ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின்போதுசர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும்.போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள்பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிடமுன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக்கொடியேந்தி சரணடையச் சொன்னதின்பேரில் அதை ஏற்று முன்னேசென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலகநாடுகள் அறிந்துதான் உள்ளன. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்தஅப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்துசமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப்படுகொலையாகும். அப்படி கொல்லப்பட்டவர்கள் ஒருவர், இருவர்அல்ல. நூறு பேர் இருநூறு பேர் கூட அல்ல. ஆயிரக்கணக்கானமக்கள் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் முடிவுக்குவந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17ஆம் தேதிக்குப் பிறகும்கூடமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள்அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. ஆங்காங்கே தப்பியோடிப்பதுங்கியிருந்த ஒன்றிரண்டு பேர்களையும்கூட விட்டுவைக்காமல்தேடித்தேடி இலங்கை ராணுவம் படுகொலை செய்திருக்கிறது.
போரின் இறுதியில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ்இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும்,கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள்சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின.அப்போது அவையெல்லாம் பொய்யான காட்சிகள் என்று சிங்களஅரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளைஅறிவியல் பூர்வமாக சோதனை செய்த ஐ.நா. சபை அதுஉண்மையான காட்சிதான் என்பதை இப்போது உறுதி செய்துள்ளது.ஐ.நா. சபையில் உள்ள சட்டவிரோதமான படுகொலைகள் குறித்துஆராயும் பிரிவுக்கு பொறுப்பாயுள்ள பிலிப் ஆல்ஸ்டன் என்பவர்இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் 18ஆம் தேதிஇலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்குக் கடிதம் ஒன்றையும்அவர் எழுதியிருக்கிறார். அதில், விடுதலைப்புலிகளின் தலைவர்கள்நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அவர்களதுகுடும்பத்தினரோடு கடந்த மே 17ஆம் தேதி இரவு இலங்கைராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது பற்றி உண்மைவிவரங்களை தெரிவிக்குமாறு அவர் கூறியிருக்கின்றார். ‘‘இலங்கைஅரசு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நாளுக்குமுன்தினமான 2009, மே 17ஆம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ்ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் வெள்ளமுள்ளிவாய்க்கால்பகுதிக்கு வடக்குப் புறமாக ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டனர்.தூதர்களின் மூலமாக அவர்கள் உங்கள் அரசைத் தொடர்பு கொண்டுஇலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகதெரிவித்துள்ளனர். ராணுவத்துறை செயலாளரும், உங்கள் அரசுக்குஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும்அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்தசமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58ஆவதுபடைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்துதொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடைய வந்தபுலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில்கூறப்பட்டுள்ளது. மே பதினெட்டாம் தேதி அதிகாலையில் நடேசன்,புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளைத் துணிகளைப்பிடித்தபடி ராணுவத்தை நோக்கி சரணடைய வந்தபோது அவர்களை இலங்கை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டு அவர்களைப்படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களதுகுடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்’’ என்றுஅக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிலிப் ஆல்ஸ்டன், இந்தவிவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம்நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்தபத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதிபடுத்தியுள்ளனர் என்றும் ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
1949ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில்இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3போர்க்காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றிகூறியுள்ளது. ‘‘போரில் நேரடியாக பங்கெடுக்காதவர்கள், போரில்ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பதினர், ஆயுதங்களைக் கைவிட்டுசரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோபாதிக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர்மனிதாபமான முறையில் நடத்தப்பட வேண்டும்’’ என்றுவலியுறுத்தியுள்ளது. அதுபோலவே சர்வதேச மனித உரிமைசட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக்கூடாதுஎன்பதை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் இலங்கையில்நடைபெற்றுள்ள இனப்படுகொலை என்பது சர்வதேசசட்டங்களுக்கும், நியதிகளுக்கும் மாறானதாக நடத்தப்பட்டுள்ளது.எனவே இதைப்பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் எனபிலிப் ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தின்இறுதியில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி உள்ளார். ”போரில்நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதைநீங்கள் மறுப்பீர்களேயானால் அப்படி இனப்படுகொலை எதுவும்நடக்கவில்லை என்று ஆதாரங்களோடு உங்கள் அரசு நிரூபிக்க முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரதுகுடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம்என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்துநாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பரிசீலித்து அதற்கு நீங்கள்பதில் கூறவேண்டும்” என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில்குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக ஐ.நா.சபையே விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஐ.நா. சபையைச் சேர்ந்தஅதிகாரிகளே இத்தகைய இனப்படுகொலைகளுக்கு காரணமாகஇருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமை காரியதரிசியாக இருக்கும்விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒருசமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகிப் பேசிவந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்ததலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேசமுற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில்விஜய் நம்பியாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர். எனவே, அவர்மீது முதலில் ஐ.நா. சபை விசாரணைநடத்தட்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டநிலையிலும் அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது நின்றபாடில்லை. ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகஆசிரியர்கள்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போதும்கூடசிங்கள ராணுவம் இப்படி சித்திரவதை செய்கிறது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி டெக் என்னும் நிறுவனத்தின்இயக்குனராயிருந்த கதிர்வேலு தயாபர ராஜா என்பவர் எப்படிகொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த அறிக்கைவெளியிட்டுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராகஇருந்த பாலகுமார் தனது மகனோடு சரணடைந்து ராணுவத்தினால்கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணுவம்ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் அந்தஅறிக்கை தயாபர ராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக்கூறியுள்ளது.
