்த ஆறு மாதங்களாக நாட்டில் கொலைகள் இடம்பெறவில்லை. இரத்தக் களறி ஏற்படவில்லை. பாரிய வன்முறைகள் இல்லை. நாடு அமைதியாகவூள்ளது. சுதந்திரம் உள்ளது. ஜனநாயகம் உள்ளது. 225 பேர் உள்ள பாராளுமன்றத்தில் 47 பேரை கொண்டுள்ள தரப்பிலிருந்து பிரதமர் ஒருவரை நியமித்து அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டு வரவூ செலவூத் திட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றினோம். குறிப்பாக இந்த நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய  தேவை எனக்கு இருந்தது.

இந்த நிலைமையின்கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டன. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கட்சியை என்னிடம் கையளித்துவிட்டு இரண்டு வாரங்கள் கடத்ததும் மறுபக்கம் திரும்பி காலை வாறுவதற்கு ஆரம்பித்தார். கட்சியை களங்கமற்றஇ தூய்மையானஇ கரைப்படியாத கட்சியாக ஊழலிருந்தும் மோசடியில் இருந்தும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடமிருந்தும் சந்தர்ப்பவாதிகளிடமிருந்தும் அரச வளங்களை சூறையாடுவோரிடமிருந்தும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வோரிடமிருந்தும் குடும்ப ஆட்சியிலிருந்தும் மீட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதற்காக நான் பாரிய முயற்சிகொண்டு நடவடிக்கை எடுத்துவந்தேன்.

ஒரு புறம் பாராளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டுள்ள தலைவரை பிரதமராக்கி அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டும். மறுபுறம் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தின் விருப்பத்தை பெற்றே நான் கூறியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர்கள் எனக்கெதிராக நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தத் தொடங்கினர். நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி 10 பேர் மேடையில் ஏறினார்கள். அடுத்த கூட்டத்தில் 20 பேர் ஏறினார்கள். இந்தக் கூட்டத்தில் 40 பேர் ஏறினார்கள். அந்தக் கூட்டத்தில் 50 பேர் ஏறினார்கள் என பிரசாரம் செய்தனர். இதனூடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. அந்த அழுத்தம் எனக்கே கொடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்கின்றீர்கள் எனவூம் ஏன் குற்றப் பத்திரிகைகளை வழங்காதுள்ளீர்கள் எனவூம் மறுபுறம் கேட்டனர். தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனைக்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏகோபித்த இணக்கத்தை தெரிவித்திருந்தது.

பாராளுமன்றக் குழு ஏகமனதாக தீர்மானங்களை எடுத்தது. எவ்வித ஆட்சேபனையூம் இருக்கவில்லை. எனினும் அத்தகைய தீர்மானங்களை மேற்கொண்டும் அதற்கு எதிராக செயற்படுகின்றபோது கட்சிக்குள்ளேயூம் நாட்டு மக்களும் அரசியல் எதிர்தரப்பினரும் ஏன் ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என வினவினர். ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கவில்லை என கேட்டனர். ஏன் ஓழுக்காற்று நடடிக்கை மேற்கொண்டு அவர்களது பாராளுமன்ற ஆசனத்தை இரத்துச் செய்யவில்லை என வினவினர். எப்படி ஒழுக்காற்று விசாரணை நடத்த முடியூம். எப்படி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க முடியூம். 47 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட பிரதமர் ஒருவருடன்  பாராளுமன்றத்தை முன்னெடுக்க வேண்டும் அல்லவா. சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் அல்லவா. சட்டங்களை நிறைவேற்ற முடியூமா?அரசியலமைப்பு திருத்தம் சாத்தியப்படுமா?வரவூ செலவூத் திட்டத்தை நிiறைவேற்ற முடியூமா? சுயாதீன ஆணைக்குழுக்களை கொண்டுவர முடியூமா? ஒன்றுமே சாத்தியப்டாது. ஆகவே அந்த அனைத்து ஒழுக்கமீறல்களுக்கு மத்தியிலும் நான் பொறுப்பேற்ற 100 நாள் செயற்றிட்டத்தை நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவற்றை கண்டும் காணாததைப் போன்று இருந்தேன். நான் மிகவூம் நெகிழ்வூப் போக்கினை கடைப்பிடித்தேன். நான் அறிந்த வரையில் தமது கட்சியினர் இவ்வாறு செயற்பட்ட சந்தர்ப்பங்களில் நாட்டின் எந்தவொரு தலைவரும் இந்த அளவூ நெகிழ்வூப் போக்கினை பின்பற்றவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே நான் நெகிழ்வூப் போக்கை கடைப்பிடித்தேன். தோற்கவிருந்த வரவூ செலவூத் திட்டத்தை நிறைவேற்றவே அவ்வாறு செயற்பட்டேன். இதற்காகவே  அந்த ஒத்துழைப்பு கிடைத்தது.

