மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் மோதி ஆசிரியர் ஒருவர் படுகாயம்

457

மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் மோதியதில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று  புதன்கிழமை (20) காலை 07.15 மணியளவில் குடத்தனை ஆறாம் கட்டை சந்தியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் அம்பன் அ.மி.த.க. பாடசாலையில் கற்பிக்கும் துன்னாலை, கரவெட்டியைச் சேர்ந்த 44 வயதுடைய திருமதி கனகேஸ்வரன் பாலசுதாஜினி  என்ற ஆசிரியரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது மணல் ஏற்றிய நிலையில் சென்ற உழவு இயந்திரம் ஆசிரியையை மோதி தூக்கி எறிந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த ஆசிரியை  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பாடசாலை நேரத்தில் உழவு இயந்திரங்களை அப்பகுதியில் மணல் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என பலதரப்பட்டவர்களால் உரிய அதிகாரிகளிற்கு கோரிக்கை விடுத்த நிலையில் அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்தாமையே இவ் விபத்துகாகான காரணம் என கூறப்படுகிறது.

SHARE