இதயத்தை பத்திரமா பாத்துக்கோங்க

512
இன்றைய உலகில் மக்களை ஆட்டிப் படைக்கும் நோய்களில் நீரிழிவும், இரத்த அழுத்தமும் முக்கியமான இடத்தை பெறும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் வழக்கம், உடற்பயிற்சி செய்யாதிருத்தல், துரித உணவுகள் என இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம் என்று சொல்லலாம்.

என்றென்றும் சிறப்பான வாழ்க்கைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.

இவற்றில் இருந்து விடுபட சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு அளித்த கொடைகள் தான் பழங்களும், காய்கறிகளும்.

* விளாம்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன, இது வயிற்றுபோக்கையும், வயிற்றுகடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.

வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுக்கும் போது விளாம்பழம் சாப்பிடலாம், அடிக்கடி நெஞ்சுவலி சாப்பிடும் நபர்கள் விளாம்பழத்தை சாப்பிட்டுவர குணமாகும்.

* அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும்.

* மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

* நெஞ்சுவலி வந்தால் பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்.

* குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால் மார்பு வலி நீங்கி தேகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

* ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு மற்றும் சீதாப்பழம் போன்ற பழங்களும் இதயத்திற்கு பலம் கொடுக்கும்.

* ஒரு நெல்லிக்கனியில் நான்கு ஆப்பிளுக்கு சமமான சத்துக்கள் உள்ளன, இதனை ஜாமாகவும், லேகியமாகவும் செய்து சாப்பிடுவது நல்லது.

SHARE