தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது.

374

 

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது.


உலகப் போராட்ட வரலாற்றில் கடல், வான், தரை, தற்கொலைப்படை என்று நான்கு படையணிகளையும் தன் வசம் கொண்டிருந்து
தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு காட்டி கொடுப்புக்களின் மத்தியில் செயலிலந்து போனது. குறிப்பாக
விடுதலைப்புலிகள் பலமான ஒரு இயக்கமாக இருந்த காலகட்டத்தில் அதாவது முப்பது ஆண்டுகளை முன்னோக்கி பாக்கும் பொழுது
ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன் இயக்கங்களும் ஒன்றாக இணைந்து தமிழீழ கோரிக்கையினை முன்வைத்தே
போராட்டத்தை ஆரம்பித்தன. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் சகோதரப் படுகொலையினால் இயக்கங்கள் ஒன்றை ஒன்று
பிரிந்து சென்றன. தங்களது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இவ்
ஆயுதக்குழுக்கள் உள்நுழைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டனர். அது மட்டுமின்றி தமிழீழ
விடுதலைப்புலிகளுடன் இருந்த பொது மக்களுக்கும் தாக்குதல் நடத்தியிருந்தனர். ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப்
கட்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட துரோகிகள் என்று பெயர் சூட்டப்பட்டது. அதே நேரம் 1990ம்
ஆண்டு யாழ்ப்பாணத்தில் சில போர் யுத்திகளைக் காட்டி கொடுத்தார்கள் என்ற பெயரில் முஸ்லீம்கள் 72
மணித்தியாலத்தில் வெளியேற்றப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஏனைய இயக்கமும் அரசாங்கமும்
எதிரியாக மாறியது. விடுதலைப்புலிகள் ஆயுத போராட்டத்தின் வழிமையால் வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்தனர். ஈடு இராட்சியம் நிறுவப்பட்ட தனி ஒரு அரசாங்கமாக இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின்
வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு தாக்கும் உலக நாடுகள். இலங்கையில் தனி இராட்சியம் நிறுவப்பட்டால் அது உலக
நாடுகளுக்கும் ஆபத்தான ஒன்றாக மாறிவரும் என்ற காரணத்தால் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் விடுதலைப்புலிகள்
இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தினர். அதற்கு உடந்தையாக இருந்து மறைந்த வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறிய ஒர் ஒரு வாரத்திலே
அவரின் கதை முடிந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா
அரசானது உலகமெங்கும் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களுடன் விடுதலைப்புலிகள் இணைந்து 34 நாடுகளையும் இணைத்து தடைசெய்தது.
1999.09 மாதம் தடைசெய்தது. (தற்போது இருக்கக்கூடிய பயங்கரவாத நாடுகளின் எண்ணிக்கை 58 ஆகும்) அதன் பிறகு சீனா,
இந்தியா, பாகிஸ்தான் 03 நாடுகளிலும் மும்முரமாக இணைந்து மாவிலாற்றில் தொடங்கிய போராட்டம்
முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தவர் ஒரு பகுதியினரும்,
சரணடையாத ஒரு பகுதியனர் என்று இந்த இயக்கத்தின் நிலை மாற்றம் பெற்றது. ஒரு சில போராளிகள் வெளிநாடுகளில்
அரசியல் தஞ்சமடைந்தனர். இன்னும் சில போராளிகள் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் பலர் அரசியல் கட்சிகளை நடாத்தி வருகின்றனர். கருணா, பிள்ளையான் என்று குழுக்கலாக இயங்கி வருகின்றனர்.
அரசாங்கம் தமிழ் மக்களின் ஈழப்போராட்டத்தை வெற்றி கொண்டு விட்டதென்ரே கூறவேண்டும். அதற்காக சமாதானப்
பேச்சுவார்த்தை என்று 35 வருடத்தை இழுத்தடித்து ஏமாற்றி விட்டார்கள். தற்பொழுதும் இவ் ஆயுதக் கட்சிகள் மீண்டும்
சரியான தலைமையில் ஒன்றினைவார்களாக இருந்தால் இருக்கக்கூடிய அரசாங்கம் ஆடிப்போகும். அரசியலில் பெரியதொரு
மாற்றம் ஏற்படுத்தப்படும். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்பது மிக விரைவில் கிடைக்கும். சர்வதேசத்தில் பாரிய
மாற்றங்கள் உருவாக்கப்படும். தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதப்பலம் மட்டுமின்றி அரசியல் பலமும் இருக்கவேண்டும்.
அப்பொழுது தான் நாம் பேரம் பேசும் சக்திகலாக ஒரு தீர்வை பெற்றுக் கொள்பவராக மாற்றம் பெற முடியும்.
அல்லது போனால் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்பது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. ரெலோ, புளொட்,
ஈபிஆர்எல்எப், ஈபிடிபி என்று பல இயக்கங்கள் தமது அரசியல் பலத்தை நிறுபித்து பாராளுமன்றத்தில் தமக்கான ஒரு
இடத்தை பெற்றுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே மக்கள்
மத்தியில் ஆதரவு உள்ளது. அதனை மக்கள் மத்தியில் சென்று தெளிவான தெளிவு படுத்தி ஒருங்கினைப்பு செய்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஒருங்கிணைப்பை மேற்கொள்ள தேசியத் தலைவர் பிரபாகரன் அல்லது வேறு
யாராவது தலைமைகளும் உருவாக்க சர்வதேச நாடுகள் தயாராக உள்ளது. ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கம் வகித்த
ஒவ்வொருவரும் தமது சுயநலத்தைத் துறந்து மாபெரும் அரசியல் சக்தியாக திகழவேண்டும். நாட்டை கூறு போடுகின்றோம்
என்று சிங்களவர் அடிக்கடி கூறிக்கொள்வார்கள் அவ்விடையத்தை நாம் பொருட்படுத்த வேண்டிய தேவை நமக்கில்லை.
எமது தேசியம் சுயநிர்ணய உரிமை வென்றெடுக்கப்பட வேண்டும். என்ற குறிக்கோலோடு போராளிகளும்
செயற்படவேண்டும். தாமதிக்க தாமதிக்க தமிழ் மக்களின் பிரச்சனையில் அன்நிய சக்திகள் தலையிட்டு இந்த நாட்டை
பிளவுப்படுத்த எத்தனிக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நலையில் தமிழ் மக்கள் சற்று சிந்திக்க வேண்டும். அரசாங்கமே
எமது போராட்டத்தை சீர்குழைத்தது என்பதை உணர வேண்டும். அதற்காகவே நாம் மீண்டும் ஒன்று படவேண்டும். அதற்காக எத்தனை
தடைகள் வந்தாலும் எமது உரிமைக்காக போராட முன்வரவேண்டும்.
விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் நடந்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் முனைப்போடு செயற்படுகின்றது.