இந்த பின்புலத்திலேயே இன்று நாம் பொதுத் தேர்தலுக்கு சென்றுள்ளோம். இந்த பொதுத் தேர்தலின் முடிவூகளில் குறிப்பாக அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை அதேபோன்று பொருளாதாரம் தொடர்பான முக்கிய பொறுப்பு நாட்டை வழிநடத்துதல் முகாமைத்துவம் என்பன தேர்தலூடாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தில் தங்கியூள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டமை தொடர்பில் தற்போது என்மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்; தலைவர் பதவியை ஏற்றது தவறு என கூறுகின்றார்கள். அதற்கு நான் பதிலளித்தேன். அடுத்தது நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தது தவறு என்கிறார்கள். வேட்பு மனு வழங்கப்பட்டமை மிகப்பெரிய தவறு என மூன்றாவதாக கூறுகிறார்கள்.

நீங்கள் அனைவரும் அறிந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ மூன்று சந்தர்ப்பங்களில் என்னை சந்தித்தார். முதலாவது சந்திப்பு சபாநாயகர் இல்லத்தில் கட்சியை பொறுப்பேற்பது தொடர்பில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பை முழுநாடும் காணக்கூடியதாக இருந்தது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வந்திருந்த பிரதிநிதிகள் பொதுத் தேர்தலை இலக்காக வைத்து நான்கு கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலின் பின்னர் பிரதமராக்குவது அவர்களின் முதலாவது கோரிக்கையாகும். அப்போது இருந்த சூழ்நிலையின்கீழ் பாராளுமன்றத்தில் இருந்த ஒருசில பிரேரணைகளுக்கு ஆட்சேபனை வெளியிட்டனர். இதுபோன்ற விடயங்களே முன்வைக்கப்பட்டன. நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை  பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையூம் திட்டவட்டமாக நிராகரித்தேன். பிரதமர் பதவியை வழங்க எனக்கு விருப்பம் இல்லை என்றேன். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவூம் விரும்பவில்லை என குறிப்பிட்டேன். எந்த வகையிலும் இந்த கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவி;க்க முடியாது என்றேன். ஏன் எதிர்க்கின்றீர்கள் என கேட்டார்கள். ஜனவரி எட்டாம் திகதி கிடைத்த வெற்றியை திசை திருப்புவதற்கு என்னால்  முடியாது என்றேன்.

அத்தோடு நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என நான் கூறினேன். அந்த அடிப்படை விடயங்கள் என்ன? நீங்கள் கட்சிக்கு திரும்பினால் தமிழ்இமுஸ்லிம் வாக்குகள் கட்சிக்கு கிடைக்காதுபோகும்  என நான் குறிப்பிட்டேன்.

அடுத்ததாக உலகம் பூராகவூம் வியாபித்துள்ள புதிய அரசியல் கலாசாரம். நாடுகளில் அரசுகளில் காணப்படுகின்ற ஊழலுக்கு எதிரான அலைஇ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல்இ இந்த நாட்டில் படித்த புத்திசாதுர்யமானவர்களைப் போன்றே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் நாட்டின் நல்லாட்சிக்காக நான் தெரிவூ செய்யப்பட்டதால்  அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக நான் செயப்படுகின்றேன். அந்த விடயத்தில் நீங்கள் பூரணத்துவம் அடையவில்லை. நல்லாட்சிக்கான தகைமைகள் உங்களிடம் இல்லை. அடுத்தது இளைஞர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். உங்கள் ஆட்சியின்போது நடந்த பாரிய குற்றங்களே அதற்கு காரணம். மன்னர் ஆட்சியே காரணம். ஊழல் மோசடிஇ குடும்ப ஆட்சியால் வாக்களிக்க மாட்டார்கள். ஆகவே தேர்தலில் களமிறங்கி கட்சியை தோற்கடிக்க வேண்டாம் என நான் கூறினேன். இணக்கப்பாடின்றியே அந்த கலந்துரையாடல் நிறைவூபெற்றது.

