கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியும்

392

கிரிக்கெட்டை சூதாட்டக்காரர்களிடமிருந்து விடுவித்தால் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரித்தார்.

அமைச்சர் இதனை கடந்த 17 ஆம் திகதி கம்பஹாவில் நடைபெற்ற விழாவொன்றின் முடிவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கூறினார்.

நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலை தற்போதுள்ள நிலைமையில் நடத்த முடியுமாவென ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

கிரிக்கெட் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். சிலர் அண்மையில் நீதிமன்றம் சென்றதைக் கண்டோம். அவர்கள் தெரிவாகதவர்கள் அவர்களுக்குத் தேவை இலங்கையில் கிரிக்கெட்டை மேம்படுத்துவது இல்லை கடந்த சில வருடங்களாக இலங்கையில் கிரிக்கெட் அழிவுப் பாதையில் சென்றுள்ளது. இது சுமதிபால கட்சியினர் எந்நாளும் செய்த ஒன்றாகும். மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். இந்த முடிவை வழங்கியது சாதாரணமானவரல்ல முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரே. இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். நாம் இந்நாட்டின் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நியாயம்கிடைக்குமென்று அதுதான் எமது எதிர்பார்ப்பு ஏனென்றால் தற்போது கிரிக்கெட் மாறிவருகின்றது. வீரர்கள் நன்றாக விளையாடுகின்றார்கள் அவர்களின் மனதை மாற்ற வேண்டும். மேலும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.

கிரிக்கெட் இவ்வளவு தூரம் பாதிப்புற்றுள்ள நிலைமையில் அவர்களுக்கு ஆடை அணிந்து வந்து தேர்தலில் போட்டியிட வெட்கமாக இல்லையா? கடந்த காலங்களில் கிரிக்கெட்டை சூதாட்டமாக மாற்றிவிட்டார்கள். இன்று எமக்கு உலக கிரிக்கெட் கவுன்சிலால் இங்கு ஊழலுக்கு எதிரான (Anticorrupbion) காரியாலயம் ஒன்றை திறக்கின்றார்கள். எமது நாட்டுக்கு என்ன நடக்கின்றது கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை விலக்கும்வரை இந்த கிரிக்கெட்டை சரி செய்ய முடியாது.

SHARE