வன்னி டெக் என்ற அமைப்பு சுயேட்சையாக நடத்தப்பட்டுவந்த ஒரு அமைப்பாகும். சில காலத்துக்குப்பிறகு புலிகள் அந்தஅமைப்பை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்குதேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றைப் புலிகள் வாங்கிவந்தனர். இன்னும்கூட அந்த நிறுவனம் சுதந்திரமாகவே செயல்பட்டுவந்தது. அதன் இயக்குனராக இருந்த தயாபர ராஜா தனக்கென்றுசம்பளம் எதையும் வாங்கிக்கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில்பணியாற்றி வந்த உதயகலா என்பவரும் தயாபர ராஜாவும்திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த திருமணம்புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனதுபதவியை விட்டு விலகி விட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்புபகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனதுபதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபர ராஜாஇலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத்துறையின்விசாரணைக்கென்று அவர் அழைத்து செல்லப்பட்டார்.கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒருமுகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபரராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர்.போர் முடிந்து பல மாதங்கள் வரை அவர்கள் சித்ரவதைசெய்யப்படுவதை நிற்கவே இல்லை. இடையிடையே தயாபரராஜாவின் மனைவியான உதயகலாவின் பாட்டி அவர்களை சென்றுசந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டவிவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே கடந்த 2009செப்டம்பர் பதினைந்தாம் தேதி தயாபர ராஜா இறந்து விட்டார்.அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களை புலிகள் தான்கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாக பொய்சொல்லி தப்பித்து விடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டஇன்றைய சூழலில் இலங்கை ராணுவம் பழி போடுவதற்கு யாரும்இல்லை. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபர ராஜா சடலமாககண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள்துளைத்த காயம் இருந்தது. உதயகலா இப்போது விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக்கூட முடியாதநிலை. அந்த அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து எவ்வாறுகொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒருசாட்சியாகும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய புலிகள்இயக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கென்றுபாதுகாப்பாக எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிறதமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் மும்முரத்தில் தீவிரமாகஇருக்கின்றன. அங்கு அதிகாரத்துக்காக போட்டியிடும் இரண்டுகொலைக்காரர்களில் எவருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள்போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்தும், மனித உரிமைமீறல்கள் குறித்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டியதுமிக மிக அவசியமாகும். அந்த கடமை தமிழ்நாட்டு தமிழர்களுக்குஅதிகம் உள்ளது.
இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணைமேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சிலமுன்முயற்சி எடுத்தபோது அதை தடுத்து இலங்கை அரசைகாப்பாற்றியது இந்தியாதான். இன்று மீண்டும் அத்தகைய சூழல்உருவாகியிருக்கிறது. ஐ.நா. சபையின் அதிகாரி பிலிப் ஆல்ஸ்டனின்அறிக்கைக்குப் பிறகு சர்வதேச சூழல் சற்றே மாறியிருக்கிறது. இந்தநிலையை பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தவேண்டும். இலங்கையை ஒரு ‘இனப்படுகொலை செய்த நாடு’என்று அறிவிக்குமாறு ஐ.நா. சபையை இந்திய அரசுவலியுறுத்தினால் நிச்சயமாக குற்றவாளிகள்தண்டிக்கப்படுவார்கள். இலங்கை பிரச்சனையை புலிகளைமட்டுமே மையமாக வைத்த அணுகிக்கொண்டிருந்த இந்திய அரசுஅதே வித அணுகுமுறையை இப்போதும் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். தற்போது இலங்கையின்ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவர்களாகஇருக்கிறார்கள் என்பது முன்பைவிட இப்போது அதிகம் தெளிவாகிஉள்ளது. இந்நிலையிலேனும் இந்தியாவின் பாதுகாப்பைகருதியாவது இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்றவிசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியாவலியுறுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாட்டிலுள்ள அரசியல்கட்சிகள் யாவும் கட்சி பேதம் பாராமல் ஒருமித்து குரல் எழுப்பவேண்டும்.