இதற்கிடையே நாம் அரசாங்கம் என்ற வகையில் பாராளுமன்றம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தோம். தேர்தல் நெருங்கியது. 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை முக்கியமாக எனக்கும்இ ஐக்கிய தேசியக் கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணிஇ தமிழ் தேசியக் கூட்டமைப்புஇ முஸ்லிம் காங்கிரஸ்இ சரத் பொன்சேகா அவர்களின் கட்சி உள்ளிட்ட என்னை ஆட்சிக்கு கொண்டுவந்த அனைத்து அமைப்புக்களுக்கும் இருந்தது. ஆட்சிக்கு வந்தவூடன்  நடவடிக்கைகளை மேற்கொண்டு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்தபோது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எங்கே என கேள்வி எழுப்பினர். 19 ஆவது திருத்தம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்ட பின்புலத்தில் 19 ஐயூம் 20 ஐயூம் ஒரே தடவையில் கொண்டுவர முடியாது என கூறினேன். 19 வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே 20 ஐ இணைக்க முடியாது. 20 ஐ தனியாக கொண்டுவர வேண்டும்.

20 ஆம் திருத்தம் கொண்டுவரப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டால் மாத்திரமே 19 க்கு சார்பாக கைகளை உயர்த்துவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். நான் ரணில் விக்ரமசிங்க அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைவருடனும் கதைத்தேன். கூட்டமைப்பின் வாக்குகளை பெறுவதாக இருந்தால் 19 உடன் 20ஐயூம் கொண்டுவர வேண்டும் என்றேன். ஆம் கொண்டுவரலாம் என்றார்கள். 19 நிறைவேற்றப்பட்டதும் 20 வரும் வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.19 ஐ நான் தயாரிக்கவில்லை அல்லவா. எனது பூரண இணக்கப்பாட்டுடன் சட்ட வல்லுநர்கள் மற்றும் கட்சிகள் இணைந்தே 19 ஐ தயாரித்தார்கள். எங்கே 20 என நான் பார்த்தேன். அத்தோடு 20 எங்கே என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் வினவூகின்றனர். 20 கொட்டியூள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் 19 அதேபோன்று 20 அதேபோன்று தகவல் அறியூம் சட்டம் கணக்காய்வூ சட்டம் என்பவையூம் கொண்டுவரப்படும் என தௌpவாக கூறப்பட்டிருந்தது.

கணக்காய்வூ சட்டமும் தகவல் அறியூம் சட்டமும் தயாரிக்கப்பட்டன. அப்போது 20 இ 19ஐ தயாரித்தவர்களிடமிருந்து விடுபட்டது. தகவல் சட்டம் இல்லை. கணக்காய்வூ சட்டம் இல்லை. நாட்டின் ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தும்போது அரச துறையின் விலைமனுக் கோரல் நடைமுறை ஊழல் மிக்கது. நான் இதனை 10 வருடங்களுக்கு முன்னதாக இருந்தே கூறிவருகிறேன். அதனை நாடு அறியூம். ஆகவே விலை மனு கோரல் நடைமுறையில் உள்ள ஊழலை ஒழித்து நாட்டில் சிறந்த நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காக ஊழலற்ற விலைமனு நடைமுறையை ஏற்படுத்தி நிதி பிரிவூகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த கணக்காய்வூ சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் மத்திய வங்கி  ஆளுநர் தொடர்பான சர்ச்சை எழுந்தது. அது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்ததாக பாராளுமன்றத்தின் பொது முயற்சிகளுக்கான நிலையியற்குழு அது தொடர்பில் நடவடிக்கைகளை அரம்பித்தது. பொதுவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் உள்ளது. ரணில் விக்ரமசிங்க அவர்கள் திருட மாட்டார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஊழலில் ஈடுபடாதவர் என கருதுகின்றனர். மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பான பிரச்சினை எழுந்தபோது நாம் அவ்வப்போது அது தொடர்பில் கலந்துரையாடினோம். நான் இறுதி சந்தர்ப்பத்தில் அவரிடம் ஒரு விடயத்தை கூறினேன். உங்களுக்கென நற்பெயர் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான பின்னணியில் நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆகவே மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகுவதே சிறந்ததென குறிப்பிட்டேன்.

