பசுக்களை லொறியொன்றில் அடைத்து கொண்டு சென்றவர்கள் கைது

435

இறைச்சிக்காக பால் கறக்கும் நிலையிலான பசுக்கள் நான்கை லொறியொன்றில் அடைத்து கொண்டு சென்ற இருவரை வெலிமடைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளதுடன் லொறியும்,4 பசுக்களும் மீட்கப்பட்டுள்ளன.Related image

வெலிமடைப் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து குறிப்பிட்ட பசுக்களை ஏற்றிச் சென்ற லொரியை நிறுத்த பொலிசார் சமிக்ஞை காட்டிய போதும் அதனையும் பொருட்படுத்தாமல் லொறி வேகமாக சென்றது. இதன் பின்னர்  லொறியை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று குருதலாவை என்ற இடத்தில் வைத்து  லொறிச் சாரதியையும், மேலுமொருவரையுமாக இருவரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் வெலிமடை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிசார் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணையில் இப்பசுக்கள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE