தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியம்

1085

உயர்தர மாணவர் பெறுபேறு வெளியாகி பல்கலைக்கழக மாணவா்களின்  அவர்களின் சிறிய சந்தோசங்கள் ராக்கிங் ,ஆலய சுற்றுலா ,தைப்பொங்கல் புத்தாடை வாங்கும் அவா உறவினரோடு தமது பெறுபேறு சொல்லி பொருட்களை வாங்கி தமது மாணவப் பருவத்தை கழிப்பது இனமத பேதமின்றி செயற்பாட்டை ஆற்றுவது அனைத்து மாணவரினதும் வழமை யான செயற்பாடே.

இப்படி சந்தோசத்துடன் கடற்கரை யில் பொழுதை போக்கிய 13வருடத் தின் முன் சரியாக இன்றைய தினம் மாணவரை பயங்கர வாதியாக்கி கொலை செய்து நீதியை கூட பெற் றுத்தராத காட்டுமிராண்டி பயங்கர வாத அரசு இலங்கை அரசுதான் என் பதை தமது கோர முகத்தை காட்டிய நாளாகும்.

ஜனவரி 2 – இன்று திருகோணமலை மாணவர் படுகொலை நாளுமாகும்.!!! 2006 சனவரி 2 ஆம் நாள் – இலங்கையின் கிழக்கே திருகோணமலை, கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் கொடூ ரமாக படுகொலை செய்யப்பட்ட நாள்.

உலகில் எத்தகைய இழிவான இராணுவமும் மாணவர்களை கொலை செய்ய துணிவதில்லை. மாணவ சக்தி என்பது மகத்தான சக்தி என அறிந்து மாணவர்க ளில் கை வைக்கவே உலக இராணுவம் அஞ்சும்.

ஆனால் இலங்கையில் இனவாத இலங்கை அரசின் ஏவல் படை அதிலும் பின் நின்றதில்லை. இரக்கமற்று பல்லாயிரம் மாணவர்களை பலி சிங்கள இராணு வத்தின் கொடிய படுகொலைகளில் ஒன்று நிலாவெளியில் நடைபெற்ற இந்த மாணவர் படுகொலை.

2006 சனவரி 2 திங்கட்கிழமை இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல் கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத் தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொலை செய்யப்பட் டுள்ளனா்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்: மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21) யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21) லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21) தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21) சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21) இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரி வித்துள்ளாா்.

தூரத்தில் இருந்து கிரானைட் வீசினார்கள் என்ற அரசபடையின் பொய் குற்றச் சாட்டுக்கள் எத்துணை பொய்யானது என்பதை குழந்தைகளுக்கு கூட புரிந்து கொள்ள முடியும்.

மாணவர்களை மிரட்டி அடக்கி அடித்து விரட்ட முயன்ற காவல்துறையினரை மீறி மாணவர்கள் துணிச்சலோடு தமது நிலத்தில் தாம் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடிய திடலில் விளையாடி கொண்டு இருந்ததால் அடங்க மறுத்த எதிர்ப்பில் கோபமுற்றே கொன்றுள்ளாா்கள்.

நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல் கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரண மென குற்றம் சுமத்தியுள்ளனா்.

இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சி யத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச் சுறுத் தப்பட்டுள்ளாா்.

ஒரு தந்தையாக என்பதை கடந்து சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற ஒரு மருத் துவராக தடைகளை மீறி சாட்சியம் வழங்கியுள்ளார் மருத்துவர் மனோகரன். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்கு மாறு அரசிடம் வலிமையாக கேட்டுக்கொண்டது.

எல்லைகளற்ற செய்தியா ளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப் படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவிய லாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந் தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளாா்.

எனவே இந்த 5 மாணவர்களின் படுகொலைகளின் தொடராக பயங்கரவாத அர சால் அந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலையும் பார்க்கப்பட வேண்டும். இவற்றுக்கு நீதி வேண்டும். மறுக்கப்படும் நீதி அநீதி களை விட கொடியது.

இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெறுவதாக அவ்வப்போது கண் துடைப்புகள் நடந்து வந்த போதிலும் இந்த மாணவர்கள் படுகொலைக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை.

மாணவர்களில் கை வைத்ததால் அனைத்துலக மட்டத்தில் மாணவர்கள் படு கொலை பற்றி எழுந்த சலசலப்பால் விசாரணை நாடகம் 2013 இல் நடத் தப்பட்டது. ‘”இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப் படை யினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 யூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சந்தேக நபர்களை ஆகஸ்த்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திரு கோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.” என நீதியாக நடப்பது போல் விசா ரணை நாடகம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைப்பு செய்தி களாக வெளி வந்தன.

ஆனால் கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திரு கோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மாமனிதர் ரவி ராஜ் கொலை வழக்கு போலவே நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டது இந்த 5 மாணவர்கள் + 1 ஊடகவியலாளர் வழக்குகளிலும்.

இன்று சர்வதேசம் எங்கும் வியாபித்திருக்கும் தமிழர்கள் இந்த செய்திகளை சர்வதேசத்திற்கு எடுத்து செல்லும் பணியை முனைப்போடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களாக மாறி கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களின் உண்மைக்கான விதைப்புக்கு அர்த்தம் சேர்க்க உழைக்க வேண்டும்.

தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!!

முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சக்தியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது.

உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது. 2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என சிங்கள அரசு தப்புக்கணக்கு போட்டது .

பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை. துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக சிங்கள அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின படுகொலையை நிகழ்த்திவிட்டு தெற்கில் சிங்கள அரசும் அதன் படைகளும் கோலாகலமாக வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர அனுதியில்லை. இது கொடிய இன ஒடுக்கு முறையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்??.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும் நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று. அந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும் நெஞ்சம் கனக்கும் தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும்.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த்து. மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர்.

நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது. ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்த்து.

உலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா? மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே!! உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்டாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.

அப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள் குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே. இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்த்து? கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா? மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.

முள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மினவீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.

நாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீர்ர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்த்தைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா?

தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக may 16, 17,18ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா? முள்ளிவாய்க்கால் ஜநா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற போது சர்வதேச சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் லோறன்ஸ் திலகர் பாதுகாக்கும் பொறுப்பு(Responsibility to Protect – R2P) என்ற கோட்பாட்டின் கீழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தும் படி சர்வதேச சமூகத்தை கேட்டார். ஆனால் போருக்கு எல்லா வகையிலும் உதவிய சர்வதேச சமூகத்தால் அவருடைய கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியவில்லை.

ஒன்றா இரண்டா மூன்று நாளில் 46.000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த்து சிங்களப் பேரினவாதம். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்த்து தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்த்து தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்த்தையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.

உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிக்க் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த சிங்கள படைவீர்ர்களையும் பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.

01. சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்

02. தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்

03. தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த

வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்

இதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாகவேண்டியுள்ளது.

எனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம். சர்வதேசம் எங்கும் தமிழர்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் . சர்வதிகாரம் நீண்டநாள் நின்று பிடிப்பதில்லை என்பது உலக வரலாறு.

ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தொடர்பான சில முக்கிய கடமைகள் இருக்கின்றன.

1. முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்பட்டு ஆவணப் படுத்தப் படவேண்டும். நீதி விசாரணைக்கான பிரசார முயற்சிகளை எடுக்க வேண்டும்.

2. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோர், காணமற் போனோரின் பெயர், முகவரி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஒரு ஈழத் தமிழனாவது பெயர் முகவரி இல்லாமல் சாகக் கூடாது.

3. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தோரின் சடலங்களுக்கு என்ன நடந்தது என்று கண்டறியப்பட வேண்டும்.

தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும்.

உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா? முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா?

சிங்களதேசத்திற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா ?

உலகத்தமிழினமே விழித்திரு… வெறித்திரு… தெளிந்திரு.. ஈழவிடுதலையின் மிள்ச்சிக்காக நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.

SHARE