இந்த பின்புலத்துடனேயே நாம் வேட்புமனு தாக்கல் வரை வந்தோம். வேட்புமனு தாக்களின்போது குறிப்பாக நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல்களின்போது அந்தந்த கட்சிகளின் யாப்பிற்கு அமைய கட்சியின் கொள்கைகளுக்கு அமைய எவ்வாறு வேட்பாளர்களை தெரிவூ செய்ய வேண்டும் என்பது தௌpவாக கூறப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவூம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவூ செய்யூம் விதத்தை கட்சியில் இருப்பவர்களே அறிவார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்களே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவூ செய்வார்கள். ஏனைய அரசியல் கட்சிகளும் அவ்வாறே செயற்படுகின்றன. வேட்பாளர்களை தெரிவூ செய்யூம் நடைமுறையின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியூம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் எவ்வாறு வேட்பாளர்களை தெரிவூ செய்கின்றன என்பதை கூற வேண்டும். விண்ணப்பங்கள் கோரப்படும். வேட்புமனு குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. வேட்புமனு குழுக்களின் தீர்மானங்களுக்கு மத்திய செயற்குழுவின் அங்கீகாரம் பெறப்படும். இதுவே நடைமுறை. மிகவூம் தௌpவாக இந்த நிலைமையின்கீழ் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வேட்புமனு வழங்குவதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை நான் அனைவருக்கும் கூறினேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களான தினேஷ் குணவர்தனஇ வாசுதேவ நானாயக்காரஇ விமல் வீரவங்சஇ திஸ்ஸ வித்தாரணஇ டிய+ குணசேகர ஆகியோரது கட்சிகள்இ மஹஜன கட்சிஇ பொடி அப்புஹாமி அவர்களது கட்சி ஆகிய அனைத்தினதும் தலைவர்கள் இந்த மண்டபத்தில் என்ன கூறினார்கள் என்பதையூம் அவHகளுக்கு நான் என்ன கூறினேன் என்பதை இங்குள்ள பலகைகளும்இ சுவர்களும் கதைக்க முடியூமானால் அவை கூறியிருக்கும். மஹிந்த ராஜபக்ஸ அவர்களை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ தலைமை வேட்பாளராக நிறுத்தவோ முடியாது என நான் அந்த அனைத்து கட்சிகளினதும் தலைவர்களிடம் தௌpவாக கூறினேன். அவர்கள் மிகவூம் மோசமான முறையில் திட்டித் தீர்த்துவிட்டே இங்கிருந்து சென்றார்கள்.

இதே நிலைமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயூம் காணப்பட்டது. கூட்டமைப்பு தொடர்பிலேயே நான் கூறியிருந்தேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த நிலைமையின்கீழ் என்னால் இரண்டு விடயங்களை மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது.

ஒன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையூம் கூட்டமைப்பையூம் முற்றாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்துவிட்டு நான் வெளியேறுவது. நான் விலகினால் ஒரு நொடியில் மஹிந்த ராஜபக்ஷவை கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் தலைவராக அவர்கள் நியமித்திருப்பார்கள்.