பிரபாகரனின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே, நாடுகடந்த தமிழீழ அரசிற்கான அங்கீகாரம்

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டமானது மூன்று தசாப்த காலங்கள் நடைபெற்றுவந்தது என்பதை யாவரும் அறிந்ததே. இதில் ஆயுதக்குழுக்களின் தலையீடுகளுடன் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டபோதிலும் ஆயுதப்போராட்டமானது பின்னடைவைச் சந்தித்தது. ஹிட்லர் அவர்களால் இஸ்ரேல் மக்கள் சிதறடிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. அவர்களை இனப்படுகொலை செய்தது என்பது மற்றைய வரலாறு. சிதறடிக்கப்பட்ட மக்கள் இணைந்ததன் பின்னரே இஸ்ரேல் என்கிற நாடு அங்கீகாரம் பெற்றது. அதுபோன்றே இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிதறடிக்கப்பட்டு 185 நாடுகளில் பரவலாக வாழ்கின்றனர். இதில் குறிப்பாக பிரான்ஸ், கனடா, சுவிஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றார்கள். நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவராக இருக்கின்ற உருத்திரகுமார் தமிழீழ விடுதலைப்புலிகளது சர்வதேச செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அக்காலகட்டத்தின்போது நாடுகடந்த தமி ழீழ அரசு உட்பட 450 அமைப்புக்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டது. அவ் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பெயர் விபரங்களும் தடைசெய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இன்னமும் இத்தடை நீக்கப்படவில்லை. இருந்தபோதிலும் கடந்தவாரம் நாடுகடந்த தமிழீழ அரசு ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் நாடாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இவ்விடயம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இவ்வரசாங்கத்தைப் பொறுத்தவரை இனப்படுகொலை என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அத னையே வெளியுறவுத்துறை அமைச் சர் மங்கள சமரவீர அவர்களும் தெரிவித்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவை இனப்படுகொலையாளி என சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு இங்கிருக்கக்கூடிய பேரினவாத அமைப்புக்களோ, பௌத்த துறவி களோ அனுமதிக்கப்போவதில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு (Provisional Transitional Government of Tamil Eelam) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும், வெளிநாடுகளிலும் பரவிவாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளி யிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.

பன்னாட்டு அமைப்பாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, நோர்வே, ஐக்கிய இராச்சியம் உட்படப் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக விசுவநாதன் உருத்திரகுமாரன் உள்ளார். இவ்வமைப்பின் அங்கத்தவர்களைத் தெரிவதற்காக இலங்கை தவிர்த்து வெளிநாடுகளில் வதி யும் இலங்கைத் தமிழரிடையே மே 2010இல் தேர்தல்கள் இடம்பெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்காக வி.உருத்திரகுமாரன் தலைமையில் பின்வரும் விடயங்களைக் கருத்திற்கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று 2009 ஜூன் 16 அமைக்கப்பட்டது.

1976இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு-கிழக்கு தமிழர் தாயக நிலம், ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுரு தியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பது.

2001ஆம் ஆண்டு, 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதிசெய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

சிங்களத் தேசத்துடனான பேச்சு வார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

உலகு அனைத்தும் பரவிவாழும் ஈழத் தமி ழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த்தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசி யல் யாப்பினை வடிவமைத்தலும் தமி ழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகை யில் பொதுவாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக்குழு ஒன்றினையும் தெரிவுசெய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

உலகெங்கும் பரவிவாழும் ஈழத் தமி ழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறை களை இனம்காணுதல்.

