அட்லி இயக்கத்தில் விஜய்  நடிக்கும் படத்தில் நயன்தாரா இணையவுள்ளார். 

507

அட்லி இயக்கத்தில் விஜய்  நடிக்கும் படத்தில் அடுத்த மாதம் துவக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இணையவுள்ளார்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் 63வது படத்தில் நடிக்கயிருக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லு படத்துக்கு பின் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் துவங்கி நடக்கிறது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கும் விஜய், சரியான உடற்கட்டு பெற கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது எகிற துவங்கியுள்ளது.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக நயன்தாரா வேறு சில முக்கிய பணிகள் உள்ளதால், தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அட்லி, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்பாடலை படமாக்கி வருவதாக தெரிகிறது. அடுத்த மாதம் 11 முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE