மன்னார் மனித புதைகுழி விவகாரத்தின் பின்னணியில் 3 ஸ்ரார் இயக்கமா?

291

மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தான் மன்னார் புதைகுழி விவகாரம். இதுவரையில் இருநூற்றி ஐம்பது ஆறு (256) எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக இலங்கையில் இருக்கக்கூடிய சி.ஐ.டி (Civil Investigation Department)                                   உத்தியோகபூர்வமாக யாரால் இக் கொலைகள் நடத்தப்பட்டது என்று கூற முன்வரவில்லை. இவர்கள் இருக்கின்றார்களா? என்று சந்தேகிக்கப்படுகின்றது. உலகிலே ஒரு எழும்புத் துண்டை வைத்து தமது உளவுப் பிரிவுகளை மேற்கொள்கின்ற புலனாய்வு கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், 52 மாநிலங்களிலும் 52 புலனாய்வு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கொலைச் சம்பவத்தை 24 மணித்தியாலத்தில் ஸ்கொட்லாந்து பொலிஸ் கண்டறியக்கூடிய திறமையுள்ளவர்கள். அதை விடவும் ஒரு கொலையுடன் தொடர்புடையவர் தலைமறைவாக இருப்பின் அவரை யும் கைது செய்யக்கூடியது சர்வதேசப் பொலிஸ். ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் தனது புலனாய்வு கட்டமைப்பை சிறந்த ஒரு முறையில் வழி நடத்திச் செல்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புத் தான் இந்தியாவின் ரோ.

இத்தனை புலனாய்வுக் கட்டமைப்புக்கள் இருந்தும் மன்னார் புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னமும் கண்டறியப்படவில்லை. 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலப் பகுதி யில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் போன்ற கட்சிகள் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. புளொட் அமைப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் காடுகளுக்குள் தனியாக நின்று இராணுவத்துடனும், விடுத லைப் புலிகளுடனும் போரிட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் ஒரு அணி விடுதலைப் புலிகளுடன் போரிட மற்றைய அணி இராணுவத்துடன் போரிட்டது. இக்காலகட்டத்தில் மன் னாரில் இருந்து தான் பலர் இந்தியாவிற்கு படகுகள் மூலம் தப்பிச் சென்றனர். அக்கால கட்டத்தில் இந்தியாவிற்குச் சென்றவர்கள் இன்னமும் இலங்கைக்கு வரவில்லை. ஒரு சிலர் மட்டுமே இலங்கைக்கு வந்திருக் கின்றார்கள். பெரும்பாலும் இக்கொலைகள் தொன்னூறு காலப் பகுதிகளில் இடம் பெற்றதாகவே கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கொலைகளை ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையிலான மண்டையன் குழு பலரைச் சுட்டுத் தள்ளியது. அதற்கான ஆதாரங்களும் பல இருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் படாத காரணத்தினால் அவ் ஆயுதக்கட்சிகளின் தலைவர்கள் தற்பொழு தும் சுதந்திரமாக நடமாடு கின்றார்கள். இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்திலும் இவ் இயக்கங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னரும் பல தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பேரூந்துகளில் மன்னார் வந்து இறங்கிய மக்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்காலகட்டத்தில் அராஜ கங்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய மக்களில் ஒரு சிலருடைய கருத்து. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபொழுது 3 ஸ்ரார் என்கின்ற இயக்கத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரண்டு இயக்கங்களும் சேர்ந்து இருந்தது. இந்த 3 ஸ்ரார் இயக்கமானது கொலை கொள்ளைகளில் அக்கால கட்டத்தில் ஈடுபட்டது. பின்னர் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளி யேறியதை அடுத்து தமி ழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ் இயக்கங்களுக்கும் போர் உக்கிரமடைந்தது. பலர் இலங்கையைவிட்டு இந்தியாவிற்கு தப்பி ஓடினர். இலங்கை அரசானது விடுதலைப் புலிகளுக்கு வாக்களித்ததன் பிரகாரம் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கப்போனதன் விளைவாக, பிரேமதாசாவின் பின்புலத்தில் ராஜீவ்காந்தி அவர்கள் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்படுகின்றார். இதனோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசிற்கும் நிரந்தரமான பகை உருவாகின்றது. இதனை சாதகமாகக் கொண்ட ஏனைய இயக்கங்கள் இலங்கைக்கு வந்து இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் தோல்வி கண்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் 2000ம் ஆண்டு காலத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பெறும் நோக்கில் செயற்படத் தொடங்கினர். தற்பொழுது ரெலோவும், புளொட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சிகளாக இருக்க ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி மட்டும் பிரிந்து செயற்பட்டு வருகின்றது. இவை கடந்த கால வரலாறுகள்.

3 ஸ்ராராக செயற்பட்ட இவ் இயக்கமே இக் கொலை களைச் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றது. இருந்தும் இத்தகவல்கள் இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை. தற்பொழுது இப்பிரச் சினையானது மன்னார் நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இலங்கை இராணுவத்தினரால் கொல்லப் பட்டார்கள் என்ற சந்தேகமும் இருக்கின்றது. விசாரணைகளை துரிதகதியில் மேற்கொள்கின்ற பொழுது தான் இங்கு என்ன நடந்தது என்று அறியமுடியும். மன்னார் புதைகுழி அகழ்வு விவகாரம் தொடர்பில் இதுவரை காலமும் நடைபெற்றது என்ன? என பார்க்கின்ற பொழுது, மன்னார் மனிதப் புதை குழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி யின் அகழ்வு பணிகள் கடந்த புதன் கிழமை (5) 111ஆவது நாளாக முன்னெடுக்கப் பட்டபோது மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வை யில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றது. இதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழியோடி

SHARE