என்னிடம் ஜனவரி 16 ஆம் திகதியே தலைவர் பதவி ஒப்படைக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் கடந்ததும் அநியாயம் தவறிழைத்துவிட்டேன் என அவர் வருந்தத் தொடங்கினார் என்பதை நான் அறிவேன். கட்சி தலைமைத்துவத்தை கையளித்ததை எண்ணி வருந்தத்தொடங்கினார். நான் முற்றாக கட்சியில் இருந்து விலகியிருந்தால் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவூம் கூட்டமைப்பின் தலைவராகவூம் தேர்தலில் களமிறங்கிருப்பார். அதுமாத்திரமல்ல வேட்பாளர்கள் பட்டியலை நூறு வீதம் அவரின் விருப்பத்திற்கேற்ப மாற்றியிருப்பார். அதுமாத்திரமல்லாது என்னோடு நெருக்கமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு  வேட்புமனுவில் இருந்து முற்றாக நீக்கப்படுவதற்கும் வாய்ப்பிருந்தது. அவர்கள் அனைவரையூம் விரட்டியிருப்பார். இந்த பிளவூ ஏற்பட்டிருந்தபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டமைப்பில் இருந்து விலகுவது மாத்திரமே எனக்கிருந்த ஒரே வழிமுறையாகும். அவ்வாறு நடந்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேறு விதமாக வந்திருப்பார் என்பதை நான் அறிவேன்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றும் செல்வாக்குள்ளவர் என நான் கூறவில்லை. ஜனவரி 8 ஆம் திகதி தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தோல்வியடைவார் என்பதையே காண்கின்றேன். எனினும் கூட்டமைப்பின் தலைவராக வந்திருந்தால் இதனை விட ஓரளவூ வலுவானவராகவே வந்திருப்பார். பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என கூறியதும் அவர்கள் அனைத்தையூம் திட்டமிட்டிருந்தார்கள். தனித்து போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல்களை தயாரித்திருந்தார்கள். தேர்தல் விஞ்ஞாபன குழுக்களை நியமித்து அனைத்து நடவடிக்கைகளையூம் பூர்த்தி செய்திருந்தார்கள். அவர்கள் வேறொரு கட்சியில் போட்டியிடவிருந்தனர்.

கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் வேறொரு கட்சியில் பாராளுமன்றத்திற்கு வருவார்கள் அதனை தடுக்க முடியாது.

அப்படியாயின் இங்கு கேட்கப்படுகின்ற மற்றைய கேள்வி என்னவென்றால் ஏன் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டது. எதிர்த்திருக்கலாம் அல்லவா என்கிறார்கள். என்னிடம் கேட்கின்றனர். குற்றம் சுமத்துகின்றனர். இங்கு நான் ஒரு விடயத்தை கூற வேண்டும். நான் மிகஇலகுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவை உடைத்துக்கொண்டு நாட்டை சுற்றி சென்றிருக்கலாம். ஆனால் அது ஜனாதிபதி ஒருவருக்கு பொருந்தாது. கட்சியின் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு நாட்டை சுற்றிச் செல்வது பொருந்தாது.  அடுத்த விடயம் யாதெனில் முக்கியமாக இந்த நாட்டின் தேர்தல் வரலாற்றை கவனத்திற்கொண்டால் ஒவ்வொரு அரசாங்கங்கள் மற்றும் ஒவ்வொரு காலங்களை எடுத்துக்கொண்டால் இரட்டைக் கட்சி முறைமை காணப்படுவதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றௌம்.

இந்த இரண்டு கட்சிகளுமே எப்போதும் ஆட்சி செய்கின்றன. ஏனைய கட்சிகள் சிலவேளை நேரடியாக தொடர்புபடுகின்றன. இல்லாவிடின் மறைமுகமாக வருகின்றன. மத்தியஸ்த நிலை வகிக்கின்றன. எவ்வாறாயினும் 1956 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியூம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியூமே நாட்டை நிருவகித்து வருகின்றன. இந்த இரட்டைக் கட்சி முறையின்கீழ் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று பிளவூபட்டு வலுவிழந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாட்டின் சுதந்திரமும் ஜனநாயகமும் நெருக்கடியை சந்தித்தது. எதிர்காலம் குறித்து எதிர்வூகூறல்களை விடுப்பதற்கு நான் வான சாஸ்திரவியலாளர் அல்ல. ஜோதிடரும் அல்ல

மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் மாத்திரமே  தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரே ஜனாதிபதி. ஏனைய ஜனாதிபதிகள் மரியாதையை தக்கவைத்துக்கொண்டு இரண்டு தவணை பதவிக் காலம் நிறைவூபெற்றதும் வீடு திரும்பினர். அவர் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையில் தோல்வியடைந்த முதலாவது ஜனாதிபதி என்ற சாதனையை நிலைநாட்டியூள்ளார்.