வடக்கு-கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளுடன் தற்போதும் நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேச ரீதியாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் போராட்ட உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் தேசியத் தலை வர் பிரபாகரனுடைய நேரடித் தலை மையில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமி ழீழ அரசு அதனுடைய செயற்பாடுகளை தற்போது விரிவுபடுத்தி வருகிறது. இதன் காரணமாக இலங்கை அரசு தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் இருந்து விலக்கிக்கொள்ளுமா? என்ற கேள்வியும் எழுகின்றது.

சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு இலங்கையில் நடைபெறும் பேச்சுக்களிலும் கலந்துகொள்ளுமா? இதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது. பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன் அவர்கள் இந்த நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரித்து அவர்களையும் அரசியல் நீரோட்டத்திற்குள் இணைத்;துக்கொள்வாரா? தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டது என்பது உண்மை. இன்றைய காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டளைகளை ஏற்று த.தே.கூட்டமைப்பு செயற்படுவார்களா? இவ்வாறான நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் என்பது அரசிற்கு பெரும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் எனலாம். எவ்வாறாகவிருப்பினும் நாடுகடந்த தமிழீழ அரசினால் தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் அது வரலாற்றில் இஸ்ரேல் நாடு உருவானதற்கு ஒப்பானதொரு செயலாக தமிழ் மக்களுக்கு அமையப்பெறும். ஆகவே அடுத்தகட்ட நகர்வாக தமிழ் மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசின் கரங்களைப் பலப்படுத்தவேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனேயே தமது பேச்சுக்களை முடித்துக் கொள்வதற்கு விரும்புகின்றது. இனப்படு கொலையினை மூடிமறைப்பதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பதவி களை வழங்கியுள்ளது. இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றதா? என்பதை ஆராய பல்வேறு அமைப்புக்கள் தமது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. அக்காலத்தில் இம்முன்னெடுப்புக்களை மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. காணாமற்போனோர் தொடர்பான பரணகமவினது அறிக்கையினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறப்பட்டபோதிலும் அதனை சீரான நடவடிக்கையாக யாரும் கருதவில்லை. காணாமற்போனோர் ஆணைக்குழுக்கள் என வடகிழக்குப் பகுதிகளில் பிரதேச செயலகங்களின் ஊடாக விசார ணைகள் இடம்பெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டு காணாமற்போன தமது உறவுகளுக்காக சாட்சியம் வழங்கியிருந்தனர். எனினும் அது முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை நாடுகடந்த தமிழீழ அரசு நிரூபித்துக்காட்டும் பட்சத்தில் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு நாட்டினது உதவிகளையும் இலங்கையரசு பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவா கும் எனலாம். அரசியல் செயற்பாடாக நாடுகடந்த தமிழீழ அரசு எதிர்வரும் தேர்தல் களத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுமா?. நாடுகடந்த தமிழீழ அரசு தமக்கான அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்கிற அச்சமும் அரசிற்கு இருக்கின்றது.

சர்வதேச ரீதியாக சிதறடிக்கப்பட்ட இஸ்ரேல் என்கிற நாடு தனது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டதுடன் தமது படைவீரர்களை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக வைத்தும் உள்ளது. இப்படைவீரர்களது சிறப்புத் தாக்குதலே இதற்கான காரணமாகும். அங்கிருக்கும் ஒரு இராணுவ வீரர் இங்கிருக்கும் 100இராணுவ படைவீரர்களுக்கு சமன் எனக்கூறுவர். அவ்வாறு அவர்களது படையினர் பலமாக உள்ளனர். அதுபோன்று நாடுகடந்த தமிழீழ அரசு இலங்கையில் ஒன்றுகூடுமாகவிருந்தால் உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியிலும் மேலோங்கி, சர்வதேச நாடுகளுக்கு சவால்விடும் ஒரு அமைப்பாக மாற்றம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. நாடுகடந்த தமிழீழ அரசில் பாரிய முதலீட்டாளர்கள், புத்திஜீவிகள் உள்ளனர். பயங்கரவாத அமைப்புக்கள் என இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டவை இலங்கையில் கால்பதிக்குமாகவிருந்தால் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் அபிவிருத்தியானது பாரிய வளர்ச்சி நோக்கிப் பயணிக்கும் அத்துடன் இலங்கையரசு ஆட்டங்காண நேரிடும்.

படைபலத்தினை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன், நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களது கலை கலாசாரங்களை பாதுகாத்து தமிழ் மக்களின் நிலையான இருப்பை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. ஆகவே இதற்கான முன்னெடுப்புக்களை தமிழ் மக்களாகிய நாம் மேற்கொள்கின்றபோது நிச்சயம் தமிழ் மக்களுக்கென ஒரு தனியரசு நிறுவப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

 – இரணியன் –

SHARE