இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக ரோன் மல்கா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
காஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.
இந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனை இன்றி உதவ இஸ்ரேல் தயாராக உள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.