நாடொன்றின்இ நிறுவனமொன்றின் ஒருவரை எடுத்துக்கொண்டால் வரலாற்று தகவலை அடிப்படையாக கொண்டே எதிர்காலம் குறித்து ஆரூடம் கூறமுடியூம். குறிப்பாக நாடொன்றின் வரலாற்றுடனேயே அந்த நாட்டின் நாகரீகம். அந்த நாட்டின் கலாசாரம்இ அந்த நாடு முன்னேற்றம் கண்டவிதம் ஆகிய அனைத்தும் தங்கியூள்ளது. அதேபோன்று அண்மைக்கால வரலாற்றை எடுத்து நோக்கும்போது இந்த நாட்டின் அரசியலில் கடந்த ஐந்து ஆறு தசாப்தங்களாக இடம்பெற்ற சம்பவங்களையே நான் கூறினேன். ஆகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைத்துக்கொண்டு செல்ல வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. கட்சியினதும் கூட்டமைப்பினதும் அனைத்து தலைவர்களும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வேட்புமனுவை வழங்குமாறு கூறினர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் 99 வீதமானவர்கள் வேட்புமனுவை வழங்குமாறு கூறினர். இங்கு நான் என்ன செய்ய முடியூம். நான் செய்யக்கூடிய ஒரே விடயம் என்னவென்றால் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறுவது மாத்திரமே. இல்லாவிடின் நான் ஏற்கனவே கூறியதைப் போன்று விலகியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்ன விளைவூ ஏற்பட்டிருக்கும் என்பதையூம் கூறினேன். தௌpவாக எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. எனது எதிர்ப்பு அவ்வாறே உள்ளது. அவர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். கட்சியை பிளவூபடுத்தாமல் பெரும்பான்மையினரின் விருப்பத்தைக் கொண்டு தீர்மானிக்குமாறு கூறினேன். நான் அந்த தீர்மானத்திற்கு இணங்கவில்லை.

ஆகவே இந்த அனைத்து விடயங்களுடன் என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கு நான் ஒரு விடயத்தை கூற வேண்டும். நான் ஏற்கனவே கூறியதைப் போன்று 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒருவரை பிரதமராக நியமித்து ஆறு மாதங்களாக அரசாங்கத்தை முன்னெடுத்தோம். நல்லாசிக்கான கதவூகளை திறந்த விதம் தொடர்பில் கூறியிருந்தேன். அதேபோன்று அது தொடர்பில் என் மனதில் எழுந்த திட்டங்களை அவ்வாறே நடைறைக்கு கொண்டுவந்தேன். ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்பது எனக்கு முக்கியமல்லை  என்பதை நான் மிகவூம்தௌpவாக கூற வேண்டும். 225 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஜனவரி 8 ஆம் திகதி கிடைத்த வெற்றியை உறுதி செய்து ஜனவரி 8 ஆம் திகதி செயற்றிட்டத்தை முன்னோக்கி இட்டுச் செல்லும் பாராளுமன்றமே எனக்கு தேவைப்படுகிறது. அதிலேயே எனது நோக்கம் உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவே நான் நடவடிக்கை எடுக்கின்றேன். இதிலிருந்து பின்னோக்கி திரும்பப்போவதில்லை. நான் அனைத்தையூம் தாரைவார்த்த ஒருவராக நவம்பர் 21 ஆம் திகதி வெளியேறினேன். சமுத்திரத்திற்குள் பிள்ளைகள் குடும்பத்தாருடன் பாய்ந்ததைப் போன்ற செயற்பாட்டிலேயே ஈடுபட்டேன். டைடானிக் கப்பலைப் பொன்றே இந்த ஆறுவருடங்களாக அரசாங்கத்தை முன்னெடுத்தேன். டைடானிக் மூழ்கியது. நான் மூழ்குவதற்கு இடமளிக்கவில்லை. நான் மூழ்குவதற்கு இடமளிக்கவில்லை. அரசாங்கம் மூழ்கும் நிலை ஏற்பட்டபோது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை  யொட்டி நான் பாராளுமன்றத்தை கலைத்தேன். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்நோக்கம் என்வென்றால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால்  கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்து அவருக்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு பிரவேசித்து நம்பிக்கையில்லா பிரேரணை மூவம் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அவர்களது அரசாங்கமொன்றை உருவாக்கவே  திட்டமிட்டிருந்தார்கள். நான் அதனை தோற்கடித்தேன். 225 பேரில் 47 பேரை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்து வந்த விதம் குறித்து தெரிவித்திருந்தேன். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்த விடயங்களை நிறைவேற்றிய விதம்இ அரசியலமைப்பை மாற்றிய விதம்இ பிரேரணையை நிறைவேற்றிய விதம்இ அதனூடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கிய விதம் அத்தோடு கட்சியின் நெருக்கடிகளை எதிர்நோக்கிய விதம்  தொடர்பில் தெரிவித்திருந்தேன். ஜனவரி 8 வெற்றியை உறுதிப்படுத்தவே இவை அனைத்தையூம் செய்தேன். மிகவூம் தூய்மையாகவூம் நேர்மையாகவூம் செயற்பட்டேன். அதுவே எனது சங்கற்பம். அதுவே எனது குறிக்கோள். ஆகவே இந்த நிலைமையை மிகவூம் கவனமாக ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர். விமர்சனங்கள் மிகவூம் இலகுவானவை.விமர்சனங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன். அது தொடர்பில் எனக்கு எவ்வித பிரச்சினையூம் இல்லை. சுதந்திரமான நாடொன்றில் ஜனநாயக நாடொன்றில் விமர்சனங்கள் மிகவூம் அவசியமானவை. அதனை நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உறுதிப்படுத்துவேன்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உள்ளடகப்படவிருந்த ஊடகம் தொடர்பான சரத்தை நானே நீக்கினேன். ஆகவே நான் எனது பொறுப்புக்களை இதுவரை நிறைவேற்றியூள்ளேன். எதிர்காலத்திலும் உரிய முறையில் நிறைவேற்றுவேன். எதிர்வரும் தேர்தல் நடவடிக்கையின்போது மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் எனக்கு எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்பதை மிகவூம் தௌpவாக கூறவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த எதிர்ப்பு இன்றும் அவ்வாறே உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி என்ற வகையில் பதவி வகித்தபோது வேறு எவரும்  ஜனாதிபதியாக தெரிவாகும் சந்தர்ப்பத்தை வழங்காது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பான வரையரையை நீக்கினார். அப்படியாயின் அவர் உயிர்வாழும் வரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியூம். அதற்கு எல்லை இல்லை. தற்போதும் என்ன செய்ய முயற்சிக்கின்றார். கட்சியின் பிரதமராவதற்கு தகமையூள்ள ஏனைய மூத்த உறுப்பினர்களுக்கு உள்ள வாய்ப்பை இல்லாதொழித்து அந்த இடத்திற்கு வருவதை நோக்கமாக கொண்டே அவர் செயற்படுகிறார். நான் மிகவூம் தௌpவாக கூற வேண்டும். இந்த தேர்தல் நடவடிக்கையில் நான் மத்தியஸ்த நிலையிலேயே உள்ளேன். ஆகவே எதிர்காலத்தில் சுதந்திரமான ஜனநாயகமான நீதியான தேர்தலொன்றை நாட்டில் நடத்துவதற்கு  தேர்தல்கள் ஆணையாளருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பை வழங்குவேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனவரி 8 ஆம் திகதி கிடைத்த வெற்றியை முன்னோக்கி இட்டுச் சென்று 5 வருடங்களுக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவூள்ளேன். ஐந்து வருடங்களாகும்போது மக்களிடமிருந்து அதற்கான சான்றிதழ் கிடைக்கும். என்னைப்பற்றி கதைப்பவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்இ அவதுறுகள் குற்றப் பத்திரிகைகளை முன்வைத்தாலும் காலப்போக்கில் அவை நீர்த்துப்போகும் என நான் அறிவேன். எனது 49 வருட அரசியல் அனுபவத்துடன் மகிழ்ச்சியாக அதனை எதிர்கொள்வேன். ஜனநாயகத்தின் மலர்கள் மலரும் விதம் ஜனநாயகம் பெருக்கெடுத்தோடும் விதம் அதன் பயனை மக்கள் பெறும் விதம் குறித்து சிந்திப்பதால் இந்த நாட்டில் எந்தவொரு அரச தலைவரும் துற்றப்படாத அளவில் கடந்த சில தினங்களாக நான் துற்றப்படுகின்றமை குறித்து  மகிழ்ச்சிக்கொள்கின்றேன். நான் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை ஜனநாயகத்தை காட்டுச் சுதந்திரமாக கொண்டு அழித்துவிடாது அதனை அனுபவிக்குமாறு மிகவூம் கௌரவமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

SHARE